Tata Punch Facelift: மேம்படுத்தப்பட்ட எடிஷன் மூலம் அதிகளவில் விற்பனையாகும் கார் என்ற இடத்திற்கு,பஞ்ச் மாடலை மீண்டும் தள்ள டாடா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 

Continues below advertisement

விட்டதை பிடிக்க பஞ்ச் தீவிரம்:

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கடந்த 40 ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் அதிகம் விற்பனையாகும் கார் மாடலை கொண்ட நிறுவனமாக மாருதி சுசூகி திகழ்ந்தது. ஆனால், கடந்த 2024ம் ஆண்டில் அந்த சாதனை பயணத்தை முடிவுக்கு கொண்டு வந்து,  டாடா நிறுவனத்தின் மைக்ரோ எஸ்யுவி ஆன பஞ்ச் முதலிடம் பிடித்து அசத்தி ஆச்சரியப்படுத்தியது. ஆனாலும், ஒரே வருடத்தில் மாருதி சுசூகி அந்த சாதனையை வசப்படுத்தியுள்ளது. எனவே விட்டதை பிடிக்க வேண்டும் என்ற நோக்கில், இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் புதிய பஞ்ச் கார் மாடலை களமிறக்க டாடா திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் ப்ராண்டின் ஒட்டுமொத்த விற்பனையை மேம்படுத்தவும் டாடா தீவிரம் காட்டுகிறதாம்.

Continues below advertisement

பொங்கல் பரிசாக பஞ்ச் ஃபேஸ்லிஃப்ட்

பஞ்ச் கார் மாடலுக்கு அவசியமான மிட்-லைஃப் ஃபேஸ்லிப்ஃட் வழங்கப்பட்டு, பொங்கலை முன்னிட்டு வரும் ஜனவரி 13ம் தேதி புதிய எடிஷன் சந்தைப்படுத்தப்பட உள்ளதாம். இதற்காக டீசர் ஒன்றை வெளியிட்டுள்ள நிறுவனம், புடிய பஞ்சின்வெளிப்புற டிசைன்களை டீஸ் செய்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு முதல்முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட பஞ்ச் கார் மாடலானது, தற்போது ப்ராண்ட் சார்பில் விற்பனையாகும் மிகச்சிறந்த காராக திகழ்வது குறிப்பிடத்தக்கது.

பஞ்ச் ஃபேஸ்லிஃப்ட் - வெளிப்புற டிசைன்:

டீசர் அடிப்படையில் புதிய பஞ்ச் ஃபேஸ்லிஃப்ட் ஆனது, முன்பு இருந்ததை காட்டிலும் ஆக்ரோஷமானதகாவும், எஸ்யுவி ஆகவும் இருக்கும் என்பது தெரியவந்துள்ளது. புதிய  எல்இடி முகப்பு விளக்குகள், ஃபாக் விளக்குகள், ஸ்லீக் ஆன பகல்நேரங்களில் ஒளிரும் விளக்குகள், புதிய முன்புற க்ரில், புத்துயிரூட்டப்பட்ட முன்புற பம்பர், ஆகியவை கட்டுமஸ்தானாகவும், வெளிப்புறத்தில் வழங்கப்பட்டுள்ள கவனிக்கத்தக்க அப்டேட்களாகவும் உள்ளன. பின்புறமானது கனெக்டட் டெயில் லேம்ப் செட்-அப்பை பெறும். கூடுதலாக டூயல் டோன் அலாய் வீல்கள் வழங்கப்படுவதையும் டீசர் காட்டுகிறது. ஒட்டுமொத்தமாக டாடா நிறுவனமானது மேம்படுத்தப்பட்ட டிசைன் மூலம், மிகவும் தீவிரமான எஸ்யுவி போன்ற தோற்றத்தை பஞ்ச் மாடலுக்கு வழங்க முயன்றுள்ளது. இதற்கான முழு பலனை வெளியீட்டின்போது மட்டுமே அறிய முடியும்.

பஞ்ச் ஃபேஸ்லிஃப்ட் - உட்புற அம்சங்கள்

ஃபேஸ்லிஃப்டானது பஞ்ச் காரை டிசைனில் அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதோடு, ப்ராண்டின் அண்மைக்கால மாடல்களில் உள்ள அம்சங்களின் தாக்கத்தை பெறவும் உதவுகிறது. ஸ்டைலிங் மற்றும் அம்சங்களை கருத்தில் கொண்டால்,  இன்ஜின் அடிப்படையிலான பஞ்ச் மாடலானது மின்சார எடிஷனிலிருந்து பெரிய அளவில் மாறுபட்டு இருக்காது.  அதேநேரம், புதிய பஞ்சின் உட்புறத்தில் வழங்கப்பட்டுள்ள அப்டேட்கள் குறித்த தகவல்கள் இன்னும் ரகசியமாகவே உள்ளன. ஆனால் இந்த மைக்ரோ எஸ்யுவியில் 10.25 இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், முற்றிலுமான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர், புதிய ஸ்டியரிங் வீல், திருத்தப்பட்ட டேஷ்போர்ட் லே-அவுட் மற்றும் புதிய அப்ஹோல்ஸ்ட்ரி ஆகியவை எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதலாக 360 டிகிரி பார்கிங் கேமரா மற்றும் ADAS போன்ற அம்சங்களும் இந்த காரில் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

பஞ்ச் ஃபேஸ்லிஃப்ட் - இன்ஜின், விலை விவரங்கள்

இன்ஜின் அடிப்படையில் ஃபேஸ்லிஃப்ட் எடிஷனில் எந்த மாற்றமும் இருக்காது என கூறப்படுகிறது. அதன்படி, பழக்கமான 1.2 லிட்டர் 3 சிலிண்டர்  நேட்சுரலி ஆஸ்பிரேடட் இன்ஜின் ஆனது சிஎன்ஜி ஆப்ஷனிலும் கிடைக்கிறது. இது 87 bhp மற்றும் 115 Nm ஆற்றலை உற்பத்தி செய்யும் திறனை கொண்டுள்ளது. 5 ஸ்பீட் மேனுவல் மற்றும் 5 ஸ்பீட் ஆட்டோமேடட் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களை பயனர்கள் தேர்வு செய்யலாம். சென்னையில் தற்போதைய பஞ்ச் கார் மாடலின் ஆன் - ரோட் விலையானது 6.62 லட்சத்தில் தொடங்கி 11.31 லட்சம் வரை நீள்கிறது. புதிய அம்சங்கள் மற்றும் டிசைன் மேம்படுத்தலை கருத்தில் கொண்டால், பஞ்ச் ஃபேஸ்லிஃப்டின் விலை சற்றே அதிகரிக்கலாம் என கருதப்படுகிறது.


Car loan Information:

Calculate Car Loan EMI