Car Launch in March 2024: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மார்ச் மாதம் நான்கு புதிய கார்கள் அறிமுகமாக உள்ளன.


மார்ச் மாதம் அறிமுகமாகவுள்ள கார்கள்:


புதிய கார் வாங்க திட்டமிட்டுள்ளீர்களா? அப்படி என்றால் நீங்கள் அதிர்ஷ்டத்தில் இருக்கிறீர்கள்! காரணம் பல புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட கார் மாடல்கள் வரும் வாரங்களில் இந்திய சந்தையில் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. அதன்படி,  மார்ச் மாதத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ள நான்கு முக்கியமான கார்களின் அம்சங்கள், விவரங்கள் மற்றும் விலை பட்டியல் ஆகியவை கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.


Hyundai Creta N Line:


இந்தியர்களின் விருப்பமான எஸ்யூவியான ஹூண்டாய் கிரேட்டா விரைவில் என் லைன் எடிஷனில் மேம்படுத்தப்பட உள்ளது. மார்ச் 11 ஆம் தேதி தொடங்கப்படும், கிரேட்டா என் லைன் வழக்கமான கிரேட்டாவை விட அதிக செயல்திறனை வழங்கும். இதன் மூலம், ஹூண்டாய் அதிக செயல்திறன் கொண்ட வாகனங்களை விரும்பும் கார் ஆர்வலர்களை ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த கார் 158bhp மற்றும் 253Nm டார்க் ஆற்றலை உருவாக்கும் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினை கொண்டுள்ளது. சஸ்பென்சன் மற்றும் பிற அம்சங்கள் வழக்கமான கிரேட்டாவைப் போலவே இருக்கும். அதேநேரம்,  N லைன் புதுப்பிக்கப்பட்ட கிரில் மற்றும் பம்பர்களுடன் மிகவும் கவர்ச்சிகரமான வெளிப்புறத்தைக் கொண்டிருக்கும். இதன் விலை 23 லட்ச ரூபாய் வரை இருக்கும் என கூறப்படுகிறது.


Tata Nexon Dark Edition:


டாடா நெக்ஸான் அதன் உயர் பாதுகாப்பு ரேட்டிங்கிற்காக பயனாளர்களால் கொண்டாடப்படுகிறது.  டாடா மோட்டார்ஸ் இப்போது 2024 நெக்ஸான் டார்க் எடிஷனை இந்திய சந்தைக்கு கொண்டு வருகிறது. மேலும் கவர்ச்சிகரமான அம்சங்களுடன், இந்த காரின் வெளியீடு மார்ச் மாத தொடக்கத்தில் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, ​​Tata Nexon பெட்ரோல் மற்றும் டீசல் வகைகளில் கிடைக்கிறது, மேலும் CNG விருப்பமும் விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது. நெக்ஸானின் ஆரம்ப விலை ரூ. 8.14 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்).  ஆனால் டார்க் எடிஷன் அந்தந்த வழக்கமான மாடல்களை விட ரூ.30,000 அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Mahindra XUV300 Facelift:


மஹிந்திராவின் சிறந்த தயாரிப்பான  மஹிந்திரா XUV300, விரைவில் ஒரு ஃபேஸ்லிஃப்ட் பெறுகிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்றாலும், அடுத்த சில வாரங்களில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மஹிந்திரா இந்த காருக்கு விரிவான சாலை சோதனைகளை நடத்தி வருவது, XUV300 ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் வரவிருக்கும் ஃபேஸ்லிஃப்ட் எடிஷன், வெளிப்புற தோற்றம் மற்றும் அம்சங்கள் இரண்டிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களை பெறும் என கூறப்படுகிறது. இதன் தொடக்க விலை 9 லட்ச ரூபாய் வரை நிர்ணயிக்கப்படும் என கூறப்படுகிறது.


BYD Seal EV:


சீன எலக்ட்ரிக் கார் உற்பத்தியாளர் BYD தனது மூன்றாவது தயாரிப்பான BYD Seal மின்சார வாகனத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம் இந்திய சந்தையில் தனது இருப்பை வலுப்படுத்துகிறது. இந்த கார் டெஸ்லா மாடல் 3 உடன் உலக அளவில் போட்டி போடும் மற்றும் ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 570 கிமீ தூரம் வரை செல்லும். பிரீமியம் மற்றும் ஆடம்பர அம்சங்களுடன், சீல் EV மார்ச் 5 ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. அதே நாளில் விலை விவரங்கள் வெளியிடப்படும்.  ஆனால் இதன் விலை ரூ.50 லட்சம் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Car loan Information:

Calculate Car Loan EMI