இந்தியாவில் மின்சார வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பெட்ரோல் வாகனங்களுக்கு இணையாக இயங்கும் அளவி்ற்கு மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது.
Odysse E2Go:
இந்த சூழலில், இ ஸ்கூட்டர் பயன்பாட்டில் முன்னணி நிறுவனமாக வளர்ந்து வரும் நிறுவனம் Odysse. இவர்கள் இ ஸ்கூட்டர் மற்றும் இ பைக் தயாரித்து வருகின்றனர். இவர்களின் Odysse E2Go இ ஸ்கூட்டர் பற்றி கீழே காணலாம்.
மைலேஜ்:
இந்த இ ஸ்கூட்டரில் ஒரே ஒரு வேரியண்ட் மட்டுமே உள்ளது. இதன் விலை ரூபாய் 75 ஆயிரத்து 749 ஆகும். பட்ஜெட் விலையில் உள்ள இந்த இ ஸ்கூட்டரை ஒரு முறை சார்ஜ் செய்தால் 70 கிலாமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. இதில் அதிகபட்சமாக 25 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம்.
வீட்டில் உள்ள முதியவர்கள் ஓட்டுவதற்கும், வீட்டின் அருகே மட்டும் செல்வதற்கும் மிகவும் வசதியாக இந்த இ ஸ்கூட்டர் ஏற்றதாக இருக்கும். இந்த இ ஸ்கூட்டர் 90 கிலோ எடை கொண்டது. இந்த இ ஸ்கூட்டரில் 1.2 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதை சார்ஜ் செய்வதற்கு 4 மணி நேரம் வரை ஆகிறது. பிஎல்டிசி மோட்டார் இதில் பொருத்தப்பட்டுள்ளது.
சிறப்புகள்:
1 போர்ட்டபிள் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. லித்தியம் அயர்ன் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. ஐபி 67 பேட்டரி ஐபி ரேட்டிங் பொருத்தப்பட்டுள்ளது. யுஎஸ்பி சார்ஜிங் வசதி உள்ளது. போர்ட்டபிள் சார்ஜர் வசதி இதில் உள்ளது. ஸ்டாண்டர்ட் ப்ரேக்கிங் சிஸ்டம் வசதி உள்ளது. முன்பக்கம் டிஸ்க் ப்ரேக்கும், பின்பக்கம் ட்ரம் ப்ரேக்கும் பொருத்தப்பட்டுள்ளது.
அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. முன்பக்கம் 10 இன்ச் சக்கரமும், பின்பக்கம் 10 இன்ச் சக்கரமும் பொருத்தப்பட்டுள்ளது. ட்யூப்லஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது. டெலிஸ்கோபிக் சஸ்பென்சன் பொருத்தப்பட்டுள்ளது. பின்பக்கம் ஹெவி ஸ்ப்ரிங் லோடட் சஸ்பென்சன் பொருத்தப்பட்டுள்ளது.
வசதிகள்:
90 கிலோ எடை கொண்டது. கிரவுண்ட் கிளியரன்ஸ் 250 மி.மீட்டர் ஆகும். 150 கிலோ எடை கொண்டது. 3 வருடம் அல்லது 30 ஆயிரம் கிலோமீட்டர் வரை பேட்டரி வாரண்டி அளிக்கப்படுகிறது. ஒரு வருட மோட்டார் வாரண்டி அளிக்கப்படுகிறது. டிஜிட்டல் டிஸ்ப்ளே இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் பொருத்தப்பட்டுள்ளது. ஸ்பீடோமீட்டர், ஓடோமீட்டர் டிஜிட்டல் பொருத்தப்பட்டுள்ளது. ஸ்டாண்ட் அலார்ம், லோ பேட்டரி இண்டிகேட்டர், ஹசார்ட் வார்னிங் இண்டிகேட்டர் வசதி உள்ளது.
யுஎஸ்பி சார்ஜிங் போர்ட் வசதி உள்ளது. கீலெஸ் லாக்/ அன்லாக் வசதி உள்ளது. ஆன்டி தெஃப்ட் சிஸ்டம் வசதி உள்ளது. செல்ஃப் ஸ்டார்ட் வசதி உள்ளது. ரிவர்ஸ் மோட் வசதி உள்ளது. எல்இடி முகப்பு விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. ப்ரேக்/டெயில் விளக்குகள் வசதி உள்ளது. சிக்னல் விளக்குகள் எல்இடியில் பொருத்தப்பட்டுள்ளது. டிக்கி வசதி உள்ளது. கருப்பு, சாம்பல், நீலம், சிவப்பு உள்ளிட்ட 6 வண்ணங்களில் உள்ளது.
Car loan Information:
Calculate Car Loan EMI