Hyundai New Gen Venue Launch: ஹுண்டாய் நிறுவனம் தனது புதிய தலைமுறை வென்யு மற்றும் அதன் என் - லைன் எடிஷன் கார் மாடல்களின் விநியோகத்தை நவம்பர் 15-க்குப் பிறகு தொடங்கக் கூடும்.

Continues below advertisement

ஹுண்டாய் புதிய தலைமுறை வென்யு அறிமுகம்:

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஹுண்டாய் நிறுவனத்தின் அடையாளங்களில் ஒன்றான, வென்யு கார் மாடல் முற்றிலுமாக மேம்படுத்தப்பட்டு புதிய தலைமுறை எடிஷனாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த வாரமே இந்த காரின் ஸ்டேண்டர்ட் மற்றும் என் - லைன் எடிஷன் காட்சிப்படுத்தப்பட்டு, அதற்கான முன்பதிவும் தொடங்கப்பட்டது. விருப்பமுள்ளவர்கள் ரூ.25 ஆயிரம் பணத்தை செலுத்தி, இந்த இரண்டு கார்களையும் முன்பதிவு செய்துகொள்ளாலாம் என தெரிவிக்கப்பட்டது. அதைதொடர்ந்து தற்போது அதிகாரப்பூர்வமாக சந்தைப்படுத்தப்பட்டுள்ளது.

Continues below advertisement

ஹுண்டாய் வென்யு - எடிஷன் விலை:

ஹுண்டாய் வென்யுவானது HX2, HX4, HX5, HX6, HX6T, HX8 மற்றும் HX10 என78 பெட்ரோல் வேரியண்ட்களிலும்,  HX2, HX5, HX7 மற்றும் HX10 என 4 டீசல் வேரியண்ட்களிலும் விற்பனை செய்யப்படுகிறது. ஸ்டேண்டர்ட் எடிஷனின் விலை ரூ. 7.9 லட்சத்தில் தொடங்குகிறது. இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கடும் போட்டி நிலவக்கூடிய காம்பேக்ட் எஸ்யுவி பிரிவில், அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வென்யுவின் இந்த விலை நிர்ணயமானது மிகவும் போட்டித்தன்மை கொண்டதாக கருதப்படுகிறது.

  • HX2 - ரூ. 7.89 லட்சம் (எக்ஸ் - ஷோரூம்)
  • HX4 - ரூ. 8.79 லட்சம் (எக்ஸ் - ஷோரூம்)
  • HX5 - ரூ. 9.14 லட்சம் (எக்ஸ் - ஷோரூம்)

இந்த பிரிவில் முதன்மையான மாடலாக விளங்கும் டாடா நெக்ஸானை காட்டிலும், வென்யுவின் விலை ரூ.50 ஆயிரம் அதிகமாகும். ஆனாலும் கூடுதல் அம்சங்கள் மற்றும் தொழில்நுட்ப வசதிகள் விலையை ஈடுசெய்கின்றன. அதேநேரம், மற்றொரு போட்டியாளரான ப்ரேஸ்ஸாவை காட்டிலும் வென்யுவின் விலை 37 ஆயிரம் ரூபாய் குறைவாகும்.

ஹுண்டாய் வென்யு - இன்ஜின் விவரங்கள்

இன்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் அடிப்படையில்  வென்யுவில் எந்தவித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. முந்தைய எடிஷனில் இருக்கும், 83PS ஆற்றலை உற்பத்தி செய்யக்கூடிய 5-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸுடன் 1.2L நேட்சுரலி ஆஸ்பிரேடட் பெட்ரோல், 120PS ஆற்றலை உற்பத்தி செய்யக்கூடிய 6-ஸ்பீட் iMT அல்லது 7-ஸ்பீட் DCT டிரான்ஸ்மிஷனுடன் கூடிய 1.0L டர்போ-பெட்ரோல் மற்றும் 6-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸுடன் 116PS ஆற்றலை உற்பத்தி செய்யக்கூடிய 1.5L டர்போ டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் கிடைக்கின்றன. டீசல் இன்ஜின் உடன் டார்க் கன்வெர்டர் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.

ஹுண்டாய் வென்யு - வண்ண விருப்பங்கள்

வென்யு காரின் ஸ்டேண்டர்ட் எடிஷனானது 6 ஒற்றை வண்ண விருப்பங்களிலும், இரண்டு இரட்டை வண்ண விருப்பங்களிலும் கிடைக்கிறது. அதன்படி, ஹேசல் ப்ளூ (புதியது), மிஸ்டிக் சபையர் (புதியது), அட்லஸ் வெள்ளை, டைட்டன் கிரே, ட்ராகன் ரெட், அபிஸ் பிளாக், அபிஸ் பிளாக் ரூஃபுடன் கூடிய ஹேசல் ப்ளூ மற்றும் அபிஸ் பிளாக் ரூஃபுடன் கூடிய அட்லஸ் வெள்ளை வண்ண விருப்பங்களையும் தேர்வு செய்யலாம்.

ஓவர் தி ஏர் அப்டேட்

ஹூண்டா2ய் வென்யுவில் 70 கனெக்டட் கார் அம்சங்கள் மற்றும் இந்தி, ஆங்கிலம் மற்றும் தமிழ் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் 400க்கும் மேற்பட்ட வாய்ஸ் கண்ட்ரோல்களை வழங்கியுள்ளது. இது 20 கன்ட்ரோலர்களுக்கான ஓவர்-தி-ஏர் (OTA) அப்டேட்களையும் ஆதரிக்கிறது. ரிமோட் சாஃப்ட்வேர் அப்டேட் மற்றும் மேம்பட்ட பாதுகாப்பை அனுமதிக்கிறது.

 

ஹுண்டாய் வென்யு - அம்சங்கள்:

ஹுண்டாயின் புதிய தலைமுறை வென்யுவின் உட்புறத்தில் புதிய க்ரேட்டாவில் இருந்து ஈர்க்கப்பட்ட 12.3 இன்ச் அளவிலான இரட்டை கர்வ்ட் பனோரமிக் டிஸ்பிளேக்கள், ரியர் விண்டோ சன்ஷேட், வென்யு ப்ராண்டிங் உடன் கூடிய டூயல் டோன் லெதர், சுற்றுப்புற ஆம்பியண்ட் லைட்டிங் உடன் கூடிய காஃபி டேபிள் சென்டர் கன்சோல், க்ராஷ் பேட் மீது ஆம்பியண்ட் லைட்டிங், டெரஸோ டெக்ஸர்ட் க்ராஷ் பேட் ஃபினிஷ், ப்ரீமியம் லெதர் ஆர்ம்ரெஸ்ட், D-கட் ஸ்டியரிங் வீல், எலெக்ட்ரிக் 4 வே ட்ரைவர் சீட்ஸ், 2 ஸ்டெப் ரிக்ளைனிங் ரியர் சீட்ஸ், ரியர் ஏசி வெண்ட்ஸ் ஆகிய அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

முன்புற பார்க்கிங் சென்சார்களுடன் கூடிய 360 டிகிரி கேமரா, 8 ஸ்பீக்கர் போஸ் சவுண்ட் சிஸ்டம், ஆட்டோ ஹோல்டுடன் கூடிய எலெக்ட்ரானிக் பார்கிங் ப்ரேக், லெவல் 2 ADAS ஆகியவையும் புதியதாக வழங்கப்படுகின்றன. இதுபோக ஏற்கனவே இருக்கும் ஆட்டோமேடிக் க்ளைமேட் கன்ட்ரோல், வயர்லெஸ் போன் சார்ஜர்,  கீ-லெஸ் ர்ண்ட்ரி வித் புஷ் பட்டன் ஸ்டார்ட், 6 ஏர் பேக்குகள், EBD உடன் கூடிய ABS, எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், டையர் ப்ரஷர் மானிட்டரிங் சிஸ்டம் மற்றும் குழந்தைகளுக்கான ஐசோஃபிக்ஸ் இருக்கைகள் ஆகியவை அப்படியே தொடருகின்றன. அதிகரித்த வீல்பேஸ் அனைத்து பயணிகளுக்கும் சிறந்த ஹெட்ரூம், லெக்ரூம் மற்றும் ஷோல்டர் ரூம் வசதியை உறுதி செய்கிறது. 

ஹுண்டாய் வென்யு - கட்டமைப்பு

தற்போதைய எடிஷனை காட்டிலும், 48 மில்லி மீட்டர் உயரமாகவும், 30 மில்லி மீட்டர் அகலமாகவும் புதிய கார் உள்ளது. ஒட்டுமொத்த வீல்பேஸும் அதிகரிக்கப்பட்டுள்ளதால் இடவசதி உயர்ந்துள்ளது. நீளம், அகலம் மற்றும் உயரமானது முறையே 3,955, 1,800 மற்றும் 1,655 மில்லி மீட்டர் ஆக உள்ளது. இந்த சப்-காம்பேக்ட் எஸ்யுவி ஆனது 2,520 மில்லி மீட்டர் வீல்பேஸை கொண்டுள்ளது.

புதிய வென்யுவின் முன்புறமானது மிகப்பெரிய அளவில் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, புதிய க்ரேட்டாவின் தாக்கத்தில் க்ரில், ட்வின் ஹார்ன் பகல்நேரங்களில் ஒளிரும் எல்இடி விளக்குகள், க்வாட் பீம் எல்இடி முகப்பு விளக்குகள் மற்றும் டார்க் க்ரோம் ரேடியேட்டர் க்ரில் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. அதோடு இந்த எஸ்யுவியில் புதியதாக வடிவமைக்கப்பட்ட R16 டைமண்ட் கட் அலாய் வீல்கள், ஸ்கல்ப்டட் கேரக்டர் லைன்கள், பாலம் மாதிரியான ரூஃப் ரயில்ஸ்  மற்றும் இன் - க்ளாஸ் வென்யு அச்சு ஆகியவை இடம்பெற்றுள்ளன.


Car loan Information:

Calculate Car Loan EMI