மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் புதிய எஸ்யுவி XUV700 வாகனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆடம்பரமான அதிநவீன வசதிகள் கொண்ட இந்த கார் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தியாவில் எக்ஸ்யுவி500 பிரபலமாக இருப்பதால் புதிய மாடலின் பெயர் எக்ஸ்யுவி 700 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


சந்தைக்கு வருவதற்கு முன்னதாகவே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய வாகனம் இதுவென்று கூறலாம்.
புதிய எக்ஸ்யுவி 700ன் அடையாளமே அதன் முகப்பு தான் என்று கூறும் அளவுக்கு அது அமைந்துள்ளது. ஸ்மார்ட் டோர் ஹேண்டில்ஸ், ஆட்டோ பூஸ்டர் ஹெட் லேம்ப்ஸ் உள்ளன.




காரின் உள் பகுதி மிகவும் பிரம்மாண்டமாக அழகாக உள்ளது. உள்புறத் தோற்றமே இது சொகுசு கார் என்பதை உணர்த்தியுள்ளது.


இந்தக் காரில் அலெக்ஸா வாய்ஸ் ஏஐ (செயற்கை நுண்ணறிவு) உள்ளது. இதன் பயன்படுத்தி தங்களின் வாடிக்கையாளர்கள் ஜன்னல்களை இயக்கலாம், ஏசி குளிர்நிலையை அட்ஜஸ்ட் செய்யலாம், பாடல்களை இசைக்கலாம், ஆடியோ புக்ஸ் கேட்கலாம், பயண திசைகளை அறியலாம், போக்குவரத்து நெரிசல் நிலவரத்தையும் தெரிந்து கொள்ளலாம். அதுமட்டுமல்லாமல் பார்க்கிங் வசதியை கண்டறியலாம்.


இதன் இன்னொரு சிறப்பு, ஸ்கை ஃபூர். 1360 மிமீ நீளம் 870 மிமீ அகலத்தில் இந்த வசதி கொடுக்கப்பட்டுள்ளது. ரூஃப் மவுன்டட் ஸ்பீக்கர்ஸ் இதன் கூடுதல் சிறப்பு. 12 கஸ்டமைஸ்டு பில்ட் ஸ்பீக்கர்கள் உள்ளன.
இந்தக் காரில், Smart Core என்று பெயரிடப்பட்டிருக்கும் தொழில்நுட்பத்துடன் புதிய இன்ஃபோடெய்ன்மென்ட் சிஸ்டம், 360 டிகிரி கேமரா, சட்டரீதியாகவே கட்டாயமாக்கப்பட இருக்கும் பாதுகாப்பு அம்சமான ADAS (Advanced Driver Assistance System) ஆகியன உள்ளன.


இந்தக் கார், 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல், 2.2 லிட்டர் டீஸல் என இரண்டு வகைகளில் வருகின்றன. எக்ஸ்யுவி 700 டீசல் ரகத்தில் ஜிப், ஜேப், ஜூம் என மூன்று வகைகள் உள்ளன.


இதில் அடுத்தபடியாக எம்எக்ஸ், அட்ரீனாக்ஸ் என இரண்டு வேரியன்ட்கள் வரவுள்ளன.




இதோ விலைப்பட்டியல்:


MX Gasoline - ₹ 11.99 Lakh
MX Diesel - ₹ 12.49 Lakh
AdrenoX AX3 Gasoline - ₹ 13.99 Lakh
AdrenoX AX5 Gasoline - ₹ 14.99 Lakh


இவை தவிர மற்ற வேரியன்ட்களின் விலை விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


அதிக இடவசதி கொண்ட, நவீன டெக் வசதிகள் கொண்ட மூன்று வரிசை சீட்களை உடைய வாகனமாக XUV 700 உள்ளது. எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் மற்றும் டாடா சஃபாரியுடன் போட்டி போட இந்த எஸ்யூவியை மஹிந்திரா அண்ட மஹிந்திரா நிறுவனம் தயாரித்துள்ளதாகத் தெரிகிறது.


Car loan Information:

Calculate Car Loan EMI