Nissan Upcoming Cars 2026: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் வரும் 2026ம் ஆண்டில் நிசான் நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ள கார் மாடல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

Continues below advertisement

4 புதிய கார்களை இறக்கும் நிசான்

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் தனக்கான வலுவான இடத்தை பிடிக்கத் துடிக்கும் நிசான் நிறுவனம், அதற்கேற்ப ப்ராண்டின் போர்ட்ஃபோலியோவை விரிவுபடுத்த முடிவு செய்துள்ளது. அதன்படி, அடுத்த ஆண்டில் நான்கு புதிய கார்களை அறிமுகப்படுத்த உள்ளதாக, அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அவை க்ராவைட், அப்க்ரேட் செய்யப்பட்ட மேக்னைட், டெக்டான் மற்றும் ஒரு பெயரிடப்படாத 7 சீட்டர் ஆகும். அந்த கார்கள் குறித்து தற்போது வரை வெளியாகியுள்ள தகவல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

Continues below advertisement

2026ல் அறிமுகமாக உள்ள நிசான் கார்கள்:

1. நிசானின் மேம்படுத்தப்பட்ட மேக்னைட்

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் 2026ம் ஆண்டில் நிசான் நிறுவனத்தின் முதல் கார் மாடலாக, புதிய மேம்படுத்தப்பட்ட மேக்னைட் இடம்பெற உள்ளது. அம்சங்கள் அடிப்படையில் இந்த காம்பேக்ட் எஸ்யுவில் அப்டேட்கள் என்பது சிறிய அளவிலேயே எதிர்பார்க்கப்படுகிறது.  உள்ளூர் சந்தையில் இந்த காரானது ரெனால்ட் கைகர் மற்றும் மாருதி ஃப்ராங்க்ஸ் ஆகிய கார்களுடன் போட்டியிடக்கூடும். டிசைன் மற்றும் மெக்கானிக்கல் அடிப்படையில் பெரிய மாற்றங்கள் ஏதும் எதிர்பார்க்கமுடியவில்லை. தீவிர சாலை சோதனையில் ஈடுபட்டுள்ள மேக்னைட் மாடல், வரும் ஜனவரியில் அறிமுகப்படுத்தப்பட்டு விலையும் வெளியிடப்பட உள்ளது.

2. நிசான் க்ராவைட்

நிசான் நிறுவனத்தில் இருந்து வெளியாக உள்ள 3 வரிசை இருக்கைகளை கொண்ட, எம்பிவியின் பெயர் க்ராவைட் என உறுதி செய்யப்பட்டுள்ளது. வரும் ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தப்பட்டு, மார்ச் மாதத்தில் விலை அறிவிக்கப்பட உள்ளது. இந்த காரானது ரெனால்ட் ட்ரைபரின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு அதே CMF-A+ ப்ளாட்ஃபார்மில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இன்ஜின் ஆப்ஷனிலும் மாற்றம் இன்றி க்ராவைட்டிலும் 76hp மற்றும் 95Nm உற்பத்தி செய்யும் அதே 1.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜினைப் பயன்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கியர்பாக்ஸ் விருப்பங்களில் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் 5-ஸ்பீடு AMT ஆகியவை அடங்கும். ப்ராண்டின் போர்ட்ஃபோலியோவில் மேக்னைட்டுக்கு கீழே நிலைநிறுத்தப்பட உள்ளது.

3. நிசான் டெக்டான்:

வரும் மார்ச் மாதத்தில் க்ராவைட் கார் மாடலின் விலை அறிவிப்பதற்கு முன்பாகவே, பிப்ரவரியில் ப்ராண்டின் முற்றிலும் புதிய டெக்டான் கார் மாடல் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு சந்தையில் ஹுண்டாய் க்ரேட்டா மற்றும் டாடா சியாரா உடன் இந்த கார் போட்டியிட உள்ளது. இந்த மிட்-சைஸ் எஸ்யுவி ஆனது, ரெனால்ட் டஸ்டருடன் CMF-B ப்ளாட்ஃபார்மை பகிர்ந்துகொள்கிறது.  எனவே பவர்ட்ரெயினிலும் மாற்றமின்றி அப்படியே பின்பற்றக்கூடும். ஏற்கனவே வெளியான டீசர்களின்படி, டெக்டானின் வெளிப்புற டிசைனில் பெரிய பாட்ரோல் எஸ்யுவியின் தாக்கத்தை கொண்டுள்ளது. இதன் கேபின் ஆனது 3 டோன் டேஷ்போர்டை கொண்டுள்ளது.

4. நிசானின் 7 சீட்டர் எஸ்யுவி

இன்னும் பெயரிடப்படாத புதிய 7 சீட்டர் எஸ்யுவி ஆனது டெக்டானின் நீட்டிப்பாக மட்டும் இருக்காது என நிசான் நிறுவனம் தெரிவித்துள்ளது. நடப்பாண்டில் அறிமுகப்படுத்தப்பட வாய்ப்பு இருந்தாலும், அடுத்த ஆண்டு தான் இந்த கார் விற்பனைக்கு கொண்டுவரப்பட உள்ளதாம். இந்நிலையில் டெக்டானின் அதே CMF-B ப்ளாட்ஃபார்மை அடிப்படையாகக் கொண்டிருந்தாலும், இது மிகவும் வித்தியாசமான தயாரிப்பாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டஸ்டர் மற்றும் அதன் 7-இருக்கை வழித்தோன்றல், போரியல் அல்லது பிக்ஸ்டராக இருக்கலாம் , நிசானின் SUV களைப் போலவே அதே CMF-B தளத்தைப் பகிர்ந்து கொள்கின்றன என்பதை நினைவில் கொள்க. இந்த இரண்டு ரெனால்ட் மாடல்களும் வடிவமைப்பின் அடிப்படையில் கணிசமாக வேறுபடும், அதே போல் நிசான் SUV களும் இருக்கும்.  ஒரு சில வடிவமைப்பு மாற்றங்கள் மற்றும் மூன்றாவது வரிசை இருக்கைகளுக்கு இடமளிக்க நீட்டிக்கப்பட்ட பின்புற ஓவர்ஹாங்கைத் தவிர, டெக்டான் மற்றும் அதன் 7 சீட்டர் வழித்தோன்றல் மிகவும் வேறுபட்டதாக இருக்கும் என தெரிகிறது.


Car loan Information:

Calculate Car Loan EMI