இந்தியாவில் மின்சார வாகனங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக நாள்தோறும் மின்சார வாகனங்களுக்கு மாறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 

Continues below advertisement

Oben Rorr EZ Sigma:

இ ஸ்கூட்டர்களுக்கு நிகராக இ பைக்குகளின் எண்ணிக்கையும் நாள்தோறும் அதிகரித்து வருகிறது. Oben நிறுவனத்தின் Oben Rorr EZ Sigma இ பைக் பற்றி கீழே விரிவாக காணலாம்.

இந்த பைக்கில் 2 வேரியண்ட் உள்ளது. 

Continues below advertisement

1. Rorr EZ Sigma 3.4 kWh - ரூபாய் 1 லட்சத்து 15 ஆயிரத்து 836

2. Rorr EZ Sigma 4.4 kWh - ரூபாய் 1 லட்சத்து 26 ஆயிரத்து 048

175 கி.மீட்டர் மைலேஜ்:

முதல் வேரியண்ட் 3.4 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. 2வது வேரியண்ட் 4.4 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.  முதல் வேரியண்டை சார்ஜ் செய்வதற்கு 5 மணி நேரம் ஆகிறது. 2வது வேரியண்ட் 7 மணி நேரம் ஆகிறது. இரண்டு வேரியண்டிலும் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.

முதல் வேரியண்டை ஒரு முறை சார்ஜ் செய்தால் 140 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. இரண்டாவது வேரியண்டை சார்ஜ் செய்தால் 175 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. அதிகபட்சமாக 95 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம். இந்த இ பைக் கருப்பு - வெள்ளை, ஆரஞ்சு - கருப்பு, நீலம் - கருப்பு, கருப்பு - சிவப்பு வண்ணங்களில் விற்பனைக்கு வருகிறது.

சிறப்புகள்:

இந்த இ பைக்கின் எடை 143 கிலோ ஆகும். இதன் இருக்கை உயரம் 810 மி.மீட்டர் ஆகும். யுஎஸ்பி சார்ஜிங் வசதி உள்ளது. 286 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. 40 கிலோமீட்டர் வேகத்தை எட்ட 3.3 நொடிகள் எடுத்துக் கொள்கிறது. எகோ, சிட்டி மற்றும் ஹேவோக் ரைடிங் மோட்களில் உள்ளது.

ஐபி 67 மோட்டார் ஐபி ரேட்டிங் ஆகும். எல்எஃப்பி பேட்டரி வசதி உள்ளது. யுபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம் வசதி உள்ளது. முன்பக்கம் டிஸ்க் ப்ரேக், பின்பக்கம டிஸ்க் ப்ரேக் வசதி உள்ளது. அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. முன்பக்கம் 17 இன்ச், பின்பக்கம் 17 இன்ச் சக்கரம் பொருத்தப்பட்டுள்ளது. ட்யூப்லஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது.

வசதிகள்:

37 மி.மீட்டர் டியா டெலிஸ்கோபிக் ஃபோர்க் சஸ்பென்சன் முன்பக்கம் உள்ளது. மோனோஷாக் 7 ஸ்டெப் அட்ஜெஸ்டபிள் சஸ்பென்சன் பின்பக்கம் உள்ளது. இருக்கை உயரம் 810 மி.மீட்டர் ஆகும். கிரவுண்ட் கிளியரன்ஸ் 200 மி.மீட்டர் ஆகும். 3 வருடம் அல்லது 40 ஆயிரம் கிலோமீட்டர் வரை பேட்டரி வாரண்டி அளிக்கப்படுகிறது. மோட்டார் வாரண்டி 3 வருடம் வாரண்டி அளிக்கப்படுகிறது.

5 இன்ச் டிஎஃப்டி டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. ப்ளூடூத் மற்றும் இன்டர்நெட் வசதி உள்ளது. ஜிபிஎஸ் நேவிகேஷன் வசதி உள்ளது. ஸ்பீடோமீட்டர், ஓடோமீட்டர் டிஜிட்டல் வசதி உள்ளது. 2 ட்ரிப்மீட்டர்ஸ் டிஜிட்டல் வசதி உள்ளது. லோ பேட்டரி இண்டிகேட்டர் வசதி உள்ளது. கால்/எஸ்எம்எஸ் அலர்ட் வசதி உள்ளது. எல்இடி முகப்பு விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. ப்ரேக்/டெயில் விளக்குகள் எல்இடி ஆகும். டிக்கி வசதி உள்ளது.

மிகவும் வசீகரமான தோற்றத்துடனும், ஸ்போர்ட்ஸி லுக்கிலும் இருப்பதால் இதை பலரும் விரும்புகின்றனர். 


Car loan Information:

Calculate Car Loan EMI