MG Year End Discounts:  எம்ஜி நிறுவனம் டிசம்பர் மாதத்தில் தனது எந்தெந்த கார் மாடல்களுக்கு, எவ்வளவு தள்ளுபடிகளை வழங்கியுள்ளது என கீழே விவரிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

தள்ளுபடிகளை அறிவித்த எம்ஜி நிறுவனம்:

ஆண்டு இறுதியை ஒட்டி இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் விற்பனையை ஊக்குவிக்கும் விதமாக, கார் உற்பத்தி நிறுவனங்கள் தங்களது மாடல்களுக்கு சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை அறிவித்து வருகின்றன. அந்த வரிசையில் எம்ஜி நிறுவனமும் தனது கார்களுக்கான டிசம்பர் மாத சலுகை விவரங்களை வெளியிட்டுள்ளது. இன்ஜின் அடிப்படையிலான மற்றும் மின்சார வாகனங்கள் என இரண்டுமே இதில் அடங்கும். நடப்பாண்டில் உற்பத்தி செய்யப்பட்ட மாடல்கள் புத்தாண்டிலும் கையிருப்பில் இருப்பதை விரும்பாமல், சிறிய கார்கள் தொடங்கி முழு அளவிலான எஸ்யுவி வரையிலும் இந்த சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.

Continues below advertisement

எம்ஜி நிறுவனத்தின் சலுகை பட்டியல்:

மாடல்

அதிகபட்ச தள்ளுபடி

எம்ஜி க்ளோஸ்டர்

₹4,00,000 வரை

எம்ஜி இசட்எஸ் இவி

₹1,25,000 வரை

எம்ஜி காமெட் ஈவி

₹1,00,000 வரை

எம்ஜி ஹெக்டர் / ஹெக்டர் பிளஸ்

₹90,000 வரை

எம்ஜி விண்ட்சர் ஈவி

₹50,000 வரை

எம்ஜி ஆஸ்டர்

₹50,000 வரை

 

ரூ.4 லட்சம் எந்த காருக்கான சலுகை?

எம்ஜி நிறுவனம் அறிவித்துள்ள ரூ.4 லட்சம் என்ற அதிகபட்ச சலுகை எம்ஜி க்ளோஸ்டருக்கு வழங்கப்பட்டுள்ளது.  இந்த முழு அளவிலான SUV ஆனது டொயோட்டா ஃபார்ச்சூனர் மற்றும் ஸ்கோடா கோடியாக் ஆகியவற்றுடன் போட்டியிடுகிறது. ஷார்ப், ஷேவி மற்றும் ஷேவி 6-இருக்கை வகைகளில் கிடைக்கிறது. இதன் விலை 38.33 லட்சத்தில் தொடங்கி 43.73 லட்சம் வரை நீள்கிறது.

அடுத்ததாக இந்த பட்டியலில் உள்ள MG ZS EV கார் மாடலுக்கு ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 50.3 kWh பேட்டரி பேக்குடன் 461 கிலோ மீட்டர் தூரம் வரை ரேஞ்ச் அளிக்கும் என கூறப்படுகிறது. ரூ.7.5 லட்சம் என்ற விலையில் தொடங்கும் கோமெட்டிற்கும் ரூ.1 லட்சம் வரையிலான சலுகைகள் வழங்கப்படுகின்றன. இதன் மூலம் நாட்டில் கிடைக்கும் மலிவு விலை மின்சார காராக கோமெட் உருவெடுத்துள்ளது.

நாட்டின் முதன்மையான மின்சார கார்:

ஹெக்டெர் மற்றும் 3 வரிசை ஹெக்டர் ப்ளஸ் கார் மாடல்களானது ரூ.90 ஆயிரம் வரை பலன்களை பெறுகிறது. இதில் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 2 லிட்டர் டீசல் ஆப்ஷன்களை பயனர்கள் தேர்வு செய்யலாம். தொடர்ந்து, நாட்டில் அதிகம் விற்பனையாகும் மின்சார காராக திகழும், விண்ட்சர் மீது 50 ஆயிரம் ரூபாய் சலுகைகல் அறிவிக்கப்பட்டுள்ளன. இரண்டு பேட்டரி ஆப்ஷன்களுடன் அதிகபட்சமாக இந்த கார் 449 கிலோ மீட்டர் ரேஞ்ச் அளிக்கிறது. கடைசியாக MG Astor ரூ.50 ஆயிரம் வரையிலான பணப்பலனை பெறுகிறது.

எம்ஜியின் புதிய கார்கள்:

டிசம்பர் 15 ஆம் தேதி, MG ஹெக்டரின் மேம்படுத்தப்பட்ட எடிஷனை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இது புதிய க்ரில் பகுதியைப் பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக இந்த ப்ராண்டானது விரைவில் மேஜஸ்டர் எனப்படும் க்ளோஸ்டரின் மிகவும் விலையுயர்ந்த பதிப்பை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் இது ஏற்கனவே பல முறை சாலை பரிசோதனையின் போது காணப்பட்டுள்ளது.


Car loan Information:

Calculate Car Loan EMI