மேலும் அறிய

Tata Harrier Safari: பழசு போர் அடிக்குதா? கூடுதல் சைஸில் ஹாரியர், சஃபாரி - ஆல் வீல் ட்ரைவ் சிஸ்டம், ஹைடெக் கேஜட்ஸ்

Tata Harrier Safari: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் டாடா நிறுவனத்தின் அடுத்த தலைமுறை ஹாரியர் மற்றும் சஃபாரி கார் மாடல்கள் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

Tata Harrier Safari: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் டாடா நிறுவனத்தின் அடுத்த தலைமுறை ஹாரியர் மற்றும் சஃபாரி கார்களில் கூடுதல் அம்சங்கள் இணைக்கப்பட உள்ளன.

டாடாவின் புதிய தலைமுறை ஹாரியர், சஃபாரி

டாடா நிறுவனம் தனது அடுத்த தலைமுறை ஹாரியர் மற்றும் சஃபாரி கார் மாடல்கள் தொடர்பான பணிகளை தீவிரப்படுத்த தொடங்கியுள்ளது. இவற்றின் அறிமுகத்திற்கு குறைந்தபட்சம் ஓராண்டு உள்ள சூழலில், தற்போது பணிகள் முடுக்கி விடப்பட்டு இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. புதிய எஸ்யுவிக்கள் இரண்டுமே இன்ஜின் மற்றும் மின்சார எடிஷனில் இயங்கும் வகையிலான பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படுவதோடு, ஆல் வீல் ட்ரைவ் அம்சத்தை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய சூழலில் சந்தையில் உள்ள ஹாரியர் மற்றும் சஃபாரி கார் மாடல்கள், லேன்ட் ரோவரின் D8 பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. புதிய நெகிழ்வுத்தன்மை மிக்க பிளாட்ஃபார்ம் காரணமாக, அடுத்த தலைமுறை எஸ்யுவிக்களானது தற்போதைய மாடல்களை காட்டிலும் அளவில் பெரியதாக இருக்கும் என கூறப்படுகிறது.

புதிய தலைமுறை ஹாரியர்,சஃபாரி: ஆல் வீல் ட்ரைவ் சிஸ்டம்:

லேண்ட் ரோவருக்காக வடிவமைக்கப்பட்ட D8 பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படும், இன்ஜின் அடிப்படையிலான காரில் ஆல் வீல் ட்ரைவ் சிஸ்டம் வழங்க முடியாது என்பது பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. இதன் காரணமாக மின்சார ஹாரியரில் ஆல் வீல் ட்ரைவ் அம்சத்தை பொருத்துவதற்காக D8 பிளாட்ஃபார்மை டாடா நிறுவனம் மிகப்பெரிய அளவில் திருத்தம் செய்தது. சராசரியான ஆஃப் - ரோட் அம்சங்களால் சஃபாரி கார் மாடலும், ஒரு எஸ்யுவி வாகனமாகவே கருதப்படுகிறது. ஆனாலும், தற்போதைய மாடலில் உள்ள ஃப்ரண்ட் வீல் ட்ரைவ் அமைப்பு, எந்த வகையிலும், அசல் மாடலின் ஆஃப்-ரோடிங் திறமைக்கு ஏற்றதாக இல்லை.

எனவே, இந்த கார் மாடல்களில் ஆல் வீல் ட்ரைவ் அம்சங்களை இணைப்பதற்காக டாடா நிறுவனம் புதிய பிளாட்ஃபார்மை உருவாக்கி வருகிறது. இது மஹிந்திராவின் NFA யூனிட்டைப் போலவே 4×4 ட்ரைவ் சிஸ்டத்துடன் இன்ஜின் மற்றும் மின்சார பவர்டிரெய்ன் விருப்பங்களை இணைக்கும் திறனை கொண்டுள்ளது. டாடாவின் புதிய தலைமுறை ஹாரியர் மற்றும் சஃபாரி மாடல்கள் முறையே டாரஸ் மற்றும் லியோ என்ற கோட்நேம்களை பெற்றுள்ளன.

கூடுதல் சைஸில் புதிய தலைமுறை ஹாரியர், சஃபாரி

புதிய பிளாட்ஃபார்மை பயன்படுத்துவதன் விளைவாக தற்போதைய மாடல்களை காட்டிலும், புதிய ஹாரியர் மற்றும் சஃபாரி கார் மாடல்களின் நீளம் 100 முதல் 200 மில்லி மீட்டர் அதிகரிக்கக் கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் விளைவாக வீல் பேஸ் அதிகரித்து 7 சீட்டர் சஃபாரியில் கேபின் இடவசதியும் உயரும். நீளம் அதிகரிப்பதன் காரணமாக ஹாரியர் காரின் இடவசதியும் அதிகரித்து பயணிகளுக்கு சொகுசான பயணம் உறுதி செய்யப்படும். குடும்ப பயன்பாட்டிற்காக குறிப்பாக நடைமுறை தன்மைக்கு உகந்த மிட்-சைஸ் எஸ்யுவியை பார்ப்பவர்களுக்கு ஹாரியரை சிறந்த தேர்வாக மாற்றும். 

புதிய தொழில்நுட்ப வசதிகள்:

புதிய தலைமுறை பிளாட்ஃபார்மை உருவாக்குவதற்காக சீனாவைச் சேர்ந்த நிறுவனத்துடன் டாடா ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதன் விளைவாக மேம்படுத்தப்பட்ட புதிய கேபின் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் அடானமஸ் தொழில்நுட்பங்களை இரண்டு எஸ்யுவிக்களிலும் வழங்கப்பட உள்ளது. இந்த கார்களின் உற்பத்தியில் புதிய எலெக்ட்ரிகல் ஆர்கிடெக்ட்சரும் இடம்பெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய தலைமுறை ஹாரியர், சஃபாரி: இன்ஜின் விருப்பங்கள்

இன்ஜின் அடிப்படையில் இரண்டு அடுத்த தலைமுறை எஸ்யுவிக்களும், முற்றிலும் புதிய 1.5 லிட்டர் டைரக்ட் இன்ஜெக்சன்  டர்போ சார்ஜ்ட் பெட்ரோல் இன்ஜினை பெறக்கூடும். இந்த இயந்திரம் நடப்பாண்டு இறுதியில் சந்தைப்படுத்தப்பட உள்ள, சியாரா எஸ்யுவி வாயிலாக அறிமுகப்படுத்தப்பட உள்ளதாம். ஃபியட் வாயிலான நம்பகமான 2.0 லிட்டர் டீசல் இன்ஜினும்  ஆப்ஷனும் வழங்கப்படலாம். அடுத்த தலைமுறை ஹாரியர் மற்றும் சஃபாரியின் மின்சார எடிஷன்களானது, தற்போதைய ஹாரியர் EV ஐ அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய தலைமுறை ஹாரியர், சஃபாரி: விலை, வெளியீடு

அடுத்த தலைமுறை ஹாரியர் மற்றும் சஃபாரி கார் மாடல்களின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆனாலும் அடுத்த ஆண்டு இரண்டாம் பாதிக்குள் சந்தைப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இவற்றின் விலை 15 லட்ச ரூபாயில் தொடங்கி அதிகபட்சமாக 27 லட்சம் ரூபாய் வரையில் நீட்டிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Chennai Metro Rail Work: சென்னை மெட்ரோ பணியில் கலக்கும்
சென்னை மெட்ரோ பணியில் கலக்கும் "மயில்"; எந்த மயில்னு யோசிக்கிறீங்களா.? இத படிங்க தெரியும்
PM Kisan 22nd Installment: பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
ABP Premium

வீடியோ

Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Chennai Metro Rail Work: சென்னை மெட்ரோ பணியில் கலக்கும்
சென்னை மெட்ரோ பணியில் கலக்கும் "மயில்"; எந்த மயில்னு யோசிக்கிறீங்களா.? இத படிங்க தெரியும்
PM Kisan 22nd Installment: பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
Trump's C5 Plan.?: ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
Gold Rate Dec.13th: அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
Magalir Urimai Thogai: மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
Hyundai Verna: ரூ.13 லட்சம்தான் ஆரம்பம்.. ஹுண்டாய் Verna காரை வாங்கலாமா? வேண்டாமா?
Hyundai Verna: ரூ.13 லட்சம்தான் ஆரம்பம்.. ஹுண்டாய் Verna காரை வாங்கலாமா? வேண்டாமா?
Embed widget