நகரத்தில் ஓட்டுவதற்கு மலிவு விலையில், வசதியான மற்றும் விசாலமான தானியங்கி(Automatic) காரை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், ரெனால்ட் ட்ரைபர்(Renault Triber) ஒரு நல்ல தேர்வாக இருக்கலாம். தற்போது இந்தியாவின் மிகவும் மலிவு விலை தானியங்கி MPV-யாகக் கருதப்படும் இது, நடுத்தர வர்க்க குடும்பங்களுக்கு ஒரு சிறந்த தேர்வாக இருக்கலாம். இதன் தானியங்கி கியர்பாக்ஸ், நகர போக்குவரத்தில் மிகவும் உதவியாக இருக்கும். அதன் அம்சங்களை தற்போது பார்ப்போம்.
ரெனால்ட் ட்ரைபரின் விலை என்ன.?
ரெனால்ட் ட்ரைபர் கார் சுமார் 5.76 லட்சம் ரூபாயில்(எக்ஸ்-ஷோரூம்) தொடங்குகிறது. இது பட்ஜெட் பிரிவில் மிகவும் மலிவு விலையில் கிடைக்கும் 7 இருக்கைகள் கொண்ட கார் ஆகும். இதன் தானியங்கி AMT வேரியண்ட், சுமார் 8.39 லட்சம் ரூபாயில் தொடங்குகிறது. இந்த விலையில், 7 இருக்கைகள் மற்றும் தானியங்கி டிரான்ஸ்மிஷன் கிடைக்கும் மாருதி எர்டிகா மற்றும் கியா கேரன்ஸை விட, இதை கணிசமாக மலிவானதாக ஆக்குகிறது. பட்ஜெட்டில் விசாலமான குடும்ப காரைத் தேடுபவர்களுக்கு, இது ஒரு சிறந்த தேர்வாகும் .
எஞ்சின், செயல்திறன் மற்றும் மைலேஜ்
ரெனால்ட் ட்ரைபர் 1.0 லிட்டர், 3- சிலிண்டர் பெட்ரோல் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. இது சுமார் 72 PS சக்தியையும் 96 Nm டார்க்கையும் உற்பத்தி செய்கிறது. இந்த எஞ்சின், அதன் மென்மையான ஓட்டுதலுக்கு பெயர் பெற்றது மற்றும் தினசரி நகர ஓட்டுதலுக்கு ஏற்றது. இது மேனுவல் மற்றும் AMT ஆட்டோமேட்டிக் விருப்பங்களில் கிடைக்கிறது. எரிபொருள் சிக்கனத்தைப் பொறுத்தவரை, ட்ரைபர் ஒரு லிட்டருக்கு சுமார் 17 முதல் 20 கிலோ மீட்டர் வரை மைலேஜை வழங்குகிறது. இது, இந்த பிரிவில் 7 இருக்கைகள் கொண்ட காருக்கு மிகவும் நல்லது.
அம்சங்கள், பாதுகாப்பு மற்றும் போட்டியாளர்கள்
ரெனால்ட் ட்ரைபர் காரில் 8 அங்குல தொடுதிரை, ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே, பின்புற ஏசி வென்ட்கள், க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் பார்க்கிங் சென்சார்கள் போன்ற அத்தியாவசிய அம்சங்கள் உள்ளன. பாதுகாப்பிற்காக, இதில் 6 ஏர்பேக்குகள், ஏபிஎஸ் மற்றும் EBD ஆகியவை அடங்கும்.
இது, மாருதி எர்டிகா, கியா கேரன்ஸ், மஹிந்திரா பொலிரோ நியோ மற்றும் மாருதி ஈகோவுடன் போட்டியிடுகிறது. ஆனால், ரெனால்ட் ட்ரைபர் பணத்திற்கு ஏற்ற சிறந்த காராக உள்ளது. பட்ஜெட்டில் 7 இருக்கைகள் கொண்ட தானியங்கி காரைத் தேடுபவர்களுக்கு, இந்த ரெனால்ட் ட்ரைபர் ஒரு சிறந்த கார் என்பதில் சந்தேகமில்லை.
Car loan Information:
Calculate Car Loan EMI