மின்சார ஸ்கூட்டர்களுக்கு நிகராக மின்சார பைக்குகளின் விற்பனையும் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இ ஸ்கூட்டர்கள் விற்பனை நன்றாக இருந்தாலும் இளைஞர்களை கவரும் வகையில் இ பைக்குகளை பல நிறுவனங்களும் தயாரித்து வருகின்றனர்.
Odysse Vader:
மின்சார பைக் தயாரிப்பில் முன்னணி இடத்தைப் பிடிக்க ஆர்வம் காட்டி வரும் நிறுவனம் Odysse. இவர்களின் Odysse Vader இ பைக்கின் விலை, தரம், மைலேஜ் குறித்து கீழே விரிவாக காணலாம்.
விலை, மைலேஜ்:
Odysse Vader இ பைக்கின் விலை ரூபாய் 1 லட்சத்து 70 ஆயிரத்து 353. இந்த இ பைக்கை ஒரு முறை சார்ஜ் செய்தால் 125 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. அதிகபட்சமாக இதில் 85 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம். ஒரு முறை சார்ஜ் செய்வதற்கு 4 மணி நேரம் ஆகிறது.
இந்த இ பைக் சாம்பல், பச்சை, கருப்பு, சிவப்பு மற்றும் நீலம் ஆகிய வண்ணங்களில் உள்ளது. 3 மோட்களில் இந்த இ பைக் உள்ளது. பிஎம்எஸ் மோட்டார் டைப் உள்ளது. இந்த இ பைக்கில் 3.7 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. 1 நிரந்தர பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதை சார்ஜ் செய்வதற்கு 4 மணி நேரம் ஆகிறது.
சிறப்புகள்:
இதில் லித்தியம் அயர்ன் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதில் சிபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம் உள்ளது. முன்பக்கமும், பின்பக்கமும் டிஸ்க் ப்ரேக் பொருத்தப்பட்டுள்ளது. இதில் அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. முன்பக்கம் டெலிஸ்கோபிக் ஃப்ரன்ட் ஃபோர்க்ஸ் சஸ்பென்சனும், பின்பக்கம் டூயல் ரியர் ஷாக்ஸ் சஸ்பென்சனும் பொருத்தப்பட்டுள்ளது.
இதன் எடை 128 கிலோ ஆகும். இதன் பேட்டரி 3 வருடங்கள் அல்லது 30 ஆயிரம் கிலோமீட்டர் வரை வாரண்டி அளிக்கப்படுகிறது. 3 வருடம் மோட்டார் வாரண்டி அளிக்கப்படுகிறது. டிஜிட்டல் டச் ஸ்கிரின் டிஸ்ப்ளே இதில் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் உள்ளது. ப்ளூடூத் மொபைல் போன் கனெக்ஷன் உள்ளது.
வசதிகள்:
ஜிபிஎஸ் நேவிகேஷன் வசதி உள்ளது. ஸ்பீடோமீட்டர், ஓடோமீட்டர் டிஜிட்டலில் உள்ளது. வாய்ஸ் அசிஸ்ட் வசதி இல்லை. 2 ட்ரிப்மீட்டர், டிஜிட்டல் வசதி உள்ளது. லோ பேட்டரி இண்டிகேட்டர் வசதி உள்ளது. ஹசார்ட் வார்னிங் இண்டிகேட்டர் வசதி உள்ளது. கால்/எஸ்எம்எஸ் வசதி உள்ளது. நேரம் பார்க்கும் வசதியும் உள்ளது.
செல்ஃப் ஸ்டார்ட் வசதி உள்ளது. யுஎஸ்பி சார்ஜிங் வசதி கிடையாது. ரிவர்ஸ் மோட் வசதி உள்ளது. ஸ்டார்ட்/ ஸ்டாப் பட்டன் வசதி உள்ளது. பேட்டரி ஸ்டேட்டஸ், லைவ் சார்ஜில் ஸ்டேட்டஸ் வசதி உள்ளது. எல்இடி முகப்பு விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. பகல் நேரத்தில் எரியும் விளக்குகள் ஆகும். டிக்கி வசதி 18 லிட்டர் ஆகும்.
Car loan Information:
Calculate Car Loan EMI