மேலும் அறிய

Mitsubishi Pajero: கரடுமுரடாக கம்பேக் கொடுத்த மிட்சுபிஷி 7 சீட்டர் - பஜேரோ டீசல் எஸ்யுவியின் விலை, அம்சங்கள், வசதிகள்

Mitsubishi Pajero: மிட்சுபிஷி நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட பஜேரோ 7 சீட்டர் எஸ்யுவி கார் மாடலானது சர்வதேச சந்தையில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Mitsubishi Pajero: மிட்சுபிஷி நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட பஜேரோ 7 சீட்டர் எஸ்யுவி குறித்த முழு விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

கம்பேக் தந்த மிட்சுபிஷி பஜேரோ

மிட்சுபிஷி நிறுவனம் தனது மிகவும் பிரபலமான எஸ்யுவிக்களில் ஒன்றான பஜேரோவை புதிய தலைமுறை மூலம் மேம்படுத்தி, முற்றிலும் புதிய மாடலாக சர்வதேச சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.  இது ப்ராண்டின் முதன்மையான கார் மாடலாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இந்த காரானது கடந்த காலங்களில் இருந்த தனது ஐகானிக் அடிப்படை அம்சங்களை அப்படியே தக்கவைத்துள்ளது. அதில் பெயர், லேடர் ஃப்ரேம் கட்டமைப்பு, டீசல் இன்ஜின் மற்றும் சீரிஸ் 4 வீல் ட்ரைவ்  ஹார்ட்வேர் ஆகியவை அடங்கும். அதேநேரம், இன்றைய காலத்திற்கு ஏற்ப கூடுதல் தொழில்நுட்பம், வசதிகள் மற்றும் ப்ரீமியம் அம்சங்கள் ஆகியவை கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன.

மிட்சுபிஷி பஜேரோ இந்தியாவிற்கு வருமா?

புதிய பஜேரோ கார் மாடலானது தாய்லாந்தில் உற்பத்தி செய்யப்பட உள்ளது. தொடர்ந்து அங்கு தான் முதலில் விற்பனைக்கும் கொண்டுவரப்பட உள்ளது. அதன் நீட்சியாக ஜப்பான், ஆஸ்திரேலியா  ஆகிய நாடுகளில் நடப்பு நிதியாண்டிலேயே சந்தைப்படுத்தப்பட உள்ளது. பிறகு ஆசிய நாடுகள், லத்தீன் அமெரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள் உள்ளிட்ட பிராந்தியங்கள் உட்பட 100 நாடுகளில் பஜேரோ விற்பனைக்கு வரவுள்ளது. ஆனால், இந்தியாவிற்கு வருவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் இல்லை. 20 ஆண்டுகளுக்கு முன்பாக அறிமுகமான பஜேரோ, கடந்த 2021ம் ஆண்டு சந்தையில் இருந்து வெளியேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மிட்சுபிஷி பஜேரோ - டிசைன் விவரங்கள்

மாடர் யுகத்திற்கேற்ப மிகப்பெரிய அளவில் மேம்படுத்தப்பட்டு இருந்தாலும், முந்தைய தலைமுறையின் தாக்கம் பஜேரோவில் ஆங்காங்கே இடம்பெற்றுள்ளது. நேர்த்தியான அளவீடுகளும் வலுவான கிடைமட்டக் கோடுகளும் அசல் பஜேரோவின் தாக்கத்தில் வழங்கப்பட்டுள்ளன.  அதே சமயம் எடுப்பான ஃபெண்டர்கள் இந்த புதிய எஸ்யூவிக்கு அகலமான மற்றும் திடமான தோற்றத்தை கொடுக்கின்றன. முன்பக்கத்தில் தனித்துவமான T-வடிவ ஹெட்லைட்டுகளுடன், கிடைமட்டப் பட்டைகள் அல்லது ஹனிகாம்ப் வடிவம் என இரண்டு வகையான க்ரில் வடிவமைப்புகளும் கிடைக்கின்றன. சி-பில்லர், முதல் தலைமுறை பஜேரோவின் ரோல்-பார் வடிவமைப்பிலிருந்து தாக்கத்தை பெற்றுள்ளது. 

அளவீடுகளை பொறுத்தவரை , புதிய பஜேரோ 4,920 மிமீ நீளம், 1,925 மிமீ அகலம் மற்றும் 1,910 மிமீ உயரம் மற்றும் வீல்பேஸ் 2,870 மிமீ கொண்டுள்ளது. க்ரவுண்ட் க்ளியரன்ஸ் 230 மிமீ ஆக உள்ளது. ஆஃப்-ரோடு ஓட்டுதலுக்காக, இது 30.4 டிகிரி அப்ரோச் ஆங்கிள், 22.6 டிகிரி ரேம்ப் பிரேக்ஓவர் ஆங்கிள் மற்றும் 25.8 டிகிரி டிபார்ட்சர் ஆங்கிள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. மிட்சுபிஷி 52:48 என்ற முன்-பின் எடைப் பங்கீட்டை அடைந்துள்ளது.

இதையும் படியுங்கள்: Best SUV: வாழ்க்கை முழுமைக்கும் ஒரே பெஸ்ட் காரை ஓட்டனுமா? உங்களுக்கான சிறந்த மாடல்கள் - டாப் 5 சாய்ஸ் இதோ

மிட்சுபிஷி பஜேரோ - உட்புற அம்சங்கள், வசதிகள்

வெளிப்புறத் தோற்றத்தை விட, உட்புறம் மிகவும் நவீனமான வடிவமைப்பைக் கொண்டுள்ளது. டாப்-ஸ்பெக் வேரியண்ட்களில் இரண்டு 14.3-இன்ச் திரைகள், லெதர் அப்ஹோல்ஸ்டரி,  பனோரமிக் சன்ரூஃப் மற்றும் டிரிபிள் ஸோன் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் ஆகியவை வழங்கப்படுகின்றன. டேஷ்போர்ட், டான் மற்றும் கருப்பு டட்ரிம்களைக் கொண்டுள்ளது. பிரதான டச்ஸ்கிரீனுக்குக் கீழே பிசிக்கல் கன்ட்ரோல்கள் அமைந்துள்ளன. ஒரு ஆஃப்-ரோடு டிஸ்ப்ளே, உயரம், ரோல் ஆங்கிள் மற்றும் பிட்ச் ஆங்கிள் ஆகியவற்றைக் காட்டுகிறது. கியர் லீவருக்கு அருகில் ஒரு ரோட்டரி டெரெய்ன் செலக்டர் அமைந்துள்ளது.

மிட்சுபிஷி பஜேரோ - பவர்ட்ரெயின் விவரங்கள்

டிரைட்டனின் 2.4-லிட்டர் நான்கு-சிலிண்டர் டர்போசார்ஜ்டு டீசல் இன்ஜினின் புதிய எடிஷன் பஜேரோவில் இடம்பெற்றுள்ளது. டிரைட்டனின் இரட்டை-டர்போ அமைப்புக்கு பதிலாக பஜேரோவில் ஒற்றை டர்போசார்ஜர் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் வெளியீடு 201 hp மற்றும் 480 Nm ஆக உள்ளது. மேம்படுத்தப்பட்ட 8 ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் நான்கு சக்கரங்களுக்கும் சக்தியை அனுப்புகிறது. இந்த 4 வீல் ட்ரைவ் அமைப்பு சாதாரண தார் சாலைகள் மற்றும் கரடுமுரடான பாதைகளில் ஓட்டுவதை ஆதரிக்கிறது.

பஜேரோவில் ஹைப்ரிட் ஆப்ஷன் வருமா?

மிட்சுபிஷி நிறுவனம் ஹைப்ரிட் மற்றும் ப்ளக்-இன் ஹைப்ரிட் எடிஷன்களையும் பரிசீலனையில் வைத்துள்ளது, ஆனால் V6 போன்ற பெரிய இன்ஜின் திட்டமிடப்படவில்லை. புதிய பஜேரோ, ஃபோர்டு எவரெஸ்ட் மற்றும் டொயோட்டா பிராடோவிற்குப் போட்டியாக GLX, GLS, எக்ஸீட் மற்றும் GSR கிரேடுகளில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

Mitsubishi Pajero: கரடுமுரடாக கம்பேக் கொடுத்த மிட்சுபிஷி 7 சீட்டர் - பஜேரோ டீசல் எஸ்யுவியின் விலை, அம்சங்கள், வசதிகள்
கரடுமுரடாக கம்பேக் கொடுத்த மிட்சுபிஷி 7 சீட்டர் - பஜேரோ டீசல் எஸ்யுவியின் விலை, அம்சங்கள், வசதிகள்
Best SUV: வாழ்க்கை முழுமைக்கும் ஒரே பெஸ்ட் காரை ஓட்டனுமா? உங்களுக்கான சிறந்த மாடல்கள் - டாப் 5 சாய்ஸ் இதோ
வாழ்க்கை முழுமைக்கும் ஒரே பெஸ்ட் காரை ஓட்டனுமா? உங்களுக்கான சிறந்த SUV-க்கள் - டாப் 5 சாய்ஸ் இதோ
Brezza Top Model on EMI: ரூ.2 லட்சம் இருக்கா.? அட்டகாசமான மாருதி பிரெஸ்ஸா டாப் மாடலே வாங்கலாம்; EMI எவ்ளோ வரும்னு பாருங்க
ரூ.2 லட்சம் இருக்கா.? அட்டகாசமான மாருதி பிரெஸ்ஸா டாப் மாடலே வாங்கலாம்; EMI எவ்ளோ வரும்னு பாருங்க
Hector Tomahawk First Look: எம்ஜி ஹெக்டர் டோமாஹாக் முதல் பார்வை; கம்பீரமான எஸ்யூவியின் ஈர்க்கும் 5 முக்கிய அம்சங்கள் இதோ
எம்ஜி ஹெக்டர் டோமாஹாக் முதல் பார்வை; கம்பீரமான எஸ்யூவியின் ஈர்க்கும் 5 முக்கிய அம்சங்கள் இதோ
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வழக்குகளால் திண்டாடிய ஆசிரியர்கள், விவசாயிகள்.. ஒரே அறிவிப்பில் அனைத்தையும் தீர்த்த விஜய்!
வழக்குகளால் திண்டாடிய ஆசிரியர்கள், விவசாயிகள்.. ஒரே அறிவிப்பில் அனைத்தையும் தீர்த்த விஜய்!
CM Vijay: புதிய கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், ஆவடிக்கு 24 மணி நேரமும் சேவை - புதிய அறிவிப்புகளால் அதிரவிட்ட விஜய்
புதிய கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், ஆவடிக்கு 24 மணி நேரமும் சேவை - புதிய அறிவிப்புகளால் அதிரவிட்ட விஜய்
விஜய் தான் அடுத்த PM.! அப்போ ராகுல் காந்தி.? ஜோதிடம் கணித்த கனிமொழி MLA- என்ன சொல்லியிருக்கார் தெரியுமா.?
விஜய் தான் அடுத்த PM.! அப்போ ராகுல் காந்தி.? ஜோதிடம் கணித்த கனிமொழி MLA- என்ன சொல்லியிருக்கார் தெரியுமா.?
Mitsubishi Pajero: கரடுமுரடாக கம்பேக் கொடுத்த மிட்சுபிஷி 7 சீட்டர் - பஜேரோ டீசல் எஸ்யுவியின் விலை, அம்சங்கள், வசதிகள்
கரடுமுரடாக கம்பேக் கொடுத்த மிட்சுபிஷி 7 சீட்டர் - பஜேரோ டீசல் எஸ்யுவியின் விலை, அம்சங்கள், வசதிகள்
Esakki Subaya: தவெகவுடன் மனக்கசப்பா?.. MLA பதவியை மீண்டும் கேட்கும் இசக்கி சுப்பையா.. காரணம் இதுதான்!
Esakki Subaya: தவெகவுடன் மனக்கசப்பா?.. MLA பதவியை மீண்டும் கேட்கும் இசக்கி சுப்பையா.. காரணம் இதுதான்!
Maternity Leave : ஒரு வருடம் தொடர் விடுமுறை.! மகளிர் எதிர்பார்த்த சூப்பரான அறிவிப்பு - வெளியானது அரசாணை
ஒரு வருடம் தொடர் விடுமுறை.! மகளிர் எதிர்பார்த்த சூப்பரான அறிவிப்பு - வெளியானது அரசாணை
நன்றி மறந்த என்எல்சி; 347 தொழிலாளர்கள் டிஸ்மிஸ்: 713 பேரை நீக்கத் திட்டம்- அரசு உடனே தலையிடக் கோரிக்கை!
நன்றி மறந்த என்எல்சி; 347 தொழிலாளர்கள் டிஸ்மிஸ்: 713 பேரை நீக்கத் திட்டம்- அரசு உடனே தலையிடக் கோரிக்கை!
நாடு முழுவதும் சர்க்கரை தட்டுப்பாட்டுக்கு மத்தியில் படாளம்ஆலை மூடல்? 30,000 விவசாயிகள் கவலை
நாடு முழுவதும் சர்க்கரை தட்டுப்பாட்டுக்கு மத்தியில் படாளம்ஆலை மூடல்? 30,000 விவசாயிகள் கவலை
Embed widget