இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களின் தேவை கணிசமாக அதிகரித்து வரும் சூழலில், மெர்சிடிஸ் பென்ஸ் மற்றும் டெஸ்லா போன்ற முன்னணி பிராண்டுகளுக்குக் கடும் சவாலை அளிக்கும் வகையில், ஜெர்மன் கார் தயாரிப்பு நிறுவனமான பிஎம்டபிள்யூ தனது புதிய எலக்ட்ரிக் கார்களைக் களமிறக்குவதில் தீவிரம் காட்டி வருகிறது.

Continues below advertisement

நேற்று (செப்.9) உலக EV தினத்தின்போது, பிஎம்டபிள்யூ இந்தியாவின் சிஇஓ ஹர்தீப் சிங் பிரார், தங்களின் புதிய நியூ கிளாஸ் (NeoClasse) EV பிளாட்ஃபார்ம் கார்கள் விரைவில் இந்தியாவுக்கு வரும் என்பதை உறுதிப்படுத்தினார். இந்த வரிசையில் முதலில் வரவிருப்பது முற்றிலும் புதிய பிஎம்டபிள்யூ iX3 (BMW iX3) எலக்ட்ரிக் எஸ்யூவி காராகும்.

பேட்டரி மற்றும் 805 கி.மீ ரேஞ்ச்

Continues below advertisement


புதிய iX3 காரில் 6-வது தலைமுறை eDrive தொழில்நுட்பத்துடன் கூடிய மிகப்பெரிய 108.7kWh உருளை வடிவ பேட்டரி பேக் இடம்பெற்றுள்ளது. டூயல் மோட்டார் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட இது 469 hp பவரையும், 645 Nm உச்சகட்ட டார்க்கையும் வெளிப்படுத்தும். சிங்கிள் சார்ஜில் 805 கி.மீ (WLTP) ரேஞ்ச் தரும் என நிறுவனம் கூறுகிறது. இதனால் நெடுஞ்சாலைகளில் நீண்ட தூரம் பயணிக்கும்போது சார்ஜ் தீர்ந்துவிடுமோ என்ற கவலை இருக்காது.

அதிவேக சார்ஜிங்

800V கட்டமைப்பில் உருவாக்கப்பட்ட இந்த எஸ்யூவி, 400kW DC ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்யும். இதில் வெறும் 10 முதல் 12 நிமிடங்கள் சார்ஜ் செய்தாலே 350 கி.மீ தூரம் வரை பயணிக்க முடியும். பெட்ரோல், டீசல் வாகனங்களைப்போலவே நிமிடங்களில் சார்ஜ் செய்துவிட்டு பயணத்தைத் தொடர இது பெரிதும் உதவும்.

வடிவமைப்பு மற்றும் இன்டீரியர்


இந்த காரின் கேபின் முழுவதும் டிஜிட்டல் மயமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. காரின் விண்ட்ஷீல்டின் கீழ்ப்பகுதி முழுவதிலும் முக்கியத் தகவல்களைக் காட்டும் புதிய பனோரமிக் விஷன் டிஸ்ப்ளே இதில் உள்ளது. OS X இயங்குதளத்தில் செயல்படும் பெரிய சென்ட்ரல் டச்ஸ்கிரீன், நேர்த்தியான டேஷ்போர்டு மற்றும் AI வாய்ஸ் அசிஸ்டண்ட் ஆகிய ஹை டெக் அம்சங்கள் உள்ளன. பின் இருக்கை பயணிகளுக்குச் சிறந்த லெக்ரூம் வசதியைத் தரும் வகையில் இது 'லாங்-வீல்பேஸ்' மாடலாக இந்தியாவில் அறிமுகமாகிறது.

போட்டியாளர்களுக்குச் சவால்

இந்திய சொகுசு EV சந்தையில் iX1 LWB மற்றும் i5 LWB கார்கள் மூலம் பிஎம்டபிள்யூ தற்போது முன்னிலையில் உள்ளது. பெரும்பாலான எலக்ட்ரிக் கார்கள் 500- 600 கி.மீ ரேஞ்ச் மட்டுமே தரும் நிலையில், 805 கி.மீ ரேஞ்ச் மற்றும் அதிவேக சார்ஜிங் வசதியுடன் வரும் iX3 மாடல், மெர்சிடிஸ் பென்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனங்களுக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும். இது சொகுசு கார் செக்மெண்டில் பிஎம்டபிள்யூவை முடிசூடா மன்னனாக மாற்றும். 


Car loan Information:

Calculate Car Loan EMI