மேலும் அறிய

Maruti Victoris: புத்தம் புது நெ.1 கார்..! பெட்ரோல், சிஎன்ஜி ஹைப்ரிட் வேரியண்ட்களுக்கு தள்ளுபடி - அள்ளி வீசிய மாருதி

Maruti Victoris SUV Discount: மாருதி சுசூகியின் புத்தம் புதிய மிட்-சைஸ் எஸ்யுவி ஆன விக்டோரிஸ் கார் மாடலுக்கு, முதல்முறையாக தள்ளுபடி மற்றும் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Maruti Victoris SUV Discount: மாருதி சுசூகியின் புத்தம் புதிய மிட்-சைஸ் எஸ்யுவி ஆன விக்டோரிஸ் கார் மாடலுக்கு, பிப்ரவரியில் அதிகபட்சமாக 78 ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல்முறையாக விக்டோரிஸ் மாடலுக்கு தள்ளுபடி:

புத்தாண்டான 2026 பிறந்தது முதலே சில கார் உற்பத்தி நிறுவனங்கள் விலையை உயர்த்தி வருகின்றன. சில நிறுவனங்கள் தங்களது சில கார் மாடல்களுக்கான விலையை குறைத்து அணுகலை எளிதாக்குகின்றன. அந்த வகையில், மாருதி நிறுவனமானது தனது விக்டோரிஸ் எஸ்யுவி கார் மாடலுக்கு சிறப்பு பலன்களை அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சந்தைப்படுத்தப்பட்ட பிறகு, இந்த கார் மீது சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் அறிவிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும். கடந்த ஆண்டில் அறிமுகமாக பல மாடல்களில், சிறந்த காராகவும் விக்டோரிஸ் கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.

விக்டோரிஸ் மாடலுக்கான தள்ளுபடி விவரங்கள்:

LXi மற்றும் VXi வேரியண்ட்களுக்கு (பெட்ரோல் + சிஎன்ஜி) மொத்தமாக 50 ஆயிரம் ரூபாய் வரையில் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் கன்ஸ்யூமர் சலுகையாக 30 ஆயிரம் ரூபாயும், லாயல்டி போனஸ் 20 ஆயிரம் ரூபாயும் அடங்கும். ZXi மற்றும் ZXi+ வேரியண்ட்களுக்கு (பெட்ரோல் + சிஎன்ஜி) மொத்தமாக 61 அயிரம் ரூபாய் வரை சலுகைகள் வழங்கப்படுகின்றன. இதில் கன்ஸ்யூமர் ஆஃபர் ரூ.41 ஆயிரமும், லாயல்டி போனஸ் 20 ஆயிரம் ரூபாயும் அடங்கும். அதிகப்படியான பலன்களானது விக்டோரிசின் வலுவான ஹைப்ரிட் வேரியண்ட்களுக்கு வழங்கப்படுகிறது. அதன்படி, கன்ஸ்யூமர் ஆஃபர் 48 ஆயிரம் ரூபாய் மற்றும் லாயல்டி போனஸ் 30 ஆயிரம் ரூபாய் என மொத்தம் 78 ஆயிரம் ரூபாய்க்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கைவசம் இருக்கும் ஸ்டாக்குகளின் அடிப்படையில், இது பிப்ரவரி மாதத்திற்கான குறுகியகால சலுகையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேரியண்ட்கள் கன்ஸ்யூமர் சலுகை லாயல்டி போனஸ் மொத்த பலன்
LXi, VXi ரூ.30,000 ரூ.20000 ரூ.50,000
ZXi, ZXi+ ரூ.41000 ரூ.20000 ரூ.61,000
ஹைப்ரிட் ரூ.48000 ரூ.30000 ரூ.78,000

மாருதி விக்டோரிஸ்: வெளியீடு, விலை

மாருதி நிறுவனத்தின் மிகவும் முக்கியமான எஸ்யுவி மாடலாக கடந்த ஆண்டின் செப்டம்பரில் விக்டோரிஸ் கார் மாடல் அறிமுகப்படுத்தப்பட்டது. மொத்தம் 21 வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படும் இந்த காரின் விலையானது, ரூ.10.50 லட்சத்தில் தொடங்கி ரூ.19.99 லட்சம் வரை நீள்கிறது. முதலில், ப்ராண்டின் க்ராண்ட் விட்டாரா மாடலின் மிகவும் எளிதாக அணுகக் கூடிய வெர்ஷனாக, மாருதி அரேனா டீலர்ஷிப்களில் விக்டோரிஸ் விற்பனை செய்யப்படுகிறது. க்ராண்ட் விட்டாரா நெக்ஸா ஷோ-ரூம்களில் மட்டுமே கிடைக்கிறது. இதனை காட்டிலும் அரேனா விற்பனை நிலையங்கள் பெரிது என்பதால், விக்டோரிஸ் மீது பெரும் விற்பனை கணக்கீடுகள் நிலவியது.


Maruti Victoris: புத்தம் புது நெ.1 கார்..! பெட்ரோல், சிஎன்ஜி ஹைப்ரிட் வேரியண்ட்களுக்கு தள்ளுபடி - அள்ளி வீசிய மாருதி

மாருதி விக்டோரிஸ் - விற்பனையில் அசத்தல்

எதிர்பார்த்தபடியே, விக்டோரிஸ் விற்பனையில் அசத்தியது. உதாரணமாக கடந்த அக்டோபர் மாதத்தில் க்ராண்ட் விட்டாராவிற்கு 10 ஆயிரத்து 409 யூனிட்கள் மட்டுமே விற்பனையான நிலையில், விக்டோரிஸிற்கு 13 ஆயிரத்து 496 யூனிட்கள் விற்பனையாகின. அதே மாதிரி நவம்பர் மாதத்திலும் க்ராண்ட் விட்டாராவின் 11 ஆயிரத்து 399 யூனிட்களை காட்டிலும், விக்டோரிஸிற்கு 12 ஆயிரத்து 300 யூனிட்கள் விற்பனையாகின. டிசம்பரில் இதன் விற்பனை 50 சதவிகிதம் சரிந்து 6 ஆயிரத்து 210 யூனிட்களாக பதிவாக, ஜனவரியில் ஏற்றம் கண்டு 15 ஆயிரத்து 240 யூனிட்கள் டெலிவெரி செய்யப்பட்டன. மாதத்தின் விற்பனையில் அசத்திய சிறந்த டாப் 10 கார்களின் பட்டியலிலும் இணைந்தது.

மாருதி விக்டோரிஸ் - புதிய போட்டியாளர்கள்:

மிட்-சைஸ் எஸ்யுவி ஆனது இந்திய சந்தையில் நாளுக்கு நாள் மிகவும் போட்டித்தன்மை மிக்கதாக வலுவடைந்து வருகிறது. டாடா சியாரா மற்றும் கியா செல்டோஸ் ஆகியவை அதில் மிக முக்கியமானவையாகும். சவாலை மேலும் வலுவாக்கும் விதமாக ரெனால்ட் டஸ்டர், நிசான் டெக்டான் ஆகிய மாடல்களும் அடுத்தடுத்து சந்தைப்படுத்தப்பட்டு மிட்-சைஸ் எஸ்யுவி பிரிவு போட்டித்தன்மையின் உச்சத்தை அடைய உள்ளது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read

Frequently Asked Questions

மாருதி விக்டோரிஸ் காருக்கு பிப்ரவரியில் எவ்வளவு தள்ளுபடி வழங்கப்படுகிறது?

பிப்ரவரி மாதத்தில் மாருதி விக்டோரிஸ் காருக்கு அதிகபட்சமாக 78 ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இது விக்டோரிசின் வலுவான ஹைப்ரிட் வேரியண்ட்களுக்கு பொருந்தும்.

விக்டோரிஸ் மாடலுக்கு தள்ளுபடி அறிவிக்கப்படுவது இதுவே முதல்முறையா?

ஆம், கடந்த ஆண்டு செப்டம்பரில் அறிமுகமான பிறகு, விக்டோரிஸ் மாடலுக்கு தள்ளுபடி அறிவிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.

LXi மற்றும் VXi வேரியண்ட்களுக்கு என்னென்ன சலுகைகள் வழங்கப்படுகின்றன?

LXi மற்றும் VXi வேரியண்ட்களுக்கு மொத்தம் 50 ஆயிரம் ரூபாய் வரை சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் 30 ஆயிரம் ரூபாய் கன்ஸ்யூமர் சலுகையாகவும், 20 ஆயிரம் ரூபாய் லாயல்டி போனஸாகவும் அடங்கும்.

மாருதி விக்டோரிஸ் கார் எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது?

மாருதி விக்டோரிஸ் கார் கடந்த ஆண்டின் செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. இது மொத்தம் 21 வேரியண்ட்களில் விற்பனைக்கு உள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Nexon Rival: நாட்டின் பெஸ்ட் கார்..! 60 வேரியண்ட்கள், சுத்து போடும் 5 SUV-க்கள் - விலை, மைலேஜில் எது பெஸ்ட்?
Nexon Rival: நாட்டின் பெஸ்ட் கார்..! 60 வேரியண்ட்கள், சுத்து போடும் 5 SUV-க்கள் - விலை, மைலேஜில் எது பெஸ்ட்?
சிங்கிள் சார்ஜில் 171 கிலோமீட்டர்.. சிட்டியில் சுற்ற PURE EV Etryst 350 - விலை எவ்ளோ?
சிங்கிள் சார்ஜில் 171 கிலோமீட்டர்.. சிட்டியில் சுற்ற PURE EV Etryst 350 - விலை எவ்ளோ?
Activa Rival: ஒத்தையில சீன் போடும் ஆக்டிவா..! பட்ஜெட்டிலும், மைலேஜிலும் டஃப் கொடுக்கும் ஸ்கூட்டர்கள் - எது பெஸ்ட்
Activa Rival: ஒத்தையில சீன் போடும் ஆக்டிவா..! பட்ஜெட்டிலும், மைலேஜிலும் டஃப் கொடுக்கும் ஸ்கூட்டர்கள் - எது பெஸ்ட்
Bajaj: சீறிப்பாயும் Bajaj Chetak C250.. பட்ஜெட் விலைதான்! மைலேஜ் எப்படி?
Bajaj: சீறிப்பாயும் Bajaj Chetak C250.. பட்ஜெட் விலைதான்! மைலேஜ் எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK
TVK Flag Accident | தலையில் விழுந்த கொடிக்கம்பம் பேச்சை நிறுத்தாத நாஞ்சில் தவெக மேடையில் பரபரப்பு
Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!
Accident News | கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்து பதற வைக்கும் CCTV வீடியோ | Puducherry
TVK issue | ’’தளபதிக்கு விஷயம் போச்சு தலையை வெட்டி வீசிடுவேன்’’ தவெக நிர்வாகி ஆபாச பேச்சு | Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Iran Attack Dubai Reason: துபாயை துவம்சம் செய்யும் ஈரான்; குறி வைக்கப்பட்ட புர்ஜ் கலிஃபா; காரணம் என்ன தெரியுமா.?
துபாயை துவம்சம் செய்யும் ஈரான்; குறி வைக்கப்பட்ட புர்ஜ் கலிஃபா; காரணம் என்ன தெரியுமா.?
Iran Khamenei Dead: “கமேனி இறந்துவிட்டார்“; ஈரான் ஊடகங்கள் வெளியிட்ட செய்தியால் பரபரப்பு; அடுத்து என்ன.?
“கமேனி இறந்துவிட்டார்“; ஈரான் ஊடகங்கள் வெளியிட்ட செய்தியால் பரபரப்பு; அடுத்து என்ன.?
TN Roundup: ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டம், பிரதமர் மோடி மதுரை பயணம், பனிமூட்டம் - தமிழகத்தில் இதுவரை
TN Roundup: ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டம், பிரதமர் மோடி மதுரை பயணம், பனிமூட்டம் - தமிழகத்தில் இதுவரை
USA Attacks Iran: ”கமேனியை கொன்னுட்டோம்” - அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு - ஈரான் தாக்குதல் அப்டேட்
USA Attacks Iran: ”கமேனியை கொன்னுட்டோம்” - அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு - ஈரான் தாக்குதல் அப்டேட்
USA Iran: ”நான் செத்துட்டேனா” ட்ரம்புக்கு தக் லைஃப் கொடுத்த ஈரான் தலைவர் கமேனி.. ஈரான் அமெரிக்கா மோதல்
USA Iran: ”நான் செத்துட்டேனா” ட்ரம்புக்கு தக் லைஃப் கொடுத்த ஈரான் தலைவர் கமேனி.. ஈரான் அமெரிக்கா மோதல்
IND Vs WI: ஈடன் கார்டனை ஆளப்போவது யார்? அரையிறுதி டிக்கெட் யாருக்கு? இந்தியா - மே.தீவுகள் இன்று மோதல்
IND Vs WI: ஈடன் கார்டனை ஆளப்போவது யார்? அரையிறுதி டிக்கெட் யாருக்கு? இந்தியா - மே.தீவுகள் இன்று மோதல்
DMK Alliance:ஒரே நாளில் 2 கட்சிக்கு தொகுதிப்பங்கீட்டை முடித்த திமுக! எந்தெந்த கட்சி? எத்தனை சீட்டு?
DMK Alliance:ஒரே நாளில் 2 கட்சிக்கு தொகுதிப்பங்கீட்டை முடித்த திமுக! எந்தெந்த கட்சி? எத்தனை சீட்டு?
C Vijaya Baskar: மாற்றம் பெறும் விராலிமலை.. மக்களுக்கு சர்ப்ரைஸ்.. விஜயபாஸ்கரின் மாஸ்டர் பிளான் இதுதான்!
C Vijaya Baskar: மாற்றம் பெறும் விராலிமலை.. மக்களுக்கு சர்ப்ரைஸ்.. விஜயபாஸ்கரின் மாஸ்டர் பிளான் இதுதான்!
Embed widget