மேலும் அறிய

Maruti Discount: ரூ.2.15 லட்சம் மிச்சம்..! மொத்த நெக்ஸா மாடல்களுக்கும் தள்ளுபடி, சலுகைகள் - மாருதி போட்ட வெடி

Maruti Cars Feb Discount: இக்னிஸ் தொடங்கி இன்விக்டோ வரையில் நெக்ஸா ஷோரூம்களில் விற்பனை செய்யப்படும் அனைத்து கார் மாடல்களுக்கும், பிப்ரவரியில் மாருதி நிறுவனம் தள்ளுபடிகளை அறிவித்துள்ளது.

Maruti Cars Feb Discount: மாருதி சுசூகி நிறுவனத்தின் எந்தெந்த கார் மாடல்களுக்கு எவ்வளவு சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன என கீழே விவரிக்கப்பட்டுள்ளது.

மாருதி நெக்ஸா கார்களுக்கு அதிரடி சலுகை:

மாருதி சுசூகி நிறுவனத்தின் நெக்ஸா விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யப்படும், நீளமான ப்ரீமியம் லைன் - அப்களுக்கு, பிப்ரவரி மாதத்தில் மிகப்பெரிய சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, இந்த மாடல்கள் மீது அதிகபட்சமாக 2 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் வரை சலுகைகள் வழங்கப்படுகின்றன. பெரும்பாலான கார்கள் மீது வாடிக்கையாளர் உறவு மேலாண்மை (CRM) அடிப்படையில் ரூ.3 ஆயிரம் வரை சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் ஒவ்வொரு கார் மாடல் மீதும் அறிவிக்கப்பட்டுள்ள சலுகைகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

மாருதியின் எந்த காருக்கு எவ்வளவு சலுகை?

1. மாருதி இக்னிஸ்:

மாருதியின் நெக்ஸா பிரிவில் மிகவும் மலிவு விலையில் கிடைக்கும் கார் மாடலான இக்னிஸின் விலை ரூ.5.35 லட்சத்தில் தொடங்குகிறது. ரூ.25 ஆயிரம் வரையிலான பணத்தள்ளுபடி, ரூ.15 ஆயிரம் வரையிலான எக்ஸ்சேஞ்ச் போனஸ் அல்லது ரூ.30 ஆயிரம் வரையிலான ஸ்க்ரேப்பேஜ் போனஸ் வழங்கப்படுகிறது. ஒட்டுமொத்தமாக பயனர்கள் ரூ.55 ஆயிரம் வரை சேமிக்கலாம்.



Maruti Discount: ரூ.2.15 லட்சம் மிச்சம்..! மொத்த நெக்ஸா மாடல்களுக்கும் தள்ளுபடி, சலுகைகள் - மாருதி போட்ட வெடி

2. மாருதி பலேனோ

ரூ.5.98 லட்சம் என்ற தொடக்க விலையை கொண்ட பலேனோ கார் மாடலானது, ரூ.10 ஆயிரம் பணத்தள்ளுபடி, ரூ.15 ஆயிரம் எக்ஸ்சேஞ்ச் போனஸ் அல்லது ரூ.25 ஆயிரம் ஸ்க்ரேப்பேஜ் போனஸ் மற்றும் ரூ.5 ஆயிரம் கார்ப்ரேட் போனஸ் என மொத்தமாக 45 ஆயிரம் ரூபாய் வரையிலான சலுகைகளை கொண்டுள்ளது.

3. மாருதி ஃப்ராங்க்ஸ்

பலேனோவின் க்ராஸோவர் மாற்றான ஃப்ராங்க்ஸ் கார் மாடல் மீது ரூ.10 ஆயிரம் பணத்தள்ளுபடி, ரூ.10 ஆயிரம் எக்ஸ்சேஞ்ச் போனஸ் அல்லது ரூ.15 ஆயிரம் ஸ்க்ரேப்பேஜ் போனஸ் மற்றும் கார்ப்ரேட் டிஸ்கவுண்டாக ரூ.5 ஆயிரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 30 ஆயிரம் ரூபாய் வரையிலான குறைந்த விலையில், பயனர்கள் இந்த காரை சொந்தமாக்கலாம். ஃப்ராங்க்ஸ் கார் மாடலின் தொடக்க விலை ரூ.6.84 லட்சம் ஆகும்.



Maruti Discount: ரூ.2.15 லட்சம் மிச்சம்..! மொத்த நெக்ஸா மாடல்களுக்கும் தள்ளுபடி, சலுகைகள் - மாருதி போட்ட வெடி

4. மாருதி சியாஸ்

மாருதி சியாஸ் கார் மாடலின் உற்பத்தி கடந்த ஆண்டே நிறுத்தப்பட்டாலும், இன்னும் அந்த மாடலின் யூனிட்கள் டீலர்கள் வசம் உள்ளது. இந்த கார் மாடலின் மீது பணத்தள்ளுபடி, எக்ஸ்சேஞ்ச் போனஸ் அல்லது ஸ்க்ரேப்பேஜ் போனஸ் என மொத்தமாக், 40 ஆயிரம் ரூபாய் வரையில் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சியாஸின் தொடக்க விலை ரூ.9.09 லட்சம் ஆகும்.

ப்ரீமியம் கார்களுக்கு அதிரடி சலுகை

1. மாருதி க்ராண்ட் விட்டாரா

மாருதி சுசூகியின் க்ராண்ட் விட்டாரா கார் மாடலுக்கு மொத்தமாக ரூ.1.75 லட்சம் வரை சலுகை மற்றும் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.10.76 லட்சம் என்ற தொடக்க விலை கொண்ட இந்த காருக்கு, 85 ஆயிரம் ரூபாய் வரையில் பணத்தள்ளுபடி மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. எக்ஸ்சேஞ்ச் போனஸ் ரூ.50 ஆயிரம் வரையிலும் அல்லது ஸ்க்ரேப்பேஜ் போனஸ் ரூ.65 ஆயிரம் ரூபாய் வரையிலும் வழங்கப்படுகிறது. கூடுதலாக லாயல்டி போனஸ் ரூ.30 ஆயிரம் வரையிலும், கார்ப்ரேட் தள்ளுபடியாக ரூ.10 ஆயிரம் வரையிலும் வழங்கப்படுகிறது. பணத்தள்ளுபடிக்கு மாற்றாக பூஜ்ஜியம் ரோட் டேக்ஸ் மற்றும் இலவசமாக 5 வருடங்களுக்கு நீட்டிக்கப்பட்ட வாரண்டியை தேர்வு செய்யும் வாய்ப்பையும் மாருதி வழங்குகிறது.



Maruti Discount: ரூ.2.15 லட்சம் மிச்சம்..! மொத்த நெக்ஸா மாடல்களுக்கும் தள்ளுபடி, சலுகைகள் - மாருதி போட்ட வெடி

2. மாருதி XL6

மாருதி XL6 கார் மாடல் மீது பயனர்கள் பிப்ரவரி மாதத்தில் அதிகபட்சமாக 50 ஆயிரம் ரூபாய் வரையில் சேமிக்கலாம். இதில் பணத்தள்ளுபடி மட்டுமே 15 ஆயிரம் ரூபாய் அடங்கும். XL6 கார் மாடலின் தொடக்க விலை ரூ.11.52 லட்சமாகும். 

3.மாருதி ஜிம்னி

மாருதி ஜிம்னி கார் மாடல் மீது 50,000 ரூபாய் வரை பணத்தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த ஆஃப் ரோட் எஸ்யுவியின் விலை ரூ.12.31 லட்சத்தில் தொடங்குகிறது. 




Maruti Discount: ரூ.2.15 லட்சம் மிச்சம்..! மொத்த நெக்ஸா மாடல்களுக்கும் தள்ளுபடி, சலுகைகள் - மாருதி போட்ட வெடி

4. மாருதி இன்விக்டோ

அதிகபட்சமாக மாருதி இன்விக்டோ கார் மாடல் மீது 2 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் வரையிலான சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் 50 ஆயிரம் பணத்தள்ளுபடி, எக்ஸ்சேஞ்ச் போனஸ்  ஒரு லட்சம் ரூபாய் அல்லது ஸ்க்ரேப்பேஜ் போனஸ் ரூ.1.15 லட்சம், லாயல்டி போனஸ் ஆக ரூ.50 ஆயிரம்மற்றும் கார்ப்ரேட் சலுகையாக ரூ.15 ஆயிரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விலை ரூ.24.97 லட்சமாகும்.

மாருதியின் தள்ளுபடி பட்டியல்

கார் மாடல் அதிகபட்சம் சேமிப்பு CRM சலுகைகள் தொடக்க விலை
மாருதி இக்னிஸ் ரூ.40,000 - ரூ.55,000 ரூ.3000 ரூ.5.35 லட்சம்
மாருதி பலேனோ ரூ.40,000 - ரூ.45,000 ரூ.3000 ரூ.5.98 லட்சம்
மாருதி ஃப்ராங்க்ஸ் ரூ.20,000 - ரூ.30,000 ரூ.3000 ரூ.6.84 லட்சம்
மாருதி சியாஸ் ரூ.40,000 ரூ.3000 ரூ.9.09 லட்சம்
மாருதி க்ராண்ட் விட்டாரா ரூ.50,000 - ரூ.1.75 லட்சம் ரூ.3000 ரூ.10.76 லட்சம்
மாருதி XL6  ரூ.50,000 0 ரூ.11.52 லட்சம்
மாருதி ஜிம்னி ரூ.50,000 ரூ.3000 ரூ.12.31 லட்சம்
மாருதி இன்விக்டோ ரூ.2.15 லட்சம் 0 ரூ.24.97 லட்சம்

 

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read

Frequently Asked Questions

மாருதி கார்களுக்கு பிப்ரவரி மாதத்தில் என்னென்ன தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன?

மாருதி சுசூகி நிறுவனத்தின் நெக்ஸா மற்றும் ப்ரீமியம் கார்களுக்கு, பிப்ரவரி மாதத்தில் பணத்தள்ளுபடி, எக்ஸ்சேஞ்ச் போனஸ், ஸ்க்ரேப்பேஜ் போனஸ், லாயல்டி போனஸ் மற்றும் கார்ப்ரேட் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன.

மாருதி இக்னிஸ் காரில் எவ்வளவு சேமிக்கலாம்?

மாருதி இக்னிஸ் காரில் அதிகபட்சமாக ரூ.55 ஆயிரம் வரை சேமிக்கலாம். இதில் பணத்தள்ளுபடி, எக்ஸ்சேஞ்ச் போனஸ் அல்லது ஸ்க்ரேப்பேஜ் போனஸ் ஆகியவை அடங்கும்.

மாருதி க்ராண்ட் விட்டாரா காரில் அதிகபட்ச சலுகை என்ன?

மாருதி க்ராண்ட் விட்டாரா காருக்கு அதிகபட்சமாக ரூ.1.75 லட்சம் வரை சலுகைகள் வழங்கப்படுகின்றன. இதில் பணத்தள்ளுபடி, எக்ஸ்சேஞ்ச் போனஸ், லாயல்டி போனஸ் மற்றும் கார்ப்ரேட் தள்ளுபடிகள் அடங்கும்.

மாருதி இன்விக்டோ காருக்கு வழங்கப்படும் அதிகபட்ச சலுகை என்ன?

மாருதி இன்விக்டோ கார் மாடலுக்கு அதிகபட்சமாக ரூ.2.15 லட்சம் வரை சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Hybrid Cars: மிரட்டலான ஹைப்ரிட் கார் தான் வேணுமா? பட்ஜெட்டிலும், மைலேஜிலும் அசத்தும் மாடல்கள்- டக்கர் சாய்ஸ்
Hybrid Cars: மிரட்டலான ஹைப்ரிட் கார் தான் வேணுமா? பட்ஜெட்டிலும், மைலேஜிலும் அசத்தும் மாடல்கள்- டக்கர் சாய்ஸ்
Best Bikes for Rural Roads: நீங்க கிராமத்துல இருக்கீங்களா.? உங்க சாலைகளுக்கு ஏத்த சிறந்த மலிவான பைக்குகள் எவை தெரியுமா.?
நீங்க கிராமத்துல இருக்கீங்களா.? உங்க சாலைகளுக்கு ஏத்த சிறந்த மலிவான பைக்குகள் எவை தெரியுமா.?
Renault Kiger Vs Nexon Fronx: நெக்ஸான், ஃப்ராங்க்ஸ்-க்கு டஃப்; குறைந்த விலையில் ஸ்டைல், அம்சங்கள் நிறைந்த ரெனால்ட் கைகர் எப்படி.?
நெக்ஸான், ஃப்ராங்க்ஸ்-க்கு டஃப்; குறைந்த விலையில் ஸ்டைல், அம்சங்கள் நிறைந்த ரெனால்ட் கைகர் எப்படி.?
Affordable Long Range EVs: பெட்ரோல், டீசல் விலை கூடிடுமேன்னு பயப்பட்றீங்களா.? EV கார் வாங்குங்க; மலிவான கார்கள் லிஸ்ட் இதோ
பெட்ரோல், டீசல் விலை கூடிடுமேன்னு பயப்பட்றீங்களா.? EV கார் வாங்குங்க; மலிவான கார்கள் லிஸ்ட் இதோ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: பதவியை பறித்த திமுக..! ராஜீவ் காந்தி தூக்கி அடிக்கப்பட காரணம் என்ன? நடந்தது? ஷாக்கில் உ.பிக்கள்..
DMK: பதவியை பறித்த திமுக..! ராஜீவ் காந்தி தூக்கி அடிக்கப்பட காரணம் என்ன? நடந்தது? ஷாக்கில் உ.பிக்கள்..
PM Modi Iran: ஈரானுக்கே போன் போட்ட பிரதமர் மோடி - பிரச்னை முடியுமா? கேட்டுகள் திறக்கப்படுமா? பேசியது என்ன?
PM Modi Iran: ஈரானுக்கே போன் போட்ட பிரதமர் மோடி - பிரச்னை முடியுமா? கேட்டுகள் திறக்கப்படுமா? பேசியது என்ன?
Velachery Parangimalai Train: மார்ச் 14ல் தொடங்கும் வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை..! எத்தனை ரயில்கள், எந்தெந்த ரூட்?
Velachery Parangimalai Train: மார்ச் 14ல் தொடங்கும் வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை..! எத்தனை ரயில்கள், எந்தெந்த ரூட்?
கள்ளக் காதலுக்காக கணவனைக் கொன்ற மனைவி !! இறுதி சடங்கில் நடத்திய நாடகம் !! சிக்கியது எப்படி ?
கள்ளக் காதலுக்காக கணவனைக் கொன்ற மனைவி !! இறுதி சடங்கில் நடத்திய நாடகம் !! சிக்கியது எப்படி ?
Vadivelu: திமுக ஆட்சி இல்லாத தமிழ்நாடு அழிந்து விடும்.. என் தாய் மீது ஆணை.. நடிகர் வடிவேலு பேச்சு!
Vadivelu: திமுக ஆட்சி இல்லாத தமிழ்நாடு அழிந்து விடும்.. என் தாய் மீது ஆணை.. நடிகர் வடிவேலு பேச்சு!
காவ்யா மாறன் பார்த்த வேலை..! SRH நிர்வாகத்தை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் - ”வெட்கமாக இல்லையா”
காவ்யா மாறன் பார்த்த வேலை..! SRH நிர்வாகத்தை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் - ”வெட்கமாக இல்லையா”
Hybrid Cars: மிரட்டலான ஹைப்ரிட் கார் தான் வேணுமா? பட்ஜெட்டிலும், மைலேஜிலும் அசத்தும் மாடல்கள்- டக்கர் சாய்ஸ்
Hybrid Cars: மிரட்டலான ஹைப்ரிட் கார் தான் வேணுமா? பட்ஜெட்டிலும், மைலேஜிலும் அசத்தும் மாடல்கள்- டக்கர் சாய்ஸ்
Mojtaba on Hormuz Strait: அமெரிக்காவுக்கு Out of Control தான்; “அது மூடிதான் இருக்கும்“: ஈரான் தலைவர் மொஜ்தபா கமேனி நெத்தியடி.!
அமெரிக்காவுக்கு Out of Control தான்; “அது மூடிதான் இருக்கும்“: ஈரான் தலைவர் மொஜ்தபா கமேனி நெத்தியடி.!
Embed widget