New Renault Duster: ரெனால்ட் நிறுவனத்தின் புதிய தலைமுறை டஸ்டர் கார் மாடல், அடுத்த ஆண்டு இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. 


New Renault Duster:


ரெனால்ட் பேட்ஜ் கொண்ட புதிய தலைமுறை டஸ்ட்டரின் முதல் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.  2025 ஆம் ஆண்டில் இந்த எஸ்யூவிதான் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட வாய்ப்புள்ளது. முன்னதாக புதிய டேசியா டஸ்டர் தொடர்பான புகைப்படங்கள் வெளியான நிலையில், புதிய ரெனால்ட் எடிஷன் பெரிய அளவில் எந்த மாற்றங்களையும் எதிர்கொள்ளாமல் உள்ளது. ஆனால், நிச்சயமாக ரெனால்ட் லோகோவில் தான் வருகிறது.


New Renault Duster வடிவமைப்பு:


வடிவமைப்பு புட்ச் (BUTCH) போல் தெரிகிறது மற்றும் ஒரு பரந்த, சரியான SUV போன்ற வலுவான கட்டமைப்பை கொண்டுள்ளது. கிரில்லில் ஒரு பெரிய ரெனால்ட் பேட்ஜ் உள்ளது மற்றும் லைட்டிங் சிக்னேச்சர் பிக்ஸ்டர் கான்செப்ட்டைப் போன்று அமைந்துள்ளது. V வடிவ விளக்குகள், தடிமனான கிளாட்டிங் மற்றும் பாக்ஸி ஸ்டைலிங்கான தோற்றத்தயும் கொண்டுள்ளது. புதிய டஸ்டரில் 17 அல்லது 18 இன்ச் வீல்களை எதிர்பார்க்கலாம். அதே நேரத்தில் புதிய தலைமுறை டஸ்டர் அதன் முரட்டுத்தனத்தையும் பராமரிக்கும்.


உட்புற வசதிகள்:


ஒரு சிறிய உட்புறத்துடன்,  ஒரு பெரிய 10 அங்குல தொடுதிரை இருக்கும்.  அதே நேரத்தில் ஒரு புதிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரும் வழங்கப்பட்டுள்ளது. செயல்பாட்டு SUV இந்த மாடலில் போதுமான அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. 4,343 மிமீ நீளத்துடன், டஸ்டர் மாடலானது கிரேட்டா மற்றும் செல்டோஸ் போன்றவற்றுடன் போட்டியிடும் அதே வேளையில், கடினமான ஸ்கார்பியோவுடன் ஓரளவு போட்டியிடும் என கணிக்கப்பட்டுள்ளது.


எதிர்பார்ப்புகள் என்ன?


புதிய டஸ்டர் பெட்ரோலாக மட்டுமே இருக்கும். ஆனால் இந்தியாவில் லேசான கலப்பினமும், 4x4 பதிப்பும் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகளவில் இரண்டு மின்சார மோட்டார்கள் கொண்ட புதிய முழு கலப்பின பதிப்பு உள்ளது, இது நகரத்தில் 80 சதவீத மின்சார ஓட்டுதலையும் 543 கிமீ பயண வரம்பையும் உறுதியளிக்கிறது. 4x4 வெர்ஷனானது லேசான கலப்பினத்துடன் கிடைக்கிறது.


எதிர்கால திட்டங்கள்:


ரெனால்ட் சமீபத்தில் இந்தியாவிற்கான தனது திட்டங்களை அறிவித்தது. அதில் புதிய எஸ்யூவி மற்றும் 7-சீட்டர் எஸ்யூவியும் அடங்கும். இது புதிய ரெனால்ட் டஸ்டர் மற்றும் புதிய டஸ்டரின் 7-சீட்டர் பதிப்பாக இருக்கலாம். இந்த பிராண்ட் ரெனால்ட் நிறுவனத்திற்கு பிரபலமான ஒன்றாக இருப்பதால், விரைவில் டஸ்டர் மீண்டும் இந்திய சந்தைக்கு வந்து, தற்போது அதிக செயல்திறன் கொண்ட பிரிவுகளில் ஒன்றான காம்பாக்ட் எஸ்யூவி பிரிவில் பங்கேற்க வாய்ப்புள்ளது. மைல்ட் ஹைப்ரிட் டஸ்டர் முதலில் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், முழு ஹைப்ரிட் வந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.


Car loan Information:

Calculate Car Loan EMI