Maruti 7 Seater Invicto Facelift: மாருதி நிறுவனத்தின் ப்ரீமியம் 7 சீட்டர் ஹைப்ரிட் மாடலான,  இன்விக்டோவின் ஃபேஸ்லிஃப்ட் எடிஷனில் என்ன எதிர்பார்க்கலாம் என கீழே விவரிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

மாருதி இன்விக்டோ ஃபேஸ்லிஃப்ட்

சிறந்த உரிமையாளர் அனுபவத்தை வழங்குவதற்காக மாருதி சுசூகி வாடிக்கையாளர்களால் கொண்டாடப்படுகிறது. அதோடு நல்ல எரிபொருள் செயல்திறன் மற்றும் நம்பகமான இன்ஜின் ஆகிய காரணங்களால் தான், நாட்டிலேயே அதிகம் கார்களை விற்பனை செய்யும் ப்ராண்டாக தொடர்ந்து கோலோச்சுகிறது. இந்நிலையில் தான் இந்த ஜப்பான் நிறுவனத்தின் புதிய 7 சீட்டர் விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ளது. இது மாருதியின் முதன்மையான கார் மாடலாக நிலைநிறுத்தப்பட உள்ளது. எண்ணற்ற அம்சங்கள், தொழில்நுட்ப வசதிகள் மற்றும் ப்ரீமியம் அனுபவத்தை இந்த காரில் பயணிகளால் பெற முடியும். இந்த சூழலில் அந்த புதிய 7 சீட்டரான, இன்விக்டோ ஃபேஸ்லிஃப்ட் குறித்த சுவாரஸ்யமான விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

Continues below advertisement

மாருதி இன்விக்டோ - எல்லாமே இருந்தும் ஓடல

இன்னோவா ஹைக்ராஸின் வலுவான ஹைப்ரிட் ஆப்ஷன் கொண்ட டாப் வேரியடிண்டின் விலை 40 லட்சத்தை கடக்கிறது. அதே ஹைப்ரிட் சிஸ்டம் ஆப்ஷனை கொண்ட மாருதியின் எடிஷனான இன்விக்டோவின் ஆன் ரோட் விலை வரம்பானது சென்னையில் ரூ.31.60 லட்சத்தில் தொடங்கி ரூ.36.78 லட்சம் வரையே உள்ளது. அதாவது இன்விக்டோவின் டாப் வேரியண்ட்டை,ஹைக்ராஸின் டாப் வேரியண்டை விட சுமார் 3.50 லட்சம் மலிவு விலையிலேயே சொந்தமாக்க முடியும். இரண்டு கார்களுமே பாதுகாப்பு பரிசோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளதோடு, லிட்டருக்கு 23.24 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குவதாக உற்பத்தி நிறுவனங்களால் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனாலும், மலிவு விலையே மாருதியின் மிகப்பெரிய பலமாக உள்ள சூழலில், இன்விக்டோவின்  30 லட்சத்தை கடந்துள்ளதால் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்க முடியவில்லை. இதனால் இன்னோவா ஹைக்ராஸிற்கு இணையாக எல்லாமும் இருந்து விற்பனையில் இந்த 7 சீட்டரால் பெரிய அளவில் சோபிக்க முடியவில்லை. இந்நிலையில், இன்னோவா ஹைக்ராஸின் ஃபேஸ்லி தயாராகி வருவதால் அதை சார்ந்து உருவாக்கப்பட்ட இன்விக்டோவும் விரைவில் ஃபேஸ்லிஃப்ட் அப்க்ரேட்களை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாருதி இன்விக்டோ ஃபேஸ்லிஃப்ட் - என்ன எதிர்பார்க்கலாம்?

சாலை சோதனையின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களின்படி, இன்னோவா ஹைக்ராஸ் ஒரு புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட இன்ஃபோடெயின்மென்ட் ஸ்க்ரீனை பெறும் என்பது உறுதியாகியுள்ளது. இது பெரும்பாலும் 12.3 இன்ச் டச்ஸ்க்ரீனாக இருக்கும். மேலும் புதிய ஹிலக்ஸில் இருந்து பெறப்பட்டிருக்கலாம். ஒரு பெரிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டரும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அம்சங்கள் இன்விக்டோ ஃபேஸ்லிஃப்ட்டிலும் வழங்கப்படும் என கூறப்படுகிறது. மாருதி ஒரு புதிய ஹெட்லைட் மற்றும் டெயில்லைட் வடிவமைப்பை, திருத்தப்பட்ட முன்பக்க க்ரில்லுடன் சேர்த்து வழங்கக்கூடும். எதிர்பார்க்கப்படும் மற்ற அம்சங்களில் ஓட்டோமான் இருக்கைகள், காற்றோட்ட வசதியுள்ள பின்பக்க இருக்கைகள், லெவல் 2 ADAS, 9-ஸ்பீக்கர் JBL சவுண்ட் சிஸ்டம், பின்பக்க இருக்கைகளுக்கு பவர் சீட் ரெக்லைன் மற்றும் இன்னும் சிலவும் அடங்கும்.

இதையும் படியுங்கள்: Toyota Innova Hycross: இன்னோவா ஹைக்ராஸை கட்டிட்டு அழாதீங்க..! விலையிலும், வசதியிலும் டக்கரான 3 மாற்று ஆப்ஷன்கள்

இந்த அம்சங்களின் சேர்க்கை, சொகுசு மற்றும் சௌகரியத்தின் அடிப்படையில் ஒரு முழுமையான தொகுப்பை உறுதி செய்யும். டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸைப் போலல்லாமல், இன்விக்டோ ஒரு சக்திவாய்ந்த ஹைப்ரிட் பவர்டிரெய்னுடன் மட்டுமே வழங்கப்படுகிறது. இது அடிப்படை மாடலான இன்விக்டோவை, இன்னோவா ஹைக்ராஸை விட அதிக விலையுள்ளதாக ஆக்குகிறது. இந்த அப்க்ரேடின் மூலம், இன்னோவா ஹைக்ராஸில் உள்ள 2.0-லிட்டர் NA பெட்ரோல் இன்ஜினை மாருதி பயன்படுத்தக்கூடும். இது மாருதியின் 7-சீட்டர் காருக்குப் போட்டித்தன்மை வாய்ந்த விலையை நிர்ணயிக்க வழிவகுக்க கூடும்.

மாருதி இன்விக்டோ ஃபேஸ்லிஃப்ட் - மற்ற எதிர்பார்ப்புகள்

தற்போதைக்கு, இன்விக்டோ ஃபேஸ்லிஃப்ட் குறித்த எந்த விவரங்களையும் மாருதி வெளியிடவில்லை. இருப்பினும், 2027-ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் மாருதி இதை அறிமுகப்படுத்த வாய்ப்புள்ளதாம். இன்விக்டோவின் லைன் -அப்பில் பெட்ரோல் பவர்டிரெய்னை சேர்த்தால், தற்போதைய தொடக்க விலையை குறைத்து போட்டித்தன்மை வாய்ந்த விலை நிர்ணயிக்கப்படலாம். அதன்படி, இன்விக்டோ ஃபேஸ்லிஃப்ட்டின் தொடக்க விலை ரூ. 18 - 20 லட்சம் (எக்ஸ் - ஷோரூம்) ஆக குறையலாம்.


Car loan Information:

Calculate Car Loan EMI