இந்தியாவில் மின்சார வாகனங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஏதர், ஓலா போன்ற நிறுவனங்களுக்கு போட்டியாக பல நிறுவனங்களும் இந்தியாவில் விற்பனையாகி வருகிறது. 

Continues below advertisement

Okinawa Ridge 100:

இந்திய மின்சார இரு சக்கர வாகன சந்தையில் கால்தடம் பதிக்க ஆர்வம் காட்டி வரும் நிறுவனம் Okinawa. இவர்களின் Okinawa Ridge 100 இ ஸ்கூட்டர் பற்றி கீழே விரிவாக காணலாம்.

மைலேஜ்:

இந்த Okinawa Ridge 100 இ ஸ்கூட்டரில் ஒரே ஒரு வேரியண்ட் மட்டுமே உள்ளது. இதன் விலை ரூபாய் 1 லட்சத்து 22 ஆயிரத்து 351 ஆகும். இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 149 கி.மீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. இதில் அதிகபட்சமாக 50 கி.மீட்டர் வேகத்தில் செல்லலாம்.  இதை சார்ஜ் செய்வதற்கு 5 முதல் 6 மணி நேரம் ஆகிறது. 

Continues below advertisement

இந்த Okinawa Ridge 100 இ ஸ்கூட்டரில் எகோ மற்றும் ஸ்போர்ட் மோட்கள் உள்ளது. பிஎல்டிசி மோட்டார் இதில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இ ஸ்கூட்டரில் 3.12 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரி போர்ட்டபிள் பேட்டரி ஆகும். லித்தியம் அயர்ன் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. ஐபி 65 பேட்டரி ஐபி ரேட்டிங் ஆகும்.

சிறப்புகள்:

இ ஏபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம் உள்ளது. முன்பக்கமும், பின்பக்கமும் ட்ரம் ப்ரேக் பொருத்தப்பட்டுள்ளது. அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டள்ளது. முன்பக்கமும் பின்பக்கமும் 10 இன்ச் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. ட்யூப்லஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது.

ஹைட்ராலிக் டெலிஸ்கோபிக் சஸ்பென்சன் முன்பக்கமும், பின்பக்கம் டபுள் ஷாக்கர் வித் டூயல் டூயூப் டெக்னாலஜி சஸ்பென்சனும் பொருத்தப்பட்டுள்ளது. கிரவுண்ட் கிளியரன்ஸ் 160 மி.மீட்டர் ஆகும். 150 கிலோவரை எடை தாங்கும் திறன் கொண்டது. 3 வருடம் அல்லது 30 ஆயிரம் கிலோமீட்டர் வரை பேட்டரி வாரண்டி அளிக்கப்படுகிறது. மோட்டார் வாரண்டி 3 வருடம் ஆகும்.

வசதிகள்:

டிஜிட்டல் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. ப்ளூடூத் வசதி உள்ளது. ஜிபிஎஸ் நேவிகேஷன் வசதி உள்ளது. ஸ்பீடோமீட்டர் டிஜிட்டலில் உள்ளது. 1 ட்ரிப்மீட்டர் உள்ளது ஸ்டாண்ட் அலார்ம், லோ பேட்டரி இண்டிகேட்டர், ஹசார்ட் வார்னிங் இண்டிகேட்டர் வசதி உள்ளது கால்/எஸ்எம்எஸ் அலர்ட் வசதி உள்ளது. நேரம் பார்க்கும் வசதி உள்ளது. 

செல்ஃப் ஸ்டார்ட் வசதி உள்ளது. ரிவர்ஸ் மோட் வசதி உள்ளது. பார்க்கிங் அசிஸ்ட் வசதி உள்ளது. ஸ்டார்ட்/ஸ்டாப் பட்டன் வசதி உள்ளது. பேட்டரி ஸ்டேட்டஸ், லைவ் சார்ஜிங் ஸ்டேட்டஸ் வசதி உள்ளது. ஹாலோஜன் முகப்பு விளக்குகளே பொருத்தப்பட்டுள்ளது. ப்ரேக்/டெயில் விளக்குகள், சிக்னல் விளக்குகளும் ஹாலோஜன் விளக்குகளே பொருத்தப்பட்டுள்ளது. பில்லியன் சீட் உள்ளது.


Car loan Information:

Calculate Car Loan EMI