மேலும் அறிய

Maruti 7 Seater: மஹிந்த்ராவிற்கு போட்டியாக வரும் மாருதியின் 7 சீட்டர் - ஹைப்ரிட், AWD அம்சங்கள், - விலை எப்படி?

Maruti 7 Seater: மஹிந்த்ராவின் XUV 7XO கார் மாடலுக்கு போட்டியாக நாட்டின் முன்னணி கார் நிறுவனமான மாருதி புதிய 7 சீட்டரை விரைவில் இந்தியாவில் சந்தைப்படுத்த தீவிரம் காட்டுகிறது.

Maruti 7 Seater: மாருதி நிறுவனம் தனது புதிய 7 சீட்டரை ஆல் வீல் ட்ரைவ் மற்றும் ஹைப்ரிட் எடிஷனில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாம்.

மாருதியின் புதிய 7 சீட்டர் போட்டியாளர்கள்

இந்திய ஆட்டோமொபைல் சந்தைக்கான புதிய ப்ரீமியம் 7 சீட்டர் கார் மாடல் உற்பத்தியில், நாட்டின் முன்னணி கார் நிறுவனமான மாருதி சுசூகி தீவிரமாக ஈடுபட்டுள்ளது.  வரவிருக்கும் இந்த புதிய மாடலானது ஹரியானா மாநிலம் கர்கோடா பகுதியி உள்ள ப்ராண்டின் புதிய உற்பத்தி மையத்திலிருந்து விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. புதிய எஸ்யுவி 7 சீட்டரானது அடிப்படையில் 3 வரிசை இருக்கைகளை கொண்ட க்ராண்ட் விட்டாராவின் மேம்படுத்தப்பட்ட எடிஷனாகும். உள்ளூர் சந்தையில் இந்த காரானது மஹிந்த்ராவின் XUV 7XO , டாடா சஃபாரி, விரைவில் சந்தைப்படுத்தப்பட உள்ள கியா சொரெண்டோ, ஹுண்டாய் iN1i மற்றும் ரெனால்ட் போரியல் மாடல்களிடமிருந்து போட்டியை எதிர்கொள்ள உள்ளது.

மாருதியின் புதிய 7 சீட்டர் - டிசைன்

புதிய 7-சீட்டர் மாருதி எஸ்யூவி ஆனது அதன் 5-சீட்டர் எடிஷனுக்கு அடிப்படையாக உள்ள,  சுசூகியால் சர்வதேச சந்தையில் பயன்படுத்தப்படும் 'C' பிளாட்ஃபார்மிலேயே உருவாக்கப்பட உள்ளது. இருப்பினும், மூன்றாவது வரிசை இருக்கைகளுக்கு இடமளிக்கும் வகையில், இது சற்றே நீளமான வீல்பேஸில் வடிவமைக்கப்படுகிறது. 7-சீட்டர் மாடலை அதன் 5-சீட்டர் மாடலிலிருந்து வேறுபடுத்திக் காட்டுவதற்காக, பல வடிவமைப்பு மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாருதியின் புதிய 7 சீட்டர் - ஹைப்ரிட் ஆப்ஷன்கள்

புதிய எஸ்யூவி குறித்த அதிகாரப்பூர்வ விவரங்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படாத நிலையில், இது மாருதி கிராண்ட் விட்டாராவுடன் பல அம்சங்கள், வசதிகல் மற்றும் பவர்ட்ரெய்ன் ஆப்ஷன்களை அப்படியே பின்தொடர வாய்ப்புள்ளது. அதன்படி இந்த எஸ்யூவி, 103bhp திறன் கொண்ட 1.5L K15C பெட்ரோல் மைல்ட் ஹைப்ரிட் மற்றும் 115bhp திறன் கொண்ட 1.5L மூன்று சிலிண்டர் அட்கின்சன் சைக்கிள் ஸ்ட்ராங் ஹைப்ரிட் பவர்டிரெய்ன் ஆப்ஷன்களுடன் வழங்கப்படலாம்.

மைல்ட் ஹைப்ரிட் இன்ஜின், மேனுவல் மற்றும் டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆகிய இரண்டு ஆப்ஷன்களையும் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. AWD சிஸ்டம் டாப் வேரியண்ட்களுக்கு ஒதுக்கப்படலாம். க்ராண்ட் விட்டாராவில், இந்த பவர்டிரெய்ன் மேனுவல் வேரியன்ட்களுக்கு லிட்டருக்கு 21.11 கிலோ மீட்டரும், ஆட்டோமேட்டிக் வேரியன்ட்களுக்கு லிட்டருக்கு 20.58 கிலோ மீட்டரும் மற்றும் மேனுவல் AWD வேரியன்ட்டிற்கு லிட்டருக்கு 19.38 கிலோ மீட்டரும் மைலேஜ் வழங்கும் என கூறப்படுகிறது.

சக்திவாய்ந்த இந்த ஹைப்ரிட் பவர்டிரெய்ன், eCVT டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டு, 115bhp ஒருங்கிணைந்த ஆற்றலை வழங்குகிறது. இதன் மூலம் லிட்டருக்கு 27.97 கிலோ மீட்டர் மைலேஜ் தரக்கூடுமாம். இருப்பினும், இந்த புதிய மாருதி 7-சீட்டர் எஸ்யூவியின் மைலேஜ், அதன் பெரிய அளவு மற்றும் அதிகரித்த எடை காரணமாக, அதன் 5-சீட்டர் எடிஷனில் இருந்து மாறுபட அதிக வாய்ப்புள்ளது.

இதையும் படியுங்கள்:IPL 2026 Final: 2வது ஐபிஎல் பட்டத்தை வெல்லப்போவது யார்? குஜராத்தை வீழ்த்தி CSK, மும்பை சாதனையை ஈடு செய்யுமா RCB?

மாருதியின் புதிய 7 சீட்டர் - விலை விவரங்கள்

க்ராண்ட் விட்டாராவின் 5 சீட்டர் எடிஷனானது தற்போது ரூ. 10.77 லட்சம் முதல் ரூ. 19.72 லட்சம் வரையிலான விலை வரம்பில் விற்பனை செய்யப்படுகிறது. இதைகாட்டிலும் 7-சீட்டர்  க்ராண்ட் விட்டாரா கணிசமான கூடுதல் விலையில் விற்கப்படும். இந்த புதிய எஸ்யூவியின் அடிப்படை மாடலின் விலை சுமார் ரூ. 14 லட்சம் முதல் ரூ. 15 லட்சம் வரையிலும், டாப்-எண்ட் மாடலின் விலை சுமார் ரூ. 24 லட்சம் முதல் ரூ. 27 லட்சம் வரையிலும் (எக்ஸ்-ஷோரூம்) இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. நடப்பாண்டின் இறுதியில் இந்த கார் மாடல் சந்தைபப்டுத்தப்படலாம்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

Long Range EV: இந்தியாவிலேயே டாப் ரேஞ்ச் எலக்ட்ரிக் கார்: எவ்ளோ தெரியுமா? ஹைவே சோதனையில் மெகா சாதனை!
Long Range EV: இந்தியாவிலேயே டாப் ரேஞ்ச் எலக்ட்ரிக் கார்: எவ்ளோ தெரியுமா? ஹைவே சோதனையில் மெகா சாதனை!
டாடா EV காருக்கு ரூ.1.45 லட்சம் மெகா தள்ளுபடி: செம சேஃப்டி, ரேஞ்ச், இறுதி விலை- இதோ விவரம்!
டாடா EV காருக்கு ரூ.1.45 லட்சம் மெகா தள்ளுபடி: செம சேஃப்டி, ரேஞ்ச், இறுதி விலை- இதோ விவரம்!
சிட்டாய் சிட்டியில் பறக்க! 175 சிசி எஞ்ஜின்.. Aprilia SR 175 ஸ்கூட்டர் வாங்கலாமா?
சிட்டாய் சிட்டியில் பறக்க! 175 சிசி எஞ்ஜின்.. Aprilia SR 175 ஸ்கூட்டர் வாங்கலாமா?
Oben Rorr இ பைக் வாங்கலாமா? மைலேஜ், விலை எப்படி ப்ரோ? லுக் மாஸ்தான்
Oben Rorr இ பைக் வாங்கலாமா? மைலேஜ், விலை எப்படி ப்ரோ? லுக் மாஸ்தான்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!
Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Putin Backs India: “இந்தியாவுக்கு அழுத்தம் கொடுத்தா எதிர்விளைவுகள ஏற்படுத்தும்“ - US-க்கு புதின் மறைமுக எச்சரிக்கை
“இந்தியாவுக்கு அழுத்தம் கொடுத்தா எதிர்விளைவுகள ஏற்படுத்தும்“ - US-க்கு புதின் மறைமுக எச்சரிக்கை
DMK - Congress: திருட்டு மாடல்.. அரசியல் ஒழுக்கமும் வேண்டும்.. திமுகவை வறுத்தெடுத்த மாணிக்கம் தாகூர்!
DMK - Congress: திருட்டு மாடல்.. அரசியல் ஒழுக்கமும் வேண்டும்.. திமுகவை வறுத்தெடுத்த மாணிக்கம் தாகூர்!
TVK: கேட்டைக்கூட திறக்காத தவெக.. கால்கடுக்க காத்திருந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்! பனையூரில் நடந்தது என்ன?
TVK: கேட்டைக்கூட திறக்காத தவெக.. கால்கடுக்க காத்திருந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்! பனையூரில் நடந்தது என்ன?
TVK: உள்ளாட்சி தேர்தல்தான் அடுத்த டார்கெட்! அதிமுக மாஜிக்களை வைத்து அஸ்திவாரம் போடும் தவெக!
TVK: உள்ளாட்சி தேர்தல்தான் அடுத்த டார்கெட்! அதிமுக மாஜிக்களை வைத்து அஸ்திவாரம் போடும் தவெக!
டாடா EV காருக்கு ரூ.1.45 லட்சம் மெகா தள்ளுபடி: செம சேஃப்டி, ரேஞ்ச், இறுதி விலை- இதோ விவரம்!
டாடா EV காருக்கு ரூ.1.45 லட்சம் மெகா தள்ளுபடி: செம சேஃப்டி, ரேஞ்ச், இறுதி விலை- இதோ விவரம்!
India Team Squad: இந்திய டி20 புது கேப்டன் ஸ்ரேயாஸ்! அறிமுக வீரராக களமிறங்கும் சுட்டிப்பையன் சூர்யவன்ஷி - டீமே மாஸா இருக்கே
India Team Squad: இந்திய டி20 புது கேப்டன் ஸ்ரேயாஸ்! அறிமுக வீரராக களமிறங்கும் சுட்டிப்பையன் சூர்யவன்ஷி - டீமே மாஸா இருக்கே
MK Stalin: விரைவில் தவெக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி.. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு!
MK Stalin: விரைவில் தவெக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி.. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு!
Rahul Gandhi: விஜயுடன் கூட்டணி.. தன் தலையில் மண்ணை அள்ளிப்போட்ட ராகுல்.. திமுக கடும் விமர்சனம்!
Rahul Gandhi: விஜயுடன் கூட்டணி.. தன் தலையில் மண்ணை அள்ளிப்போட்ட ராகுல்.. திமுக கடும் விமர்சனம்!
Embed widget