MG Majestor SUV 7 Seater: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் எம்ஜி நிறுவனத்தின் ஃப்ளாக்ஷீப் மாடலாக மெஜஸ்டர் கார் மாடல் நிலைநிறுத்தப்பட உள்ளது.
எம்ஜி மெஜஸ்டர் 7 சீட்டர் எஸ்யுவி:
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவில், எம்ஜி நிறுவனத்தின் மெஜஸ்டர் கார் மாடல் முதல்முறையாக காட்சிப்படுத்தப்பட்டது. அதனைதொடர்ந்து பலமுறை சாலை பரிசோதனைகளின் போது புகைப்படங்களில் சிக்கியது. க்ளோஸ்டரின் ஃபேஸ்லிஃப்ட் எடிஷனாகவே மெஜஸ்டர் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ப்ராண்டின் இந்த முழு-அளவிலான 7 சீட்டர் எஸ்யுவி ஆனது வரும் பிப்ரவரி 12ம் தேதி உள்நாட்டு சந்தையில் விற்பனைக்கு கொண்டுவரப்பட உள்ளது. மேலும், ப்ராண்டின் முதன்மையான கார் மாடலாகவும் மெஜஸ்யர் நிலைநிறுத்தப்பட உள்ளதாம்.
எம்ஜி மெஜஸ்டர் - கட்டுமஸ்தான டிசைன்
தோற்ற அடிப்படையில் மெஜஸ்டர் ஆனது க்ளோஸ்டரை காட்டிலும், கட்டுமஸ்தானதாகவும், ஸ்போர்டியராகவும் காட்சியளிக்கிறது. எஸ்யுவியின் முன்புறத்தில் புதியதாக வடிவமைக்கப்பட்ட க்ளோஸ்-ப்ளாக் எலிமெண்ட்ஸ்களுடன் கூடிய க்ரில், எல்இடி டிஆர்எல்-களுடன் கூடிய செங்குத்தாக பொருத்தப்பட்ட முகப்பு விளக்குகள், கருப்பு க்ளாடிங் மற்றும் சில்வர் எலிமெண்ட்களை கொண்ட மறுவடிவமைப்பு செய்யப்பட்ட பம்பர் ஆகியவற்றை கொண்டுள்ளது. பானெட்டில் உள்ள ஷீட் மெடல், ஃபெண்டர்ஸ் மற்றும் கதவுகள் ஆகியவை க்ளோஸ்டரில் இருந்ததை போன்றே அப்படியே தொடர்கிறது.
மேலும் வீல் ஆர்ச்களின் மீது மிகப்பெரிய பாடி க்ளாடிங் உடன் கூடிய 5 ஸ்போக் 19 இன்ச் டைமன்ட் கட் அலாய் வீல்கள், ப்ளாக் ரூஃப் ரெயில்கள், டோர் ஹேண்டில்ஸ், ஃபாக்ஸ் சில்வர் ப்ளேட்களுடன் கூடிய கருநிற பின்புற பம்பர், கனெக்டட் எல்இடி டெயில் லேம்ப்ஸ், இரண்டு பக்கங்களிலும் எக்சாஸ்ட் டிப்ஸ் ஆகியவையும் கவனத்தை ஈர்க்கின்றன.
எம்ஜி மெஜஸ்டர் - அம்சங்கள், வசதிகள்
மெஜஸ்டரின் உட்புறத்தில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் மற்றும் வசதிகள் இன்னும் ரகசியமாகவே தொடர்கின்றன. அதேநேரம், இந்த எஸ்யுவி பல ப்ரீமியம் அம்சங்களை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, 12.3 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், முழுமையான டிஜிட்டல் ட்ரைவர்ஸ் டிஸ்பிளே, பனோரமிக் சன்ரூஃப், 12 ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், 3 ஜோன் ஆட்டோமேடிக் க்ளைமேட் கன்ட்ரோல், 3 ஸ்போக் ஸ்டியரிங் வீல், வயர்லெஸ் போன்சார்ஜிங், ஹீடட் பேசஞ்சர் சீட், ஹீடட், கூல்ட், பவர் அட்ஜெஸ்டனுடன் கூடிய மாஸ்ஸிங் ட்ரைவர் இருக்கை ஆகியவை இடம்பெறலாம். கூடுதலாக 360 டிகிரி கேமராக்கள், டயர் ப்ரஷர் மானிட்டரிங் சிஸ்டம், ஆட்டோ ஹோல்டுடன் கூடிய எலெக்ட்ரானிக் பார்கிங் ப்ரேக், லெவல் 2 ADAS போன்ற பல அம்சங்களும் இடம்பெறலாம்.
எம்ஜி மெஜஸ்டர் - இன்ஜின் விவரங்கள்
எம்ஜி மெஜஸ்டர் காரில் க்ளோஸ்டர் மாடலில் இருந்த அதே 2.0L ட்வின்-டர்போசார்ஜ்ட் டீசல் இன்ஜின் அப்படியே தொடர உள்ளதாம். இது 8 ஸ்பீட் டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு அதிகபட்சமாக 216bhp பவரையும், 479Nm டார்க்கையும் உற்பத்தி செய்கிறது. இந்த SUV AWD (ஆல்-வீல் டிரைவ்) அமைப்புடன் சந்தைப்படுத்தப்பட உள்ளது.
எம்ஜி மெஜஸ்டர் - விலை, போட்டியாளர்கள்
உள்நாட்டு சந்தையில் ஸ்கோடா கோடியாக், டொயோட்டா ஃபார்ட்சுனர், ஜீப் மெரிடியன் மற்றும் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ள ஃபோக்ஸ்வாகன் டெய்ரோன் ஆர்-லைன் ஆகிய மாடல்களுடன் நேரடியாக மெஜஸ்டர் போட்டியிட உள்ளது. காரின் விலை தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லாவிட்டாலும், இதன் விலை 39.57 லட்சத்தில் தொடங்கி 44 லட்சத்து 3 ஆயிரம் ரூபாய் வரையில் நிர்ணயிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Car loan Information:
Calculate Car Loan EMI