4 லட்சம் ரூபாய் ஆஃபர்! MG கார்களுக்கு தாறுமாறு தள்ளுபடி - எந்தெந்த வண்டிக்கு?
எம்ஜி கார்களுக்கான தள்ளுபடியை அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. எந்தெந்த காருக்கு எவ்வளவு தள்ளுபடி? என்பதை கீழே விரிவாக காணலாம்.

இந்தியாவில் கார் வி்ற்பனையில் முக்கியமான நிறுவனமாக திகழ்ந்து வரும் நிறுவனங்களில் ஒன்று எம்ஜி. எம்ஜி நிறுவனம் தன்னுடைய கார்களுக்கு ஜுன் மாத தள்ளுபடியை அறிவித்துள்ளது.
எம்ஜி எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு தள்ளுபடி? என்பதை கீழே காணலாம்.
1. MG Gloster:
எம்ஜி நிறுவனத்தின் மிகவும் புகழ்பெற்ற கார் இந்த MG Gloster. இந்த காருக்கு ஜுன் மாத தள்ளுபடியாக ரூபாய் 4 லட்சம் அறிவித்துள்ளனர். ரொக்கத் தள்ளுபடியாக ரூபாய் 3.5 லட்சமும், எக்சேஞ்ச் போனஸ் ரூபாய் 50 ஆயிரம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காரின் அடிப்படை விலை ரூபாய் 47.79 லட்சம். இதன் டா,் வேரியண்ட் ரூபாய் 55.19 லட்சம் ஆகும். இந்த காரில் 2.0 லிட்டர் டீசல் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. எஸ்யூவி காரான இந்த காரில் 15 வேரியண்ட் உள்ளது. 213 பிஎச்பி குதிரைத் திறன் மற்றும் 473 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. 1996 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 6, 7 சீட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளது.
2. MG ZS EV:
எம்ஜி நிறுவனத்தின் மின்சார கார் இந்த MG ZS EV. இந்த காருக்கு ஜுன் மாதம் ரூபாய் 2.55 லட்சம் தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது. இதனுடன் லாயல்டி மற்றும் கார்ப்பரேட் தள்ளுபடியாக 20 ஆயிரம் தள்ளுபடியாக அளிக்கப்பட்டுள்ளது. 50.3 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 461 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது.
இதன் தொடக்க விலை ரூபாய் 19.39 லட்சம் ஆகும். இதன் டாப் வேரியண்ட் விலை ரூபாய் 22.32 லட்சம் ஆகும். எலக்ட்ரிக் எஸ்யூவி காரான இந்த காரில் அடாஸ் வசதிகள், பனோரமிக் சன்ரூஃப் வசதிகள் உள்ளது. 5 சீட்டர் வசதிகள் உள்ளது.
3. MG Astor:
எம்ஜி நிறுவனத்தின் மிகவும் புகழ்பெற்ற கார் இந்த MG Astor. இந்த காருக்கு ஜுன் மாத தள்ளுபடியாக 85 ஆயிரம் அளிக்கப்பட்டுள்ளது. ரொக்கத் தள்ளுபடியாக ரூபாய் 25 ஆயிரம், எக்சேஞ்ச் ஆஃபராக ரூபாய் 20 ஆயிரமும், லாயல்டி தள்ளுபடியாக ரூபாய் 20 ஆயிரமும், கார்ப்பரேட் தள்ளுபடியாக ரூபாய் 20 ஆயிரமும் அளிக்கப்பட்டுள்ளது.
MG Astor காரின் தொடக்க விலை ரூபாய் 11.70 லட்சமும், டாப் வேரியண்ட் ரூபாய் 19.32 லட்சமும் ஆகும். 1.3 டர்போ எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. லெவல் 2 அடாஸ் சிஸ்டம் வசதி உள்ளது. 360 டிகிரி சன்ரூஃப் மேற்கூரை உள்ளது.
4.MG Comet EV :
எம்ஜி நிறுவனத்தின் ஹேட்ச்பேக் மின்சார கார் இந்த MG Comet EV கார். இந்த காருக்கு ஜுன் மாத தள்ளுபடியாக ரூாபய் 80 ஆயிரம் அளிக்கப்பட்டுள்ளது. ரொக்கத் தள்ளுபடியாக ரூபாய் 10 ஆயிரமும், எக்சேஞ்ச் தள்ளுபடியாக ரூபாய் 20 ஆயிரமும், லாயல்டி தள்ளுபடியாக ரூபாய் 20 ஆயிரமும், கார்ப்பரேட் தள்ளுபடியாக ரூபாய் 10 ஆயிரமும் அளிக்கப்பட்டுள்ளது. தென்னிந்தியாவில் இந்த காருக்கான ரொக்கத் தள்ளுபடி ரூபாய் 30 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 8.20 லட்சம் ஆகும். இந்த காரின் டாப் வேரியண்ட் ரூபாய் 10.69 லட்சம் ஆகும். 6 வேரியண்ட் கொண்ட இந்த காரில் 17.3 கிலோவாட் பேட்டரியும், 17.4 கிலோவாட் பேட்டரியும் பொருத்தப்பட்டுள்ளது. 191 கிலோமீட்டர் வரை ரியல் மைலேஜ் அளிக்கிறது.
5.MG Hector:
எம்ஜி நிறுவனத்தின் புகழ்பெற்ற கார் இந்த MG Hector. இந்த காருக்கு ஜுன் தள்ளுபடியாக ரூபாய் 50 ஆயிரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காருக்கு எக்சேஞ்ச் போனசாக ரூபாய் 10 ஆயிரமும், லாயல்டி போனஸாக ரூபாய் 20 ஆயிரமும் அளிக்கப்பட்டுள்ளது. கார்ப்பரேட் தள்ளுபடியாக ரூபாய் 20 ஆயிரமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 14.99 லட்சம். இந்த காரின் டாப் வேரியண்ட் ரூபாய் 23.86 லட்சம் ஆகும். லெவல் 2 அடாஸ் வசதி, சன்ரூஃப் வசதி கொண்ட இந்த 5 சீட்டர் எஸ்யூவி 7 வேரியண்ட் கொண்டது. மேனுவல், ஆட்டோமெட்டிக் வசதி கொண்டது.
6.MG Windsor EV:
எம்ஜி நிறுவனத்தின் புகழ்பெற்ற மின்சார கார் இந்த MG Windsor EV. இந்த காருக்கு ஜுன் மாத தள்ளுபடியாக ரூபாய் 50 ஆயிரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காரின் எக்சேஞ்ச் போனசாக ரூபாய் 20 ஆயிரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காருக்கு லாயல்டி போனசாக ரூபாய் 20 ஆயிரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காருக்கு கார்ப்பரேட் தள்ளுபடியாக ரூபாய் 10 ஆயிரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காரில் 38 கிலோவாட் மற்றும் 59.2 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்ட வேரியண்ட் உள்ளது. இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 15.27 லட்சம். இந்த காரின் டாப் வேரியண்ட் ரூபாய் 20 லட்சத்து 04 ஆயிரம் ஆகும்.
ட்ரெண்டிங் செய்திகள்






















