Maruti Victoris Vs Hyundai Creta: மாருதி விக்டோரிஸ் மற்றும் ஹுண்டாய் க்ரேட்டா கார் மாடல்களில், பாதுகாப்பு அம்சங்களில் எது சிறந்தது என்பது கீழே ஒப்பிடப்பட்டுள்ளது.

Continues below advertisement


மாருதி விக்டோரிஸ் Vs ஹுண்டாய் க்ரேட்டா:


இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மாருதி சுசூகி நிறுவனத்தால் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட, விக்டோரிஸ் கார் மாடல் மிட்-சைஸ் எஸ்யுவி பிரிவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இதற்கு அதன் போட்டித்தன்மை மிக்க விலையும், பணத்திற்கு நிகரான மதிப்பையும் கொண்டிருப்பதே காரணமாகும். கூடுதல் அம்சமாக க்ளோபல் NCAP எனப்படும் புதிய காருக்கான பரிசோதனை திட்டத்தில் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்று, இந்த செக்மெண்டிலேயே மிகவும் பாதுகாப்பான கார் என்ர பெருமிதத்தையும் தட்டிச் சென்றுள்ளது. அதேநேரம், இந்த பிரிவில் நீண்டகாலமாக ஆதிக்கம் செலுத்தி வரும் மற்றும் விக்டோரிஸ் மாடலுக்கு போட்டியாக கருதப்படும் க்ரேட்டா காரானது, க்ளோபல் NCAP பரிசோதனையில் கடந்த 2022ம் ஆண்டு வெறும் 3 ஸ்டார்களை மட்டுமே பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த இரண்டு கார்களின் பாதுகாப்பு அம்சங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.



விக்டோரிஸ் Vs க்ரேட்டா: பெரியவர்களுக்கான பாதுகாப்பு


முற்றிலும் புதிய விக்டோரிஸ் கார் மாடலானது பெரியவர்களுக்கான பாதுகாப்பு சோதனையில், 34-க்கு 33.72 புள்ளிகளை பெற்று கவனத்தை ஈர்த்துள்ளது. அதேநேரம், க்ரேட்டா கார் மாடலானது அந்த காலகட்டத்தில் 17-க்கு 8 புள்ளிகளை மட்டுமே பெற்று இருந்தது.


விபத்தின் போது வாகனத்தின் முன்புறத்தில் தாக்கம் ஏற்பட்டால் விக்டோரிஸ் ஓட்டுநரின் தலை, கழுத்து, இடுப்பு, தொடைகள், இடது திபியா மற்றும் கால்களுக்கு 'நல்ல' பாதுகாப்பை வழங்குகிறது. அதே நேரத்தில் மார்பு மற்றும் வலது திபியாவிற்கு போதுமான பாதுகாப்பை வழங்குகிறது. ஓட்டுநருடன் சேர்ந்து முன்புற இருக்கையில் அமரும் பயணியின் தலை, கழுத்து, மார்பு, இடுப்பு, தொடைகள் மற்றும் திபியாக்களுக்கு 'நல்ல' பாதுகாப்பை வழங்குகிறது.


இதே பிரிவு சோதனையில், ஹூண்டாய் க்ரேட்டா ஓட்டுநரின் தலைக்கு போதுமான பாதுகாப்பை வழங்கியது. மேலும் அது சக பயணிக்கு 'நல்ல பாதுகாப்பை வழங்குகிறது. ஓட்டுநர் மற்றும் சக ஓட்டுநரின் கழுத்துப் பாதுகாப்பு நல்லதாகவும், ஓட்டுநரின் மார்புப் பாதுகாப்பு விளிம்பு என்றும், இணை ஓட்டுநருக்கு 'நல்லது' என்றும் மதிப்பிடப்பட்டது. டேஷ்போர்டின் பின்னால் ஆபத்தான கட்டமைப்புகளை எதிர்கொள்ளும் வாய்ப்புள்ள நிலையில், ஓட்டுநர் மற்றும் முன் பயணிகளின் முழங்கால்களுக்கு விளிம்பு பாதுகாப்பை க்ரெட்டா வழங்கியது.


விக்டோரிஸின் முன்பக்க பாடிஷெல் ஒருமைப்பாடு நிலையானதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதேசமயம் க்ரேட்டாவின் பாடி ஷெல் நிலையற்றதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் சுமைகளைத் தாங்கும் திறன் கொண்டது அல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது.


விக்டோரிஸ் Vs க்ரேட்டா: குழந்தைகளுக்கான பாதுகாப்பு


குழந்தைகளுக்கான பாதுகாப்பு பரிசோதனையில் விக்டோரிஸ் டைனமிக் மதிப்பீட்டில் 24-க்கு 24 புள்ளிகளையும், CRS பிரிவில் 12-க்கு 12 புள்ளிகளையும் மற்றும் வாகன மதிப்பீட்டில் அதிகபட்சமாக 13 புள்ளிகளுக்கு 5 புள்ளிகளையும் பெற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்து சோதனையின் போது 18 மாத மற்றும் 3 வயது டம்மிகளுக்கு CRS (குழந்தை கட்டுப்பாட்டு அமைப்பு) முழுமையான முன்பக்க மற்றும் பக்க பாதுகாப்பை வழங்கியுள்ளது. 


குழந்தைகளுக்கான பாதுகாப்பு பரிசோதனையில் ஹூண்டாய் க்ரேட்டா 49 புள்ளிகளில் 28.29 புள்ளிகளுடன் 3 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றது. க்ரேட்டாவின் சோதனை செய்யப்பட்ட அடிப்படை வேரியண்டில் ஐசோஃபிக்ஸ் குழந்தை இருக்கை பொருத்துதல்கள் இல்லை என்பதையும், குழந்தை இருக்கைகள் சீட் பெல்ட்களால் பாதுகாக்கப்பட்டதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். பலவீனமானதாக மதிப்பிடப்பட்ட மார்புப் பாதுகாப்புடன் 3 வயது குழந்தையின் முன்பக்கம்  அதிகப்படியான முன்னோக்கி தலை அசைவைத் தடுக்க சீட் பெல்ட் தவறியதாக குளோபல் NCAP தெரிவித்துள்ளது. இருப்பினும், 1.5 வயதுடைய பின்புறம் எதிர்கொள்ளும் டம்மி 'நல்ல' தலை மற்றும் மார்புப் பாதுகாப்பைப் பதிவு செய்துள்ளது.  


விக்டோரிஸ் Vs க்ரேட்டா - பாதுகாப்பு அம்சங்கள்


புதிய விக்டோரிஸ் காரில் ஆறு ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், EBD உடன் ஆண்டி ப்ரேக்கிங் சிஸ்டம், ஹில் ஹோல்ட் அசிஸ்ட், அனைத்து பயணிகளுக்கும் நினைவூட்டல்களுடன் கூடிய 3-பாயிண்ட் சீட் பெல்ட்கள், பின்புற பார்க்கிங் சென்சார்கள், ஐசோஃபிக்ஸ் சைல்ட் சீட் ஆங்கர் பாயிண்ட்கள், ஓவர்ஸ்பீட் அலெர்ட்ஸ் மற்றும் டிராக்ஷன் கண்ட்ரோல் ஆகியவை அனைத்து வகைகளிலும் நிலையாக வழங்கப்படுகின்றன. டாப் வேரியண்ட்கள் லெவல் 2 ADAS, ஆட்டோ ஹோல்டுடன் கூடிய எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் மற்றும் 360 டிகிரி கேமரா அம்சங்களை பெறுகின்றன.


ஹூண்டாய் க்ரேட்டாவின் சோதிக்கப்பட்ட அடிப்படை வேரியண்ட் (ப்ரீ - ஃபேஸ்லிஃப்ட், தற்போதைய-தலைமுறை) இரட்டை ஏர்பேக்குகள் மற்றும் EBD உடன் ABS ஆகியவற்றைக் கொண்டிருந்தது. SX எக்ஸிகியூட்டிவ் டிரிம்களில் இருந்து எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், குழந்தை இருக்கை நங்கூரங்கள், வெஹைகிள் ஸ்டெபிலிட்டி மேனேஜ்மெண்ட் மற்றும் பின்புற டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்படுகின்றன,.அதே நேரத்தில் பக்கவாட்டு மற்றும் கர்டெயின் ஏர்பேக்குகள் டாப்-எண்ட் SX (O) வேரியண்டில் மட்டுமே கிடைக்கின்றன.  


விக்டோரிஸ் Vs க்ரேட்டா - விலை ஒப்பீடு


சென்னையில் விக்டோரிஸ் கார் மாடலின் ஆன் ரோட் விலை 12.68 லட்சத்தில் தொடங்கி ரூ.24.29 லட்சம் வரை நீள்கிறது. அதேநேரம், க்ரேட்டா மாடலின் ஆன் - ரோட் விலை ரூ.13.40 லட்சத்தில் தொடங்கி ரூ.25.46 லட்சம் வரை நீள்கிறது.


Car loan Information:

Calculate Car Loan EMI