இந்தியாவில் பட்ஜெட் விலை கார் தயாரிப்பில் மிகவும் பிரபலமான நிறுவனம் மாருதி சுசுகி. இவர்களின் மிகவும் பிரபலமான கார்களில் ஒன்று Maruti Suzuki Wagon R. இந்த கார் மிகவும் பிரசித்தி பெற்ற ஹேட்ச்பேக் கார் ஆகும்.

Continues below advertisement

அறிமுகம் Maruti Suzuki Wagon R:

புதிய அப்டேட் செய்யப்பட்ட Maruti Suzuki Wagon R கார் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகமாக உள்ளது. இந்த கார் பரிசோதனை ஓட்டம் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதன் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. 

Maruti Suzuki Wagon R கார் புகழ்பெற்ற காராக இருந்தாலும் அவர்கள் தற்போது வரை 1.2 லிட்டர் 4 சிலிண்டர் கே சீரிஸ் பெட்ரோல் எஞ்ஜின் பொருத்தப்பட்டே விற்பனையாகி வருகிறது. புதியதாக அறிமுகமாக உள்ள கார்களில் இசட் சீரிஸ் எஞ்ஜின் பொருத்தப்பட உள்ளது. தற்போது வேகன்ஆர் காரில் பயன்படுத்தப்படும் கே சீரிஸ் காருக்கு பதிலாக இசட் சீரிஸ் எஞ்ஜின் பொருத்தப்பட்டால் இதன் ஆற்றல், டார்க் இழுதிறன் அதிகரிக்கும். 

Continues below advertisement

மைலேஜ்:

மேலும், மைலேஜ் அதிகளவில் தருவதற்கான வாய்ப்புகள் பிரகாசம். வேகன்ஆர் கார் ஏற்கனவே நல்ல மைலேஜ் அளித்து வருகிறது. தற்போது சமீபத்தில் கே சீரிஸ் எஞ்ஜினில் இருந்து இசட் சீரிஸ் எஞ்ஜினுக்கு மாற்றப்பட்ட பலேனா கார் 23.80 கிலோமீட்டர் மைலேஜில் இருந்து 24.77 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது.

மாருதி வேகன்ஆர் சிஎன்ஜி வெர்சனுக்கு மைலேஜ் மேலும் அதிகரித்துள்ளது. பலேனே காரின் இசட் எஞ்ஜின் சீரிஸில் அறிமுகமாகியுள்ள 33.61 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. தற்போது அறிமுகமாகியுள்ள 7 இன்ச் டச் ஸ்கிரீன், ஸ்டீயரிங் மவுண்டட் கன்ட்ரோல்ஸ், ஆறு ஏர்பேக்குகள், ஏபிஎஸ் வித் இபிடி வசதி, ரியர் பார்க்கிங் சென்சார்ஸ் வசதிகள் உள்ளது. 

விலை எப்படி?

புதியதாக அறிமுகமாக உள்ள மாருதி வேகன்ஆர் காரில் இந்த சிறப்பம்சங்களை காட்டிலும் கூடுதல் சிறப்பம்சங்கள் காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதுள்ள மாருதி வேகன்ஆர் விலை ரூபாய் 5.91 லட்சம் முதல் ரூபாய் 8.35 லட்சம் வரை விற்கப்படுகிறது. சந்தையில் புதியதாக அறிமுகப்படுத்த உள்ள Maruti Suzuki Wagon R காரின் விலையும் வாடிக்கையாளர்களுக்கு ஏற்ப பட்ஜெட் விலையிலே அறிமுகமாகும் என்று கருதப்படுகிறது.


Car loan Information:

Calculate Car Loan EMI