மாருதி சுசூகி நிறுவனம் அதன் முதல் மின்சார வாகனமான e Vitara-வை களமிறக்குகிறது. அந்த காரில் என்னென்ன முக்கிய அம்சங்கள் உள்ளன என்பதை இங்கே காணலாம்.

Continues below advertisement

பாதுகாப்பு

மற்ற கார்களில் காணப்படும் 6 ஏர்-பேக்குகளுக்கு(Air Bag) பதிலாக, e Vitara-வில் 7 ஏர்-பேக்குகள் நிலையானதாக வழங்கப்படுகின்றன.

பாதுகாப்பில், இது லெவல் 2 ADAS-ஐயும் கொண்டுள்ளது. இதில் ஆட்டோமேட்டிக் எமர்ஜென்சி பிரேக்கிங், ஃபார்வர்ட் கொலிஷன் வார்னிங், லேன் கீப் அசிஸ்ட், லேன் டிபார்ச்சர்(விலகல்) பிரிவென்ஷன், லேன் டிபார்ச்சர் வார்னிங், வெஹிக்கிள் ஸ்வே வார்னிங், அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் (அனைத்து வேக பின்தொடர்தல் மற்றும் நிறுத்தம், வளைவு வேக குறைப்புடன்), அடாப்டிவ் ஹை-பீம் சிஸ்டம் (மாறும் பிரகாசம் மற்றும் வெளிச்ச வரம்புடன் கூடிய ஆட்டோ ஹை/லோ பீம் ஹெட்லைட்கள்), பிளைண்ட் ஸ்பாட் மானிட்டரிங் (லேன் சேஞ்ச் அலர்ட் உடன்) மற்றும் ரியர் கிராஸ் டிராஃபிக் அலர்ட் போன்ற அம்சங்கள் உள்ளன.

Continues below advertisement

இது ESP, ஆல் ரவுண்ட் டிஸ்க் பிரேக்குகள், முன் மற்றும் பின் சென்சார்கள், 360 டிகிரி கேமரா, ABS உடன் EBD, ஹில் ஹோல்ட் போன்ற அம்சங்களையும் கொண்டுள்ளது.

வெளிப்புறம்

e Vitara-வில் 18 இன்ச் ஏரோ வீல்கள், நெக்ஸா 3 பாயிண்ட் மேட்ரிக்ஸ் LED DRLs, ஐந்து வண்ண விருப்பங்கள், பின்புற வைப்பர் போன்ற அம்சங்கள் உள்ளன.

உட்புறம்

e Vitara-வில் 26.04 செ.மீ திரை மற்றும் டிஜிட்டல் டிஸ்ப்ளே ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன. ட்வின் டெக் கன்சோல், பவர்டு ஹேண்ட்பிரேக், 10-வழி பவர் டிரைவர் சீட், ஆம்பியன்ட் லைட்டிங், ஃபிக்ஸட் கிளாஸ் சன்ரூஃப், வயர்லெஸ் சார்ஜிங், ஸ்லைடிங் ரீக்லைன் பின்புற இருக்கைகள், இருக்கை வென்டிலேஷன் போன்ற அம்சங்கள் உள்ளன.

இணைப்பு

e Vitara-வில் ஸ்மார்ட் வாட்ச் இணைப்பு, சார்ஜிங் அட்டவணை, வாகன நிலை போன்ற அம்சங்கள் உள்ளன.

e For Me செயலியிலும் சார்ஜிங் நிலையங்களுக்கான நிகழ்நேர வழிசெலுத்தல், வழித்தட மேம்படுத்தல் போன்ற அம்சங்கள் உள்ளன.

மாருதி நிறுவனத்தின் முதல் மின்சார காரான இ - விதாரா, பாதுகாப்பில் 5 ஸ்டார் ரேட்டிங் மற்றும் 543 கிலோ மீட்டர் ரேஞ்சை வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படி, விதாராவில் ஏராளமான அம்சங்கள் மற்றும் வசதிகளை மாருதி நிறுவனம் அள்ளிக் கொடுத்துள்ளது.

 

 


Car loan Information:

Calculate Car Loan EMI