Hyundai SUV: இந்திய ஆட்டோமொபைல் சந்தைகான ஹுண்டாயின் புதிய எஸ்யுவி சோதனையின் போது சிக்கி, பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவிற்கான ஹுண்டாயின் புதிய எஸ்யுவி
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் வரும் 2030ம் ஆண்டுக்குள் இன்ஜின், ஹைப்ரிட் மற்றும் மின்சார எடிஷன் என ஒட்டுமொத்தமாக, 26 புதிய மாடல்களை களமிறக்க ஹுண்டாய் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த புதிய லைன் - அப்பில் காம்பேக்ட் க்ராஸ் ஓவர், சப்-4 மீட்டர் மற்றும் 4 மீட்டர் நீளத்திற்கும் அதிகமான எஸ்யுவி, மின்சார ஹேட்ச்பேக்குகள் மற்றும் முழு அளவிலான பிரீமியம் எஸ்யுவிக்களும் அடங்கும். தற்போதைய சூழலில் புதிய கார்களின் விவரங்கள் மற்றும் பெயர்கள் ஆனது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. இந்த நிலையில், வெளிப்புறம் முற்றிலுமாக மறைக்கப்பட்ட ஹுண்டாயின் எஸ்யுவி ஒன்று மும்பையில் சாலை பரிசோதனையின் போது சிக்கியது. ஆனால், அண்மைக்காலங்களாக இந்திய சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் எந்த ஒரு கார் மாடலுடனும், இந்த பரிசோதனை மாடலின் வடிவமைப்புடன் ஒத்துப்போகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஹுண்டாயின் புதிய எஸ்யுவி - வெளிப்புற டிசைன்
சோதனையின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களின்படி, வென்யு மற்றும் க்ரேட்டாவின் தாக்கத்தில் பாக்ஸி மற்றும் நிமிர்ந்த நிலைப்பாட்டை புதிய எஸ்யுவி கொண்டிருப்பதை உணர முடிகிறது. 16 இன்ச் ப்ளாக் ஸ்டீல் வீல், பகல்நேரங்களில் ஒளிரும் கனெக்டட் டெயில் லைட், உயர்த்தப்பட்ட பானெட், ப்ளாக் ரூஃப் ரெயில்ஸ், ஃப்ளஷ் ஃபிட்டிங் டோர் ஹேண்டில்ஸ் மற்றும் கூர்மையான ஃபின் ஏண்டென ஆகியவை கவனத்தை ஈர்க்கும் டிசைன்களாக உள்ளன. பின்புறத்தில் கண்ணாடி கதவுடன் மெல்லிய எல்இடி டெயில் லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளன. கதவுக்கு அருகே சில்வர் கார்னிஷுடன் கூடிய ப்ளாக் க்ளாடிங் இடம்பெற்றுள்ளது. டெயில்கேட்டின் கீழ் பகுதியில் ஒரு முக்கிய எழுத்து மடிப்பு காருக்கு ஸ்போர்ட்டி தோற்றத்தை சேர்க்கிறது. அதே நேரத்தில் பின்புற பம்பரில் செங்குத்தாக வைக்கப்பட்டுள்ள ரிஃப்ளெட்டார்கள் இடம்பெற்றுள்ளன.
ஹுண்டாயின் புதிய எஸ்யுவி - உட்புறம் எப்படி இருக்கு?
ஹுண்டாயின் புதிய எஸ்யுவியின் உட்புறம் குறித்து பேசும் அளவிற்கு போதிய தகவல் ஏதுமில்லை. அதேநேரம் விரைவில் சந்தைப்படுத்தப்பட உள்ள இந்த புதிய காம்பேக்ட் எஸ்யுவி ஆனது, டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர், டேஷ்கேம், ஓவர் தி ஏர் அப்டேட்கள், லெதரேட் அப்ஹோல்ஸ்ட்ரி, வயர்லெஸ் சார்ஜர், ரியர் பார்கிங் கேமரா, சன்ரூஃப், க்ரூஸ் கன்ட்ரோல், ரியர் ஏசி வெண்ட்கள், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல், 360 டிகிரி கேமரா மற்றும் பல ஏர்பேக்குகள் என ஏராளமான அம்சங்களை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹுண்டாயின் புதிய எஸ்யுவி - இன்ஜின்? EV?
தற்போதைய சூழலில் இந்த மாடல் இன்ஜின் அடிப்படையிலானதா? அல்லது மின்சாரா காரா? என்பது குறித்த எந்தவித உறுதிப்படுத்தலும் இல்லை. அதேநேரம், கியா நிறுவனத்தின் மிக சிறிய மின்சார கார் மாடலான EV2-வின் ஹுண்டாய் எடிஷன் தான் இந்த கார் என்ற வதந்திகளும் பரவ தொடங்கியுள்ளன. சர்வதேச சந்தையில் EV2 காரானது இரண்டு பேட்டரி ஆப்ஷன்களை கொண்டுள்ளது. நிலையான வேரியண்ட் 42.2KWh பேட்டரி பேக்கையும், லாங்க் ரேஞ்ச் எடிஷனானது 61.01KWh பேட்டரி பேக்கையும் கொண்டுள்ளது. அவை முறையே 147bhp முன்புற ஆக்சிலில் பொருத்தப்பட்ட மோட்டார் மற்றும் 136bhp மோட்டாரை கொண்டுள்ளது. இந்திய மதிப்பில் இதன் தொடக்க விலை ரூ.9 லட்சம் ஆக நிர்ணயிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
2026ல் இந்திய சந்தைக்கான ஹுண்டாயின் ப்ளான்
வெளியாகியுள்ள தகவலின்படி, ஹுண்டாய் நிறுவனம் நடப்பாண்டில் இந்திய சந்தைக்கு வெர்னா மற்றும் எக்ஸ்டெரின் ஃபேஸ்லிஃப்ட்களை தயார்படுத்தி வருகிறது. இதுபோக சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்படும் ஹுண்டாய் பேயோன் அடிப்படையிலான முற்றிலும் புதிய எஸ்யுவியும் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இந்த காரானது ப்ராண்டின் முற்றிலும் புதிய ஹைப்ரிட் தொழில்நுட்பத்தை ஆதரிக்கக் கூடிய, 1.2 லிட்டர் ட்ரபோ பெட்ரோல் இன்ஜினையும் பெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சூழலில் தற்போது சோதனையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள எஸ்யுவி எப்போது விற்பனைக்கு வரும் என்ற அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் தற்போது வரை இல்லை.
Car loan Information:
Calculate Car Loan EMI