இந்தியாவில் மின்சார ஸ்கூட்டர்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சிறந்த மைலேஜ் அளிக்கும் இ ஸ்கூட்டர்களுக்கு வாடிக்கையாளர்கள் நல்ல ஆதரவை அளித்து வருகின்றனர்.

Continues below advertisement

Numeros n-First:

இந்த சூழலில், Numeros நிறுவனமும் தனது இந்திய சந்தையில் தனது நிலைத்தன்மையை உறுதி செய்ய ஆர்வம் காட்டி வருகிறது. இந்த நிறுவனத்தின் Numeros n-First இ ஸ்கூட்டரின் விலை, தரம், மைலேஜ் ஆகியவை குறித்து கீழே காணலாம்.

3 வேரியண்ட்:

Numeros n-First இ ஸ்கூட்டரின் தொடக்க விலை ரூபாய் 84 ஆயிரத்து 666 ஆகும். இதில் மொத்தம் 3 வேரியண்ட் உள்ளது.

Continues below advertisement

1. n-First Max  - ரூபாய் 84 ஆயிரத்து 666

2. n-First iMax  - ரூபாய் 88 ஆயிரத்து 010

3. n-First iMax Plus - ரூபாய் 95 ஆயிரத்து 847

இந்த இ ஸ்கூட்டரின் முதல் 2 வேரியண்டில் 2.5 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. கடைசி வேரியண்ட் 3 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

109 கி.மீட்டர் மைலேஜ்:

முதல் 2 வேரியண்ட்டை ஒரு முறை சார்ஜ் செய்தால் 91 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. கடைசி வேரியண்ட்டை ஒரு முறை சார்ஜ் செய்தால் 109 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது.  முதல் 2 வேரியண்டில் அதிகபட்சமாக 55 கிலோமீட்டர் வேகம் வரை செல்லலாம். கடைசி வேரியண்ட்டில் அதிகபட்சமாக 70 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம்.

முதல் 2 வேரியண்ட்டை ஒரு முறை சார்ஜ் செய்ய 6 மணி நேரம் ஆகிறது. கடைசி வேரியண்டை ஒரு முறை சார்ஜ் செய்ய 8 மணி நேரம் ஆகிறது. நார்மல், எகோ மற்றும் ஸ்போர்ட் மோட்களில் உள்ளது. வெள்ளை, சிவப்பு ஆகிய வண்ணங்களில் இந்த இ ஸ்கூட்டர் உள்ளது.

சிறப்புகள்:

112 கிலோ எடை கொண்டது. 34 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. பிஎம்எஸ்எம் மிட் ட்ரைவ் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. லித்தியம் அயர்ன் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. போர்ட்டபிள் சார்ஜர் பொருத்தப்பட்டுள்ளது.

சிபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. முன்பக்கம் ட்ரம் ப்ரேக்கும், பின்பக்கம் ட்ரம் ப்ரேக்கும் பொருத்தப்பட்டுள்ளது. அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. 16 இன்ச் முன்பக்கமும், பின்பக்கம் 16 இன்ச் சக்கரமும் பொருத்தப்பட்டுள்ளது. ட்யூப்லஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது. 

வசதிகள்:

டெலிஸ்கோபிக் ஹைட்ராலிக் முன்பக்கம் சஸ்பென்சனும், பின்பக்கம் அட்ஜஸ்டபிள் டூயல் ஷாக் வித் ஹைட்ராலிக் டேம்பர்ஸ்   சஸ்பென்சனும் பொருத்தப்பட்டுள்ளது. கிரவுண்ட் கிளியரன்ஸ் 159 மி.மீட்டர் ஆகும். எல்சிடி டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. ப்ளூடூத் கனெஷக்ன் பொருத்தப்பட்டுள்ளது. ஸ்பீடோமீட்டர் டிஜிட்டலில் உள்ளது. ட்ரிப்மீட்டர் டிஜிட்டலில் உள்ளது. ஸ்டாண்ட் அலார்ம் உள்ளது. 

லோ பேட்டரி இண்டிகேட்டர் வசதி உள்ளது. கால்/எஸ்எம்எஸ் அலர்ட் வசதி உள்ளது. நேரம் பார்க்கும் வசதி உள்ளது. செல்ஃப் ஸ்டார்ட் வசதி உள்ளது. ஆன்டி தெஃப்ட் சிஸ்டம் வசதி உள்ளது. ரிவர்ஸ் மோட் வசதி உள்ளது. பேட்டரி ஸ்டேட்டஸ் வசதி உள்ளது. லைவ் சார்ஜிங் வசதி உள்ளது.  எல்இடி முகப்பு விளக்குகள் வசதி உள்ளது.  பகலில் எரியும் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. 


Car loan Information:

Calculate Car Loan EMI