பெங்களூருவைச் சேர்ந்த மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமான ஓபன் எலக்ட்ரிக் (Oben Electric), தனது புதிய எலக்ட்ரிக் பைக்கை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள Rorr EVO பைக்கிற்கான முன்பதிவு வெறும் 15 நாட்களில் 25,000-ஐ தாண்டியுள்ளது. கடந்த மே மாதம் இந்த பைக் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த நிலையில், தற்போது அதிகாரப்பூர்வமாக வாகனங்களை டெலிவரி செய்யும் பணிகளையும் நிறுவனம் தொடங்கியுள்ளது. ஆண்டுக்கு சுமார் 1 லட்சம் பைக்குகளை தயார் செய்யும் அளவில் இந்த நிறுவனம் இயங்கி வருகிறது.
இந்த பைக்கின் தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்பு குறித்த முழு விவரங்களை கீழே காணலாம்.
பேட்டரிமற்றும்ரேஞ்ச்
இந்த பைக்கில் பாதுகாப்பான மற்றும் அதிக வெப்பத்தை தாங்கக்கூடிய LFP (Lithium Iron Phosphate) பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டுள்ளது. 3.4 kWh பேட்டரி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
- இதனை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 180 கிலோமீட்டர் வரை ரேஞ்ச் வழங்கும்.
- இந்த பேட்டரியை 90 சதவீதம் சார்ஜ் செய்வதற்கு வெறும் 90 நிமிடம் மட்டுமே ஆகும்.
செயல்திறன் (Performance)
- இதில் சக்திவாய்ந்த எலக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இது மணிக்கு அதிகபட்சமாக 110 கிலோமீட்டர் வேகத்தில் சீறிப்பாயும் திறன் கொண்டது.
- மேலும், 0-வில் இருந்து 40 கி.மீ வேகத்தை வெறும் 3 வினாடிகளில் இந்த பைக் எட்டிவிடும். ரைடர்களின்பயன்பாட்டிற்குஏற்பஈக்கோ,சிட்டிமற்றும்ஹாவோக்எனமூன்றுரைடிங்மோடுகள்வழங்கப்பட்டுள்ளன.
டிசைன்மற்றும்வடிவமைப்பு (Design)
- இந்த பைக் நியோ- கிளாசிக் ஸ்போர்ட்ஸ் டிசைன் தத்துவத்தில் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
- முன்புறத்தில் வட்ட வடிவிலான எல்.இ.டி, ஹெட்லைட், மஸ்குலரான பெட்ரோல் டேங்க் அமைப்பு மற்றும் ஸ்போர்ட்டியான ஸ்பிளிட் சீட் டிசைன் ஆகியவை பைக்கிற்கு பிரீமியம் தோற்றத்தை தருகின்றன.
- சௌகரியமான பயணத்திற்காக சிறந்த சஸ்பென்ஷன் மற்றும் இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.
சிறப்பம்சங்கள்
முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் இதில் இடம்பெற்றுள்ளது. இதுதவிர ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி, திருட்டைத் தடுக்கும் ஆன்டி-தெஃப்ட் (Anti-theft) சிஸ்டம், டிரைவர் அலர்ட் மற்றும் ஜியோ ஃபென்சிங் உள்ளிட்ட நவீன தொழில்நுட்ப வசதிகள் இந்த பைக்கில் வழங்கப்பட்டுள்ளன.
Car loan Information:
Calculate Car Loan EMI