இ்ந்தியாவில் மிகவும் பிரபலமான கார் நிறுவனம் எம்ஜி. இவர்களின் பல்வேறு கார்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. 

MG Majestor:

இந்த நிலையில், MG Majestor என்ற புதிய காரை எம்ஜி நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த கார் வரும் ஏப்ரல் 20ம் தேதி இந்தியாவில் அறிமுகமாக உள்ளது. இந்த காருக்கான முன்பதிவு ஏற்கனவே தொடங்கி நடந்து வருகிறது. இந்த காருக்கான முன்பதிவு ரூபாய் 41 ஆயிரம் ஆகும். 

விலை என்ன?

இந்த கார் 7 சீட்டர் காராக அறிமுகமாக உள்ளது. இந்த புதிய எஸ்யூவி காரின் விலை ரூபாய் 40 லட்சம் முதல் ரூபாய் 45 லட்சம் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த காரை வாடிக்கையாளர்களிடம் மே மாதம் டெலிவரி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் லெவல் 2 அடாஸ், 12.3 இன்ச் டிஸ்ப்ளே, 12 ஸ்பீக்கர் ஜேபிஎல் ஆடியோ வசதி கொண்டுள்ளது. 2.0 லிட்டர் இரட்டை டர்போ டீசல் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 212 பிஎச்பி குதிரைத் திறன் மற்றும் 478 என்எம் டார்க் இழுதிறனும் கொண்டது. 

சிறப்பம்சங்கள்:

இதில் 2 வேரியண்ட் உள்ளது. Majestor Sharp மற்றும் Majestor Savvy ஆகிய வேரியண்ட்களில் விற்பனைக்கு வருகிறது. இதன் முன்பகுதி எல்இடி முகப்பு விளக்குகளைக் கொண்டது. 19 இன்ச் அலாய் சக்கரங்கள் கொண்டது. உட்புறம் 64 ஆம்பியன் கலர்கள் உள்ளது. நார்மல், சான்ட், ராக், மட் மற்றும் ஸ்னோ மோட்களில் உள்ளது.

லெவல் 2 அடாஸ், 360 டிகிரி கேமரா சிஸ்டம், பனோராமிக் சன்ரூஃப் வசதி உள்ளது. வயர்லஸ் சார்ஜர் வசதி உள்ளது. 3 இன்ச் கிளைமேட் கன்ட்ரோல், டிஜிட்டல் கலர் இன்ஸ்ட்ரூமென்ட்  கிளஸ்டர் வசதி உள்ளது.  உட்புற கட்டமைப்பு அருமையாக உள்ளது. ப்ளூடூத் வசதி உள்ளது. இதில் 6 ஏர்பேக், ஏபிஎஸ் வித் இபிடி, இஎஸ்பி, டிபிஎம்எஸ் வசதியுடன் வர உள்ளது. ரிசர்வ் பார்க்கிங் சென்சார் வசதி உள்ளது.

இந்த கார் சந்தையில் அறிமுகமானால் ஃபார்ச்சுனர் காருக்கு மிகவும் சவால் அளிக்கும் என்று கருதப்படுகிறது. ஃபார்ச்சுனர் காருக்கு போட்டியாகவே இந்த காரை அவர்கள் தயாரித்துள்ளனர். இந்த கார் மட்டுமின்றி Jetour T2 காரும் அறிமுகமாக உள்ளது. இந்த கார் இதுவரை இல்லாத அளவு மைலேஜ் தரும் வகையில் உருவாகி வருகிறது.


Car loan Information:

Calculate Car Loan EMI