இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள புதிய ரெனால்ட் டஸ்டர் (Renault Duster) மற்றும் அதன் அடிப்படையிலான நிஸான் டெக்டான் (Nissan Tekton) ஆகிய இரண்டு எஸ்.யு.வி கார்களுக்கு இடையிலான ஒற்றுமைகள் மற்றும் வேற்றுமைகள் குறித்த விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

Continues below advertisement

இரண்டு மாடல்களுமே ஒரே CMF-B பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டாலும், வடிவமைப்பு மற்றும் ஸ்டைலிங்கில் மாறுபடுகின்றன.

டிசைன்மற்றும்வடிவமைப்பு

  • ரெனால்ட்டஸ்டர்: இது முரட்டுத்தனமான தோற்றத்தைக் கொண்டுள்ளது. Y வடிவ எல்.இ.டி டே-டைம் ரன்னிங் லைட்டுகள், அகலமான வீல் ஆர்ச்சுகள் மற்றும் உறுதியான பம்பர்களுடன் பாரம்பரிய டஸ்டரின் முரட்டுத் தோற்றத்தை தக்கவைத்துள்ளது.
  • நிஸான்டெக்டான்: இது சற்று பிரீமியம் மற்றும் மாடர்ன் டிசைனைக் கொண்டுள்ளது. நிஸானுக்கே உரிய பிரத்யேக கிரில் வடிவமைப்பு, L-வடிவ எல்.இ.டி DRL-கள், முற்றிலும் புதிய முன்புற மற்றும் பின்புற பம்பர்கள் இதில் இடம்பெற்றுள்ளன.
  • ஒற்றுமைகள்: இரண்டு கார்களிலும் பக்கவாட்டு கதவுகள், மேற்கூரை, ஜன்னல் கண்ணாடிகளின் அமைப்பு மற்றும் அடிப்படை பாடி பேனல்கள் ஆகியவை ஒன்றாகவே இருக்கின்றன.அலாய் வீல்களின் டிசைன் மட்டுமே மாடலுக்கு ஏற்ப மாறுபடுகின்றன. 

உட்புறவடிவமைப்பு

Continues below advertisement

டேஷ்போர்டு லே-அவுட் இரண்டிலும் ஒன்றாகவே இருக்கின்றன. 10.1 இன்ச் டச் ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் 7 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் ஆகியவை பகிரப்படுகின்றன. இருப்பினும், பிராண்ட் லோகோ, ஸ்டீயரிங் வீல் டிசைன், ஏசி வென்ட்கள் மற்றும் சீட் அப்ஹோல்ஸ்டரி நிறங்கள் ஆகியவை இரண்டு கார்களுக்கும் தனித்தனியாக வேறுபடுத்திக் காட்டப்படும்.

என்ஜின்மற்றும்ரேஞ்ச்விவரங்கள்

  • இரண்டு மாடல்களிலும் ஒரே மாதிரியான என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படும். 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • இதில் டீசல் என்ஜின் ஆப்ஷன் கிடையாது. மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படும்.

 ஹைப்ரிட்ரேஞ்ச்: எரிபொருள் சிக்கனம் மற்றும் சிறப்பான ரேஞ்ச் வழங்குவதற்காக, 1.6 லிட்டர் பெட்ரோல் என்ஜினுடன் கூடிய ஸ்ட்ராங் ஹைப்ரிட் தொழில்நுட்பம் இரண்டு கார்களிலும் வழங்கப்படும்.

ஆல் வீல் டிரைவ் சிஸ்டம்

மேலும், ஆஃப் ரோடு பயன்பாட்டிற்காக இரண்டு கார்களின் டாப் வேரியண்ட்களிலும் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டஸ்டரைப் போல 100 hp – 1 லிட்டர் மற்றும் 163 hp 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின்கள் உள்ளன. அதேபோல, 6 ஸ்பீட் மேனுவல்  கியர்பாக்ஸ் உள்ளன. அதேநேரத்தில் டெக்டானில் 160 hp 1.8 லிட்டர் ஸ்ட்ராங் ஹைபிரிட் பவர்ட்ரெய்ன் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விலை எவ்வளவு?

நிஸான் டெக்டானின் எக்ஸ் ஷோ ரூம் விலை, டஸ்டரைப் போலவே  ரூ.10.49 லட்சத்தில் தொடங்குகிறது. டெக்டானின் டாப் என்ட் வேரியண்ட்டின் விலை 10 ஆயிரம் ரூபாய் குறைவாக ரூ.18.59 லட்சத்துக்கு விற்பனை ஆகிறது.


Car loan Information:

Calculate Car Loan EMI