இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மஹிந்திரா, டாடா, ஹுண்டாய் என்று பல முன்னணி கார் நிறுவனங்கள் இருந்தாலும் தனக்கென தனி வாடிக்கையாளரை கொண்டிருப்பது நிசான் நிறுவனம். Nissan Magnite:
நிசான் நிறுவனம் பட்ஜெட் விலையில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்திய கார் Nissan Magnite ஆகும். 2020ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த கார் இன்றளவும் பலராலும் விரும்பப்படும் காராக உள்ளது. விலை, தரம், மைலேஜ் போன்ற பல காரணங்களால் இந்த கார் பலராலும் விரும்பப்படுகிறது. இதைப் பற்றி கீழே விரிவாக காணலாம்.
விலை என்ன?
இந்த கார் ஒரு எஸ்யூவி ரக கார் ஆகும். இந்த காரின் தொடக்க விலை ( ஆன்ரோட் விலை) ரூபாய் 6.79 லட்சம் ஆகும். இந்த கார் 1 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜினை கொண்டது. இந்த கார் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜியிலும் ஓடும் ஆற்றல் கொண்டது. இந்த காரின் டாப் வேரியண்ட் விலை ரூபாய் 13.59 லட்சம் ஆகும். 999 சிசி திறன் கொண்ட எஞ்ஜினை கொண்டது. 71 பிஎச்பி குதிரை ஆற்றலை கொண்டது. இந்த காரின் அடிப்படை வேரியண்ட் Nissan Magnite Visia B4D ரூபாய் 7.42 லட்சத்திற்கு விற்கப்படுகிறது. டாப் வேரியண்டான Nissan Magnite Tekna Plus HRAO ரூபாய் 13.59 லட்சத்திற்கு விற்கப்படுகிறது.
மைலேஜ் எப்படி?
இந்த கார் 19.9 கிலோ மீட்டர் மைலேஜ் தரும் ஆற்றல் கொண்டது ஆகும். இந்த காரில் Magnite Visia, Nissan Magnite Acenta,N-Connecta, Kuro Edition, Tekna, Acenta HRAO என மொத்தம் 48 வேரியண்ட்கள் உள்ளது. இந்த காரில் மேனுவல் வேரியண்ட் மட்டுமின்றி ஆட்டோமெட்டிக் வேரியண்டும் உள்ளது. இந்த கார் 160 என்எம் மற்றும் 152 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது.
சிறப்பம்சங்கள்:
இந்த காரின் உட்கட்டமைப்பும் அசத்தலாகவே உள்ளது. இந்த காரில் பல்வேறு வசதிகள் கொண்ட தொடுதிரை கொண்ட தகவல் திரை உள்ளது. வயர்லஸ் சார்ஜர் வசதி உள்ளது. இந்த காரின் அனைத்து வேரியண்டிலும் 6 சிக்ஸ்பேக்குகள் உள்ளது. எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ஏபிஎஸ் வசதி உள்ளது.
பார்க்கிங் சென்சாருடன் கூடிய கேமரா உள்ளது. மலைப்பகுதியில் பயணிப்பதற்கான ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், டயர் ப்ரசர் மானிடரிங் வசதி உள்ளது. இந்த காருக்கு NCAP 5 ஸ்டார் பாதுகாப்பு தரக்குறியீடு அளித்துள்ளது. இந்த வாகனத்தின் தோற்றமும், நிறமும் வாடிக்கையாளர்களை கவர்கிறது. இந்த காருக்கு வாடிக்கையாளர்கள் 5க்கு 4.5 ஸ்டார் அளித்துள்ளனர்.
பட்ஜெட் விலையில் அனைத்து வசதிகளுடனும் கார் வாங்க வேண்டும் என்று விரும்பும் பலரது தேர்வாக இந்த கார் உள்ளது. நெருக்கடி மிகுந்த சாலைகளிலும், நெடுஞ்சாலைகளிலும் செல்ல இந்த கார் ஏற்ற காராக உள்ளது. இந்த கார் தொடர்ந்து வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
Car loan Information:
Calculate Car Loan EMI