இந்தியாவில் மின்சார வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக இரு சக்கர வாகனங்களின் பயன்பாட்டில் மின்சார வாகனங்கள் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. 

Continues below advertisement

Odysse Evoqis:

இ ஸ்கூட்டர்களுக்கு நிகராக இ பைக்குகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இ பைக் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக வளர்ந்து வரும் நிறுவனமாக இருப்பது Odysse. இவர்களின் இ பைக் Odysse Evoqis பற்றி கீழே விரிவாக காணலாம்.

இந்த Odysse Evoqis இ பைக்கில் இரண்டு வேரியண்ட் உள்ளது. 

Continues below advertisement

1. Evoqis Lite - ரூபாய் 1 லட்சத்து 25 ஆயிரத்து 901

2. Evoqis Standard - ரூபாய் 1 லட்சத்து 80 ஆயிரத்து 224

மைலேஜ்:

முதல் வேரியண்ட்டில் ஒரு முறை சார்ஜ் செய்தால் 90 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. அதிகபட்சமாக 75 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம். இரண்டாவது வேரியண்டில் ஒரு முறை சார்ஜ் செய்தால் 140 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. அதிகபட்சமாக 80 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம். 

இந்த பைக் கருப்பு, பச்சை, சிவப்பு, வெள்ளை மற்றும் நீலம் வண்ணங்களில் உள்ளது. 64 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. 4 ரைடிங் மோட்கள் உள்ளது. பிஎல்டிசி மோட்டார் வகை உள்ளது. 4.32 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்வதற்கு 6 மணி நேரம் ஆகிறது. லித்தியம் அயர்ன் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

சிறப்புகள்:

போர்ட்டபிள் சார்ஜர் வசதி உள்ளது. ஐபி 67 பேட்டரி ரேட்டிங் வசதி உள்ளது. ஸ்டாண்டர்ட் ப்ரேக்கிங் சிஸ்டம் வசதி உள்ளது. முன்பக்கம் டிஸ்க் ப்ரேக்கும், பின்பக்கம் டிஸ்க் ப்ரேக்கும் வசதி உள்ளது. அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. முன்பக்கம் 17 இன்ச், பின்பக்கம் 17 இன்ச் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. 

ட்யூப்லஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது. டெலிஸ்கோபிக் முன்பக்கம் சஸ்பென்சன் பொருத்தப்பட்டுள்ளது. பின்பக்கம் ஹெவி ஸ்ப்ரிங் லோடட் சஸ்பென்சன் பொருத்தப்பட்டுள்ளது. 150 கிலோ எடை கொண்டது. 750 மி.மீட்டர் இருக்கை உயரம் கொண்டது. 170 மி.மீட்டர் கிரவுண்ட் கிளியரன்ஸ் வசதி உள்ளது. 

வசதிகள்:

170 கிலோ வரை எடைதாங்கும் திறன் கொண்டது. 3 வருடம் அல்லது 30 ஆயிரம் கிலோமீட்டர் வரை பேட்டரி வாரண்டி அளிக்கப்படுகிறது. 1 வருடம் மோட்டார் வாரண்டி அளிக்கப்பட்டுள்ளது. செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் வசதி உள்ளது.

ஸ்பீடோமீட்டர், ஓடோமீட்டர் டிஜிட்டல் வசதி உள்ளது. 2 ட்ரிப்மீட்டர்ஸ் டிஜிட்டல் வசதி உள்ளது. லோ பேட்டரி இண்டிகேட்டர், ஹசார்ட் வார்னிங் இண்டிகேட்டர் வசதி உள்ளது. செல்ஃப் ஸ்டார்ட் வசதி உள்ளது. கில் சுவிட்ச் வசதி, ஹில் அசிஸ்ட் வசதி உள்ளது. ரிவர்ஸ் மோட் வசதி உள்ளது. ஆர்ட்டிபிசியல் சவுண்ட் வசதி உள்ளது. டூயல் எல்இடி ப்ரொஜக்டர் முகப்பு விளக்குகள் வசதி உள்ளது. பகலிலும் எரியும் விளக்குகள் வசதி உள்ளது. ப்ரேக்/டெயில் விளக்குகள் வசதி உள்ளது. சிக்னல் விளக்குகளும் எல்இடி ஆகும். 


Car loan Information:

Calculate Car Loan EMI