Audi Q3 SUV: ஜெர்மனை சேர்ந்த சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான ஆடியின் இந்திய சந்தைக்கான மலிவான எஸ்யுவி ஆன, Q3 மாடலின் விலை, அம்சங்கள் தொடர்பான விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
என்ட்ரி லெவல் சொகுசு கார்கள்:
இந்தியாவில் என்ட்ரி லெவல் சொகுசு எஸ்யுவி பிரிவில் குறிப்பிடத்தக்க அப்க்ரேட்கள் செய்யப்பட்டுள்ளன. சமீபத்தில், பிஎம்டபிள்யூ நிறுவனம் X1-இன் நீண்ட வீல்பேஸ் எடிஷனை விற்பனைக்கு கொண்டு வந்தது. முற்றிலும் புதிய மெர்சிடிஸ்-பென்ஸ் GLA சில வாரங்களுக்கு முன்பு உலகளவில் அறிமுகமானது, விரைவில் இந்தியாவிற்கும் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஜெர்மனியை சேர்ந்த ஆடி நிறுவனம் இந்தியாவில் தனது மிகவும் மலிவு விலை எஸ்யுவியான Q3-இன் மூன்றாம் தலைமுறை மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் சந்தைப்படுத்துதலுக்கு இன்னும் சில மாதங்கள் நிலையில், முற்றிலும் புதிய Q3 இந்தியாவில் என்னென்ன அம்சங்களை பெறும் என்ற தகவல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
இந்தியாவிற்கான ஆடி Q3 எஸ்யுவி - வெளிப்புற டிசைன்
அளவைப் பொறுத்தவரை, புதிய Q3 முந்தைய மாடலை விட சுமார் 40 மிமீ நீளமானது. இருப்பினும், வீல்பேஸ் அப்படியே தொடர்கிறது. எனவே கேபின் இடவசதி முந்தைய மாடலுக்கு இணையாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். ஸ்டைலிங் கணிசமாக மாறியுள்ளது. புதிய Q3, பெரிய Q5 மாடலில் இருந்து வடிவமைப்பு தாக்கத்தை பெற்றுள்ளது. இதில் பெரிய எண்கோண சிங்கிள்ஃப்ரேம் க்ரில், பிரிக்கப்பட்ட ஹெட்லேம்ப்கள், பிக்சல்-ஸ்டைல் பகல் நேரங்களில் ஒளிரும் விளக்குகள் மற்றும் மேலும் எடுப்பான பாடி சர்பேசிங் ஆகியவை இடம்பெற்றுள்ளன. பின்புறத்தில், ஒரு லைட் பார் மூலம் பார்வைக்கு இணைக்கப்பட்ட பிரிக்கப்பட்ட டெயில்-லேம்ப்கள் உள்ளன.
ஆடி Q3 எஸ்யுவி - உட்புற அம்சங்கள், வசதிகள்
புதிய Q3-இன் முக்கிய சிறப்பம்சம், வாகனத்தின் உள்ளே செய்யப்பட்டுள்ள தொழில்நுட்ப மாற்றங்களே ஆகும். மேம்படுத்தப்பட்ட அம்சங்களின் பட்டியலில், 11.9 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், 12.8 இன்ச் சென்ட்ரல் டச்ஸ்க்ரீன், ஹெட்-அப் டிஸ்ப்ளே, புதிய தலைமுறை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் மிகவும் அதிநவீன குரல்வழி/இணைப்புச் செயல்பாடுகள் உள்ளிட்டவை அடங்கும். உட்புறமும் முழுமையாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி மறுவடிவமைக்கப்பட்ட கட்டுப்பாட்டு அமைப்பைக் கொண்ட புதிய ஸ்டீயரிங் வீல் இடம்பெற்றுள்ளது. சுவாரஸ்யமாக, கியர் செலக்டர் ஸ்டீயரிங் வீலுக்குப் பின்னால் உள்ள ஒரு காம்பிற்கு மாற்றப்பட்டுள்ளது, இது சென்டர் கன்சோலில் இடத்தை மிச்சப்படுத்துகிறது.
ஆடி Q3 எஸ்யுவி - பவர்ட்ரெயின் விவரங்கள்
சர்வதேச சந்தைகளில், Q3 ஆனது டீசல், MHEV மற்றும் PHEV விருப்பங்கள் உட்பட பலதரப்பட்ட பவர்ட்ரெய்ன்களில் கிடைக்கிறது. இருப்பினும், இந்தியாவிற்கான மாடல், முன்பைப் போலவே, ஒரே ஒரு பெட்ரோல் இன்ஜின் விருப்பத்துடன் தொடரவே அதிக வாய்ப்புள்ளது. அது நான்கு சிலிண்டர் 2.0-லிட்டர் டர்போ-பெட்ரோல் (204 bhp மற்றும் 320 Nm டார்க்) இன்ஜின் ஆகும். இதில் 7 ஸ்பீட் டூயல்-க்ளட்ச் ஆட்டோமேட்டிக் மற்றும் ஆடியின் குவாட்ரோ ஆல்-வீல்-டிரைவ் சிஸ்டத்துடன் வருகிறது.
ஆடி Q3 எஸ்யுவி - விலை, போட்டியாளர்கள்
தற்போதைய நிலையை போலவே, Q3-யின் புதிய எடிஷனும் இந்தியாவில் BMW X1 மற்றும் Mercedes-Benz GLA கார்களுடன் தொடர்ந்து போட்டியிடும். விலையைப் பொறுத்தவரை, தற்போதைய Q3 மாடலின் விலை சுமார் ரூ.54 லட்சம் முதல் ரூ. 69.50 லட்சம் வரை (ஆன்-ரோட், சென்னை) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதிய தலைமுறை மாடலின் ஆரம்ப விலை ரூ. 60 லட்சம் (ஆன்-ரோட்) என நிர்ணயிக்கப்படலாம்.
Car loan Information:
Calculate Car Loan EMI