பஜாஜ் நிறுவனம் தனது புதிய செட்டாக் மின்சார ஸ்கூட்டரை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


பஜாஜ் நிறுவனம்:


இந்தியாவில் ஸ்கூட்டர் என்றாலே அனைவரது நினைவிற்கும் வருவது பஜாஜ் நிறுவனம் தான். அந்நிறுவனத்தின் வாகனங்கள் நாட்டு மக்களிடையே ஏற்படுத்திய தாக்கம் அத்தகையது. ஆனால், அதிகரித்த மோட்டர் சைக்கிள் மாடல்களின் பயன்பாடு காரணமாக,  இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் தற்போது பஜாஜ் அட்டோமொபைல் நிறுவனத்தின் ஸ்கூட்டர்கள் எதுவும் விற்பனையில் இல்லை. அதேநேரம், காலத்திற்கு ஏற்றவாறு தன்னை மெருகேற்றிக் கொண்டு ரி-எண்ட்ரி கொடுத்த பஜாஜ் நிறுவனம், தனது முதல் மின்சார ஸ்கூட்டரை கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது. 


விற்பனையில் அசத்திய செட்டாக் ஸ்கூட்டர்:


செட்டாக் மின்சார ஸ்கூட்டர் எனும் பெயரில் அறிமுகப்படுத்தப்பட்ட, பஜாஜ் நிறுவனத்தின் முதல் மின்சார ஸ்கூட்டரின் விலை சுமார் ஒரு லட்சத்து 52 ஆயிரம் ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டது. 2022 ஆண்டில் மட்டும் கிட்டத்தட்ட 30 ஆயிரம் செட்டாக் யூனிட்களை பஜாஜ் விற்பனை செய்துள்ளது. இந்த எண்ணிக்கை அடுத்தடுத்த ஆண்டுகளில் தொடர்ந்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, வாடிக்கையாளர்களை மேலும் கவர செட்டாக் வாகனத்தில், பல்வேறு புதிய அப்டேட்களை வழங்க பஜாஜ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.


புதிய அப்டேட் என்ன?


செட்டாக் அப்டேடட் வேரியண்டில், மென்பொருள் மற்றும் கண்ட்ரோலர் அல்காரிதம்களில் மாற்றங்கள் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. அதேநேரம், ஏற்கனவே உள்ள பேட்டரி திறனில் எந்தவித மாற்றமும் செய்யப்படாது என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய பஜாஜ் செட்டாக் மாடல் 2423 குறியீட்டு பெயர் கொண்டிருக்கிறது. இது பிரீமியம் வேரியண்டில் மட்டுமே கிடைக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மாடலில் 50.4 வோல்ட் 57.24 Ah பேட்டரி வழங்கப்படுகிறது. இத்துடன் 4.2 கிலோவாட் பீக் பவர் வெளிப்படுத்தும் மோட்டார் இடம்பெறுகிறது. புதிய செட்டாக் மாடலை ஸ்கூட்டரை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 108 கிலோமீட்டர் வரை பயணிக்கலாம் என கூறப்படுகிறது. முன்னதாக இந்த வாகனத்தின் ரேன்ஜ் வெறும் 90 கிலோ மீட்டர் ஆக மட்டுமே இருந்த நிலையில், தற்போது 20 சதவிகிதம் அளவிற்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, அதன் விலையில் ஏதேனும் மாற்றம் ஏற்படுமா என்பதை பொருத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.


எந்த வண்ணங்களில் கிடைக்கும்?


முன்னதாக 2021 டிசம்பர் மாத வாக்கில் வெளியான தகவல்களின் படி பஜாஜ் நிறுவனம் செட்டாக் ஸ்கூட்டரின் திறனை அதிகப்படுத்த இருப்பதாக கூறப்பட்டது. பஜாஜ் செட்டாக் மாடல் அர்பேன் மற்றும் பிரீமியம் என இருவித வேரியண்ட்களில் கிடைக்கிறது. தற்போதைய தகவல்களில் செட்டாக் பிரீமியம் வேரியண்ட் பற்றிய விவரங்கள் மட்டுமே இடம்பெற்று இருக்கிறது.


Car loan Information:

Calculate Car Loan EMI