Mercedes AMG C 63 SE: மெர்சிடஸ் AMG C 63 SE கார் மாடலின் செயல்திறன் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
மெர்சிடஸ் AMG C 63 SE
மெர்சிடஸ் நிறுவனத்தின் முந்தைய C63 AMGகள் சூப்பர் கார் வேகத்தை, செடான் ப்ராக்டிகலிட்டியுடன் இணைப்பதற்கு அறியப்பட்ட ஒரு சக்திவாய்ந்த கார் மாடலாகும். நிறுவனத்தின் AMG பிராண்டாவ்னது எட்டு சிலிண்டர்கள் மற்றும் அதிக சத்தத்திற்கு பெயர் பெற்றது. இந்நிலையில், மெர்சிடஸின் புதிய C 63 கார் மாடல் சர்வதேச ஆட்டோமொபைல் சந்தைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இது முற்றிலும் வேறுபட்டது மற்றும் அதிக ஆற்றலைச் சேர்க்க F1 தொழில்நுட்பத்தின் உதவியைப் பெறுகிறது. அதாவது, ஒரு சிக்கலான பிளக்-இன் ஹைப்ரிட் பவர்டிரெய்னை பயன்படுத்துகிறது.
AMG C 63 SE இன்ஜின் விவரங்கள்:
AMG C 63 SE செயல்திறன் மிகவும் சக்திவாய்ந்த நான்கு சிலிண்டர் இன்ஜினை சார்ந்தது ஆகும். இது 2.0-லிட்டர் நான்கு சிலிண்டர் டர்போ இன்ஜின் மற்றும் பின்புறத்தில் பொருத்தப்பட்ட மின் மோட்டாரை கொண்டுள்ளது. இந்த ஹைபிரிட் பவர் ட்ரெய்ன் 680 ஹெச்பி மற்றும் 1020 என்எம் டார்க்கை உருவாக்குகிறது. அதாவது 3.4 வினாடிகளில் பூஜ்ஜியத்திலிருந்து 100 கிலோ மீட்டர் வேகத்தை எட்டக்கூடிய சிறந்த செயல்திறனை வெளிப்படுத்துகிறது.
4MATIC+ ஆல்-வீல் டிரைவ் ஸ்டேண்டர்டாக வழங்கப்படுகிறது ஆனால் டிரிஃப்ட் பயன்முறையும் உள்ளது. எல்லா AMG இன்ஜின்களையும் போலவே இது ஒரு கையால் கட்டப்பட்ட அலகு மற்றும் மின்சார டர்போசார்ஜரைக் கொண்டுள்ளது. ஆனால் மின்சார மோட்டாரும் ஆக்சிலரேஷனை சேர்க்கிறது. கூடுதலாக, 6.1 kWh உயர் செயல்திறன் கொண்ட பேட்டரி, எட்டு டிரைவ் முறைகள், ரியர் ஆக்சில் ஸ்டீயரிங், உயர் செயல்திறன் கொண்ட பிரேக்குகள் மற்றும் AMG டிரைவர்கள் பேக்கேஜ் ஆகியவை மணிக்கு 280 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்க உதவுகின்றன.
முந்தைய V8 இல் இருந்து இது ஒரு பெரிய மாற்றமாக இருந்தாலும், இந்த புதிய பவர்டிரெய்ன் மிகவும் சிக்கலான பவர்டிரெய்னுடன் அதிக தொழில்நுட்பம் மற்றும் ஆற்றலைக் கொண்டுவருகிறது.
இதர அம்சங்கள்:
C 63 வேகமான செடான் மற்றும் ஒரு உயர் செயல்திறன் எடிஷனாகும். அதாவது, ஆக்ரோஷமான தோற்றத்துடன் இந்த கார் அகலமாகவும் நீளமாகவும் இருக்கிறது. இதற்கு காரணம் வித்தியாசமான AMG கிரில் மற்றும் AMG-க்கு சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ள 20-இன்ச் சக்கரங்கள் போன்றவை ஆகும். உட்புறத்தில் நிறைய கார்பன், AMG குறிப்பிட்ட ஸ்டீயரிங், ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே மற்றும் 15 ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம் போன்ற பல அம்சங்கள் உள்ளன.
இறக்குமதி செய்யப்படும் C 63 மாடலின் விலையானது ரூ. 1.95 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், C-கிளாஸ் பிரிவில் மிகவும் விலையுயர்ந்த கார் மாடலாக C 63 உருவெடுத்துள்ளது. இந்திய சந்தையில் இது BMW M4 CS போன்றவற்றுடன் போட்டியிடுகிறது.
Car loan Information:
Calculate Car Loan EMI