Hyundai Creta 2024: ஹுண்டாய் நிறுவனத்தின் பிரபல கார் மாடலான கிரேட்டா ஃபேஸ்லிப்ட் காரை, 25 ஆயிரம் ரூபாய் கொடுத்து பயனாளர்கள் முன்பதிவு செய்துகொள்ளலாம்.
ஹுண்டாய் கிரேட்டா ஃபேஸ்லிப்ட் முன்பதிவு:
ஹூண்டாய் கிரெட்டா 2024 மாடல் வரும் 16ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட உள்ள சூழலில், அதற்கான முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது. வாடிக்கையாளர்கள் இந்தியா முழுவதும் உள்ள ஹூண்டாய் டீலர்ஷிப் அலுவலகங்களுக்கு நேரில் சென்றோ அல்லது இணையதளம் மூலமாகவும், ரூ. 25000 கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்துகொள்ளலாம். 2023 மாடல் கிரேட்டாவை முன்பதிவு செய்தவர்கள் அதனை புதிய க்ரெட்டாவாக மாற்றிக்கொள்ளும் ஆப்ஷனும் வழங்கப்பட்டு உள்ளது. சாலையில் செலுத்தும்போது ஒரு கம்பீரமான அனுபவத்தை வழங்கும் இந்த காரின் ஃபேஸ்லிப்டில், உட்புறம் மற்றும் வெளிப்புறம் என இரண்டிலும் குறிப்பிடத்தக்க சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதனை உணர்த்தும் விதமாக சில புகைப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளன.
கிரேட்டா ஃபேஸ்லிப்ட் அம்சங்கள்:
கடந்த மூன்று ஆண்டுகளாக, ஹூண்டாய் க்ரெட்டா இந்திய சந்தையில் அதிகம் விற்பனையாகும் எஸ்யூவிகளில் ஒன்றாக உள்ளது இதுவரை 9.5 லட்சத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் இந்த காரை தேர்ந்தெடுத்துள்ளனர். இந்நிலையில் தான் அதன் ஃபேஸ்லிப்ட் மாடல் வரும் 16ம் தேதி இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த உள்ளது. அதன் டேஷ்போர்டு வடிவமைப்பில் ஒரு சிறிய அணுகுமுறையை எடுத்து வருகிறது. அதன்படி, இரண்டு 10.25-இன்ச் திரைகளுடன் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. இவை புதிய பயனர் இடைமுகத்தில் இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் அல்காஸர் மாடலில் உள்ள புதிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் இந்த கிரேட்ட ஃபேஸ்லிப்டில் இருக்கும் என கூறப்படுகிறது.
காரின் சென்டர் கன்சோல் மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. மையப்பகுதியில் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெற்று இருந்தாலும், அதற்குக் கீழே புக் கன்ட்ரோல் பேனலில் புதிய காலநிலைக் கட்டுப்பாட்டு அமைப்பு உள்ளது. கியர் லிவர் மற்றும் சேமிப்பக இடங்களும் மறுவடிவமைப்பு செய்யப்பட்டு உள்ளன. இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டத்திற்கு இடையே மெலிதான ஏசி வென்ட்கள் உள்ளன. அதேநேரம், ஹூண்டாய் கிரேட்டா ஃபேஸ்லிஃப்ட் மடலானது பேக்லிட் சுவிட்சுகள், நான்கு-ஸ்போக் ஸ்டீயரிங், சென்டர் ஆர்ம்ரெஸ்ட், கேபினுக்கான டூயல்-டோன் தீம் மற்றும் சுற்றுப்புற விளக்குகள் ஆகிய பழைய அம்சங்களை அப்படியே தொடருகிறது.
ஃபேஸ்லிப்ட் வேரியண்ட் விவரங்கள்:
கிரேட்டா ஃபேஸ்லிப்ட் ஆனது 7 வேரியண்ட்களில் கிடைக்கப்பெறும் என ஹுண்டாய் நிறுவனம் ஏற்கனவே உறுதி செய்துள்ளது. அதன்படி, E, EX, S, S(O), SX, SX Tech மற்றும் SX (O) ஆகிய ஏழு வேரியண்ட்களில் இந்த கார் சந்தைப்படுத்தப்பட உள்ளது. 6 ஒற்றை நிறங்களிலும், ஒரு டூயல்-டோன் நிறத்திலும் விற்பனைக்கு வர உள்ளது. இது தவிர இந்த மிட்-சைஸ் எஸ்யூவி ஆனது மூன்று இன்ஜின் ஆப்ஷன்களை வழங்குகிறது. அதன்படி, 1.5லி MPi பெட்ரோல், 1.5I U2 CRDi டீசல் மற்றும் 1.51 கப்பா டர்போ GDi பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்களில் வாகனத்தை தேர்வு செய்யலாம். இந்த புதிய மாடல் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர், மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா, கியா செல்டோஸ், எம்ஜி ஆஸ்டர், டாடா ஹாரியர், ஸ்கோடா குஷாக் மற்றும் ஃபோக்ஸ்வேகன் டைகன் ஆகிய மாடல்களுக்கு இந்திய சந்தையில் போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Car loan Information:
Calculate Car Loan EMI