Maruti SUV Y17 Escudo: மாருதி நிறுவனத்தின் புதிய 5 சீட்டர் எஸ்யுவி எஸ்குடோ என்ற பெயரில் சந்தைப்படுத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.
மாருதியின் புதிய 5 சீட்டர் எஸ்யுவி:
மாருதி நிறுவனம் எதிர்வரும் விழாக்காலத்தை கருத்தில் கொண்டு, இன்ஜின் அடிப்படையிலான தனது புதிய எஸ்யுவியை இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அறிமுகப்படுத்த திட்ட்யமிட்டுள்ளது. இந்த கார் எஸ்குடோ என்ற பெயரில் சந்தைப்படுத்தப்படலாம் என்றும், தற்போதைக்கு Y17 என்ற குறியீட்டு பெயர் வழங்கப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய காரானது மாருதியின் போர்ட்ஃபோலியோவில் பிரேஸ்ஸா மற்றும் கிராண்ட் விட்டாரா மாடலுக்கு நடுவே நிலைநிறுத்தப்பட உள்ளது. ஆரம்பத்தில் 3 வரிசையில் 7 இருக்கைகளை கொண்ட காராக இருக்கும் என கூறப்பட்ட நிலையில், தற்போது அது 5 இருக்கைகளை கொண்ட காராக உற்பத்தி செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வடிவமைப்பு விவரங்கள்:
அதிக வாடிக்கையாளர்களை கொண்டிருக்கும் மிட்-சைஸ் எஸ்யுவி செக்மெண்டில் ஆதிக்கம் செலுத்தும் நோக்கில் தான், 5 சீட்டர் காராக இது வடிவமைக்கப்பட்டுள்ளதாம். தற்போது இந்த செக்மெண்டில் ஹுண்டாயின் கிரேட்டா மற்றும் கியாவின் செல்டோஸ் ஆதிக்கம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. கிராண்ட் விட்டாராவுடன் ஒப்பிடுகையில், புதிய எஸ்யுவிவின் விலை அணுகக் கூடியதாகவும், அம்சங்கள் நிறைந்ததாகவும் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாகவே நெக்ஸாவிற்கு பதிலாக அரேனாவிற்கு ஷோரூமில் இதனை விற்பனை செய்ய மாருதி முடிவு செய்துள்ளதாம். மூன்றாவது வரிசை இருக்கை இல்லாவிட்டாலும், கிராண்ட் விட்டாராவின் 4.334 மீட்டரை காட்டிலும் நீளமானதாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. விட்டாராவில் உள்ள 373 லிட்டர் பூட் வசதியை காட்டிலும் அதிகமாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது. இதனால் குடும்பமாக பயணிக்க ஏதுவாக இருக்கலாம்.
பவர்ட்ரெயின் ஆப்ஷன்கள்:
ஏற்கனவே வெளியான தகவல்களின்படி, புதிய எஸ்யுவி ஆனது நிலையான கிராண்ட் விட்டாரவை போன்றே குளோபல் சி பிலாட்ஃபார்மில் தான் உற்பத்தி செய்யப்படுகிறதாம். அதன்படி, கிராண்ட் விட்டாராவில் உள்ள 104எச்பி ஆற்றலை உற்பத்தி செய்யக்கூடிய1.5 லிட்டர் நேட்சுரலி ஆஸ்பிரேடட் பெட்ரோல் இன்ஜின், 88எச்பி ஆற்றலை உற்பத்தி செய்யக்கூடிய சிஎன்ஜி மற்றும் 116 எச்பி ஆற்றலை உற்பத்தி செய்யக்கூடிய 1.5 லிட்டர் ஹைப்ரிட் இன்ஜின் ஆகிய ஆப்ஷன்களும் அப்படியே தொடரும் என தெரிகிறது. மேலும் மேனுவல், ஆட்டோமேடிக் கியர்பக்ஸ் ஆகியவற்றுடன் ஆல் வீல் ட்ரைவ் ஆப்ஷனும் தொடரும் என மாருதி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சிஎன்ஜி வேரியண்ட் கிலோவிற்கு 26.6 கிலோ மீட்டரும், ஹைப்ரிட் வேரியண்ட் 27 கிமீ மைலேஜும் வழங்குகிறது.
எஸ்குடோ பிராண்ட்:
கடந்த ஆண்டு எஸ்குடோ என்ற பெயரை மருதி நிறுவனம் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் பதிவு செய்தது. இந்த பெயரை சுசூகி நிறுவனம் ஜப்பானில் விட்டாரா எஸ்யுவிக்கு பயன்படுத்தி வருகிறது. அந்த பெயர் தக்கவைக்கப்பட்டால், இந்திய சந்தையில் நடப்பாண்டில் மாருதி அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ள இரண்டு எஸ்யுவிக்களில் எஸ்குடோவும் ஒன்றாக இருக்கும். மற்றொன்று அந்நிறுவனத்தின் முதல் மின்சார கார் மாடலான இ - விட்டாரா ஆகும்.
புதிய 5 சீட்டரானது கிராண்ட் விட்டாரவை காட்டிலும் நீளமான எஸ்யுவியை வாங்க விரும்புவோருக்கான சரியான தேர்வாக இருக்கும். விட்டாராவானது கிரேட்டா (4,333 மிமீ) மற்றும் செல்டோஸ் (4,365 மிமீ) ஆகிய கார் மாடல்களுக்கு இடைபட்ட நீளத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. புதிய மாடலானது மாருதியின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி அதிகரிப்பிற்கு உதவும் என கூரப்படுகிறது. அதோடு நடப்பு நிதியாண்டில் 5 முதல் 6 சதவிகித வளர்ச்சி காண வேண்டும் என்ற மாருதியின் இலக்கை அடையவும் புதிய எஸ்யுவி 5 சீட்டர் உதவும் என நம்புகிறது.
விலை விவரங்கள் - வெளியீடு:
விழாக்காலத்தை இலக்காக நிர்ணயித்துள்ளதால், ஆண்டின் இரண்டாம் பாதியில் தீபாவளி பண்டிகையின்போது புதிய 5 சீட்டர் எஸ்யுவி சந்தைப்படுத்தப்படலாம். பிரேஸ்ஸாவின் தொடக்க விலை ரூ.8.69 லட்சமாகவும், கிராண்ட் விட்டாரவின் தொடக்க விலை ரூ.11.42 லட்சமாகவும் உள்ளது. இந்த இரண்டு மாடல்களுக்கும் இடையில் நிலைநிறுத்தப்பட உள்ளதால், புதிய 5 சீட்டர் எஸ்யுவின் விலை சுமார் ரூ.10 லட்சத்தில் இருந்து தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் போட்டியாளர்களாக கருதப்படும் கிரேட்டாவின் தொடக்க விலை ரூ.11.11 லட்சமாகவும், செல்டோஸின் தொடக்க விலை ரூ.11.19 லட்சமாகவும் உள்ளது. எனவே, எஸ்குடோ கார் சந்தையில் போட்டித்தன்மை மிக்க மாடலாக உருப்பெற வாய்ப்புள்ளது.
Car loan Information:
Calculate Car Loan EMI