New Gen Fortuner: நடப்பாண்டிலேயே இந்திய சந்தையில் அறிமுகமாக வாய்ப்புள்ள, அடுத்த தலைமுறை ஃபார்ட்சுனரில் வரப்போகும் முக்கியமான 5 அப்டேட்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
புதிய தலைமுறை ஃபார்ட்சுனர்:
இந்திய சந்தையில் தற்போது விற்பனையில் இரண்டாவது தலைமுறை டொயோட்டா ஃபார்ட்சுனருக்கான வயது கிட்டத்தட்ட 10-க்கும் மேலாகிறது. ஆனாலும், அதற்கான தேர்வு என்பது சற்றும் குறைவானதாக இல்லை. இதற்கான மாற்றாக முற்றிலும் புதிய ஃபார்ட்சுனர் கார் மாடல் தயாராகி வருகிறது. அடுத்த 12 மாதங்களில் அந்த வாகனம் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அடுத்த தலைமுறை ஃபார்ட்சுனரில் இடம்பெறப்போகும் டாப் 5 அப்டேட்கள் என்ன என்பது குறித்த விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
புது ஃபார்ட்சுனர் - டயங்கரமான 5 அப்டேட்கள்:
1. ஃபார்ட்சுனர் - கூர்மையான வெளிப்புறம்
கடந்த ஆண்டு ப்ராண்ட் சார்பில் சந்தைக்கு வந்த 9வது தலைமுறை ஹிலக்ஸ் மாடலில் அறிமுகமான சைபர் சுமோ என்ற டிசைன் மொழியின் அடிப்படையில், புதிய தலைமுறை ஃபார்ட்சுனரின் வெளிப்புறம் கூர்மையாக இருக்கும் என கருதப்படுகிறது. மெல்லிய முகப்பு விளக்குகள் மற்றும் டெயில் லைட்கள் மற்றும் கூர்மையான பம்பர்கள், எம்பிவிக்கு உறுதியான மற்றும் கூர்மையான தோற்றத்தை வழங்கக் கூடும். காரின் மேற்புறத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில மாடல்களில் மட்டும், டூயல் பேன் பனோரமிக் சன்ரூஃப் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
2. ஃபார்ட்சுனர் - தத்ரூபமான உட்புறம்
புதிய தலைமுறை ஃபார்ட்சுனரின் உட்புறமானது வாடிக்கையாளர்களால் மிகவும் விரும்பப்படும் கடினாமான தன்மையை அப்படியே தக்கவைப்பதோடு, முழுமையாக புதிய மற்றும் கவனிக்கத்தக்க க்ளாசியராக மேம்படுத்தப்படும் என கூறப்படுகிறது. பல்வேறு அடடுக்குகளை கொண்ட கிடைமட்டமான டேஷ்போர்ட் பொருத்தப்பட உள்ளது. இது மெல்லிய மற்றும் நவீன தோற்றத்தை வழங்கக் கூடும். ஸ்டியரிங் வீலானது முற்றிலும் புதியதாக வழங்கப்பட உள்ளது. அதில் சங்க்கி ஸ்போக்ஸ் மற்றும் ஆக்டகனல் செண்டர் பாட் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. செண்டர் கன்சோலும் புதிய டிசைனை பெற உள்ளது. கூடுதல் அகலம் மூலம் அதிகப்படியான சேமிப்பு வசதி மற்றும் சொகுசு அனுபவத்தை வழங்குகிறது. ஆட்டோ ஹோல்ட் ஃபங்க்சனுடன் கூடிய எலெக்ட்ரானிக் பார்கிங் ப்ரேக்கானது இடவசதியை மேலும் மேம்படுத்துகிறது.
3. ஃபார்ட்சுனர் - ADAS தொழில்நுட்பம்
தற்போதுள்ள ஃபார்ட்சுனரில் இடம்பெற்றுள்ள ஹைட்ராலிக் ஸ்டியரிங் வீலிற்கு மாற்றாக, புதிய தலைமுறை மாடலில் எலெக்ட்ரானிக் பவர் ஸ்டியரிங் வசதி இடம்பெற உள்ளது. இதன் மூலம் ப்ராண்டின் புதிய டொயோட்டா சேஃப்டி சென்ஸ் எனப்படும் ADAS தொழில்நுட்பத்திற்கு வழிவகை செய்யப்படுகிறது. இரண்டாவது தலைமுறை ஃபார்ட்சுனரை போலில்லாமல் இந்த புதிய எடிஷனில் டைனமிக் ரேடார் க்ரூஸ் கண்ட்ரோல், லேன் ட்ரேசிங் அசிஸ்ட், லேன் டிபார்ட்சர் அலெர்ட், ப்ரி-கொலிசன் சேஃப்டி சிஸ்டம், ரோட் சைன் அசிஸ்ட் போன்ற அம்சங்களும் டாப் வேரியண்டில் இடம்பெற வாய்ப்புள்ளது.
4. ஃபார்ட்சுனர் - டிஜிட்டல் காக்பிட்
அடுத்த தலைமுறை டொயோட்டா ஃபார்ட்சுனரில் 12.3 இன்ச் ஃபுல்லி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர் மற்றும் 12.3 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்பட உள்ளது. இன்ஃபோடெயின்மெண்டில் வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் வயர்லெஸ் ஆண்ட்ராய்ட் ஆட்டோ, சாட்டிலைட் நேவிகேஷன், வாய்ஸ் ரிகக்னைஷன் மற்றும் விரிவுபடுத்தப்பட்ட கனெக்டட் கார் சர்வீஸ் போன்ற அம்சங்களும் இடம்பெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
5. ஃபார்ட்சுனர் - வெண்டிலேட்ட் சீட்ஸ்
தற்போதைய ஃபார்ட்சுனரில் வெண்டிலேடட் ஆப்ஷன்களை டொயோட்டா வழங்கவில்லை. ஆனால் அடுத்த தலைமுறை மாடலில், குறைந்தபட்சம் டாப் வேரியண்டின் முதல் வரிசை இருக்கையில் மட்டும் வெண்டிலேடட் இருக்கைகள் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
ஃபார்ட்சுனர் - விலை, வெளியீடு
நடப்பாண்டின் இறுதி அல்லது அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் புதிய தலைமுறை ஃபார்ட்சுனர் சந்தைப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் எரிபொருள் திறனுக்காக இதில் இடம்பெற்றுள்ள 2.8 லிட்டர் டீசல் இன்ஜின் ஆனது, 48V மைல்ட் ஹைப்ரிட் சிஸ்டத்தை பெறக்கூடும். இதன் தொடக்க விலையே 35 லட்சத்திற்கும் அதிகமாக நிர்ணயிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
Car loan Information:
Calculate Car Loan EMI