உலகின் மிகவும் முக்கியமான கார் தயாரிப்பு நிறுவனம் டெக்ஸ்டான். இந்த கார்களுக்கு இந்திாவில் நல்ல வரவேற்பு உள்ளது.

Continues below advertisement

Nissan Tekton அறிமுகம்:

இவர்களின் புதிய படைப்பான Nissan Tekton மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இந்திய சந்தையில் இருந்து வந்தது. பலரது மத்தியிலும் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கிய Nissan Tekton கார் இன்று இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. இந்த கார் ஒரு மிட்சைஸ் எஸ்யூவி கார் ஆகும்.

விலை என்ன?

இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 10.49 லட்சம் ஆகும். இந்த கார் 1.0 லிட்டர் டர்போ மற்றும் 1.3 லிட்டர் டர்போ எஞ்ஜின் பொருத்தப்பட்ட கார் ஆகும்.

Continues below advertisement

Nissan Tekton Visia 160 MT-  ரூபாய் 10.49 லட்சம்

Nissan Tekton Visia+ 160 MT- ரூபாய் 11.14 லட்சம்

Nissan Tekton Acenta 160 MT- ரூபாய் 11.79 லட்சம்

Nissan Tekton N-Connecta 160 MT-  ரூபாய் 13.69 லட்சம்

Nissan Tekton Tekna 160 MT- ரூபாய் 15.39 லட்சம்

Nissan Tekton Tekna+ 160 MT- ரூபாய் 16.49 லட்சம்

இவை 1.0 லிட்டர் டர்போ எஞ்ஜின் பொருத்தப்பட்ட வேரியண்ட் ஆகும்.

Nissan Tekton N-Connecta 280 MT- ரூபாய் 14.99 லட்சம்

Nissan Tekton Tekna 280 MT- ரூபாய் 16.39 லட்சம்

Nissan Tekton Accenta 280 DCT- ரூபாய் 14.99 லட்சம்

Nissan Tekton N-Connecta 280 DCT- ரூபாய் 16.49 லட்சம்

Nissan Tekton Tekna 280 DCT- ரூபாய் 17.79 லட்சம்

Nissan Tekton Tekna+ 280 DCT- ரூபாய் 18.59 லட்சம்

இதில் 1.3 லிட்டர் டர்போ எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

வசதிகள்:

இந்த காரில் மேனுவலில் 6 கியர்கள் உள்ளது. 163 பிஎஸ் மற்றும் 280 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. டூயல் கிளட்ச் ஆட்டோமெட்டிக் வேரியண்டும் உள்ளது. 17.8 கிலோமீட்டர் முதல் 18.5 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. 

பயணிகளின் பாதுகாப்பிற்காக 6 ஏர்பேக் வசதிகள் உள்ளது. முன்பக்கம், பக்கவாடு மற்றும் கர்டைன் ஏர்பேக் வசதிகள் உள்ளது. ஏபிஎஸ் ப்ரேக்கிங் வசதி, எலக்ட்ரானிக் ப்ரேக்ஃபாஸ்ட் டிஸ்ட்ரிப்யூஷன் வசதி உள்ளது. ப்ரேக் அசிஸ்ட், மோனிட்டரிங் சிஸ்டம் வசதி உள்ளது. எமர்ஜன்சி ஸ்டாப் சிக்னல் வசதி உள்ளது. ஸ்பீட் சென்சிங் தானியங்கி கதவு திறக்கும் மற்றும் மூடும் வசதி உள்ளது. 

சிறப்புகள்:

ஆட்டோமெட்டிக் ஹசார்ட் வார்னிங் விளக்குகள் பொருத்தப்படுகிறது. 360 டிகிரி கேமரா. 3 டி ரவுண்ட் வியூ மானிட்டர் வசதி உள்ளது. வயர்லஸ் ஸ்மார்ட்போன் சார்ஜர், எலக்ட்ரானிக் பார்க்கிங் ப்ரேக் வசதி உள்ளது. 700 லிட்டர் டிக்கி வசதி கொண்டது. டூயல் ஜோன் ஆட்டோமெட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், ஆம்பியன் ஸ்மார்ட் டச் எல்இடி கேபின் இல்லுமினேஷன் வசதி கொண்டது.  இந்த கார் 11 வண்ணங்களில் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 5 வருட வாரண்டி அளிக்கப்பட்டுள்ளது.  வருட பராமரிப்பு பேக்கேஜ் வசதியும் உள்ளது.


Car loan Information:

Calculate Car Loan EMI