MG Hector Hawk PHEV:  எம்ஜி நிறுவனத்தின் ப்ளக்-இன் ஹைப்ரிட் கார், ஹெக்டர் ஹாவ்க் என அழைக்கப்படும் என கூறப்படுகிறது.

Continues below advertisement

எம்ஜி புதிய கார் மாடல்கள்:

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் வரும் தீபாவளி சீசனின் போது, இரண்டு புதிய எஸ்யுவிக்களை விற்பனைக்கு கொண்டுவர ஜெஎஸ்டபள்யு எம்ஜி மோட்டார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. எதிர்வரப்போகும் மாடல்களானது சீனாவில் விற்பனையில் உள்ள வுலிங் ஸ்டார்லைட் 560 காரின் அடிப்படையிலான, ப்ளக் இன் ஹைப்ரிட் மற்றும் மின்சார எடிஷன் என கூறப்படுகிறது. இந்த மாடல்களுக்கான பெயர்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிபடுத்தப்படாத நிலையில், ப்ளக் - இன் ஹைப்ரிட் எஸ்யுவி ஆனது எம்ஜி ஹெக்டர் ஹாவ்க் என அடையாளப்படுத்தப்படலாம் என ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், வரும் ஜுலை 16ம் தேதி இந்த கார் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட வாய்ப்புள்ளதாம்.

Continues below advertisement

MG ஹெக்டர் ஹாவ்க் ப்ளக் இன் ஹைப்ரிட் - பவர்ட்ரெயின்

எம்ஜி மோட்டார் நிறுவனமானது தனது புதிய ப்ளக் - இன் ஹைப்ரிட் மற்றும் மின்சார எஸ்யுவியின் பவர்ட்ரெயின் விவரங்களை இதுவரை வெளியிடவில்லை. அதேநேரம் இரண்டு எடிஷன்களும் வுலிங் ஸ்டார்லைட் 560 காரை சார்ந்து இருப்பதால், அதனை அடிப்படையாக கொண்டே பவர்ட்ரெயின்க்ள், ப்ளாட்ஃபார்ம் மற்றும் அம்சங்களை புதிய எஸ்யுவி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. 

சீனாவில் வுலிங் ஸ்டார்லைட் 560 ப்ளக் - இன் ஹைப்ரிட் காரானது 1.5 லிட்டர் நேட்சுரலி ஆஸ்பிரேடட் பெட்ரோல் இன்ஜின் ஆனது, எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் 20.5KWh பேட்டரி பேக்கையும் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. ப்ளக் இன் ஹைப்ரிட் எடிஷன் மூலம் 100 கிலோ மீட்டர் ரேஞ்ச் அளிக்கும் என கூறப்படும் நிலையில், எரிபொருள் டேங்கை முழுமையாக நிரப்பினால் ஆயிரத்து 100 கிலோ மீட்டர் தூரம் இடைநிற்றலின்றி பயணிக்க முடியும் என கருதப்படுகிறது. 

புதிய MG மின்சார காரின் பவர்ட்ரெயின்

எம்ஜி ஹெக்டர் ஹாவ்க் மின்சார கார் 56.7kWh பேட்டரி பேக்கில், 236bhp மற்றும் 200Nm ஆற்றலை உற்பத்தி செய்யும் ஒற்றை மின்சார மோட்டாரை பெறும்  என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை முழுமையாக சார்ஜ் செய்தால்,  500 கி.மீ. தூரம் வரை இடைநிற்றலின்றி பயணிக்க முடியும் என கூறப்படுகிறது. இந்த எலெக்ட்ரிக் எஸ்யுவி 13 வினாடிகளில் பூஜ்ஜியம் முதல் மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தை எட்டுகிறது. அதிகபட்சமாக மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டுள்ளது. ஒரு DC ஃபாஸ்ட் சார்ஜரைப் பயன்படுத்தி, இந்த மின்சார வாகனத்தை வெறும் 20 நிமிடங்களில் 30% முதல் 80% வரை சார்ஜ் செய்ய முடியும். இது AC சார்ஜிங்கையும் ஆதரிக்கிறது, இதில் முழுமையாக சார்ஜ் ஆக சுமார் 9.2 மணிநேரம் ஆகும்.

இதையும் படியுங்கள்: EV Car Battery: 15 வருட பேட்டரி வாரண்டி, ரேஞ்ச்? இந்தியாவின் நம்பகமான டாப் 5 மின்சார கார்கள் - விலை எப்படி?

புதிய MG எஸ்யுவிக்களின் விலை விவரங்கள்

எம்ஜி நிறுவனத்தின் புதிய ப்ளக்-இன் ஹைப்ரிட் எஸ்யுவி ஆனது, 7 சீட்டர் எடிஷனில் தொடக்க விலையே 20 லட்சம் ரூபாயை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. புதிய மின்சார எஸ்யுவியின் விலையானது ரூ.8.20 லட்சம் தொடங்கி ரூ.10.69 லட்சம் வரை நீள்கிறது.


Car loan Information:

Calculate Car Loan EMI