Baleno முதல் Grand Vitara வரை.. ஆஃபர்களை அள்ளித் தெளித்த மாருதி சுசுகி - எந்த காருக்கு எவ்வளவு?
மாருதி சுசுகி நிறுவனம் தனது நெக்ஸா வேரியண்ட் கார்களுக்கு நவம்பர் மாத சலுகைகள் அளித்துள்ளது.

இந்தியாவின் முன்னணி கார் நிறுவனமான மாருதி சுசுகி தனது நெக்ஸா கார்களுக்கு நவம்பர் மாத சலுகையை அறிவித்துள்ளது. எந்தெந்த காருக்கு எவ்வளவு சலுகைகள் என்பதை கீழே காணலாம்?
1. Ignis:
இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 6.45 லட்சம் ஆகும். இந்த காருக்கு நவம்பர் மாத தள்ளுபடியாக ரொக்கமாக ரூபாய் 25 ஆயிரம் அளித்துள்ளனர். இதர சலுகைகள் உள்பட ரூபாய் 57 ஆயிரத்து 100 அளித்துள்ளனர். இந்த கார் 1197 சிசி திறன் கொண்டது. 20.89 கி.மீட்டர் வரை மைலேஜ் தரும் ஆற்றல் கொண்டது.
2. Baleno:

புதியதாக கார் வாங்க விரும்பும் பலரின் முதன்மைத் தேர்வு இ்ந்த Baleno ஆகும். இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 7.20 லட்சம் ஆகும். இந்த காரின் Baleno Pre Update-க்கு ரொக்கமாக ரூபாய் 20 ஆயிரம் தள்ளுபடி அளித்துள்ளனர். விழாக்கால தள்ளுபடியாக ரூபாய் 30 ஆயிரம் அறிவித்துள்ளனர். மொத்தமாக ரூபாய் 77 ஆயிரத்து 100 தள்ளுபடி அளித்துள்ளனர். Updated Baleno காருக்கு ரூபாய் 20 ஆயிரம் ரொக்கத் தள்ளுபடி அளித்துள்ளனர். மொத்தமாக ரூபாய் 47 ஆயிரத்து 100 தள்ளுபடி அளித்துள்ளனர். 1197 சிசி திறன் கொண்ட எஞ்ஜினை கொண்டது. 22.35 கி.மீட்டர் வரை மைலேஜ் தரும். பெட்ரோல், சிஎன்ஜி-யில் ஓடும் ஆற்றல் கொண்டது.
3. Ciaz
இந்த Ciaz காரின் தொடக்க விலை ரூபாய் 10.85 லட்சம் ஆகும். இந்த காருக்கு ரொக்கமாக ரூபாய் 10 ஆயிரம் தள்ளுபடி அளித்துள்ளனர். மொத்தமாக இந்த காருக்கு ரூபாய் 40 ஆயிரம் வரை தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது. 1462 சிசி திறன் கொண்ட எஞ்ஜினை கொண்டது. 20.65 கி.மீட்டர் வரை மைலேஜ் தரும் ஆற்றல் கொண்டது. பெட்ரோலில் ஓடும் ஆற்றல் கொண்டது.
5. Fronx:
மாருதி சுசுகியின் வெற்றிகரமான படைப்பு இந்த Fronx ஆகும். இந்த Fronx Turbo காருக்கு விழாக்கால அல்லது டீலர் தள்ளுபடியாக ரூபாய் 30 ஆயிரம் அளிக்கப்பட்டுள்ளது. ரொக்கத் தள்ளுபடியாக ரூபாய் 50 ஆயிரம் வரை ( Pre-Update) அளிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ரூபாய் 95 ஆயிரம் வரை அளித்துள்ளனர். அதேசமயம், Updated Model ஆக இருந்தால் ரூபாய் 65 ஆயிரம் வரை தள்ளுபடி அளிக்கின்றனர்.
Fronx 1.2 L Petrol காருக்கு விழாக்கால தள்ளுபடியாக ரூபாய் 30 ஆயிரமும், ரொக்கத் தள்ளுபடியாக ரூபாய் 10 ஆயிரமும் என மொத்தமாக ரூபாய் 55 ஆயிரம் வரை( Pre-Update) அளிக்கின்றனர். Updated ஆக இருந்தால் ரூபாய் 15 ஆயிரம் வரை மட்டுமே அளிக்கின்றனர். Fronx CNG ஆக இருந்தால் மொத்தமாக ரூபாய் 45 ஆயிரம் (Pre-Update) வரை தள்ளுபடி அளிக்கின்றனர். Updated ஆக இருந்தால் ரூபாய் 15 ஆயிரம் தள்ளுபடி அளிக்கின்றனர்.
6. XL6:

இந்த XL6 காரின் விலை ரூபாய் 10.85 லட்சம் ஆகும். இந்த காருக்கு ரொக்கமாக ரூபாய் 10 ஆயிரமும், மொத்தமாக ரூபாய் 35 ஆயிரமும் தள்ளுபடி அளித்துள்ளனர். 1462 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. பெட்ரோலில் ஓடும் ஆற்றல் கொண்டது. 20.65 கி.மீட்டர் வரை மைலேஜ் தரும் ஆற்றல் கொண்டது.
7. Grand Vitara:
வெற்றிகரமான படைப்பாக Grand Vitara உள்ளது. இந்த காரின் Pre-Update வேரியண்டிற்கு விழாக்கால/ டீலர் தள்ளுபடியாக ரூபாய் 80 ஆயிரமும், ரொக்கத் தள்ளுபடியாக ரூபாய் 1.16 லட்சமும் உள்பட மொத்தம் 2.64 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி அளித்துள்ளனர். 5 வருட வாரண்டி நீட்டிக்கப்பட்டுள்ளது. Updated வேரியண்டாக இருந்தால் விழாக்கால/ டீலர் தள்ளுபடியாக ரூபாய் 40 ஆயிரமும், ரொக்கத் தள்ளுபடி ரூபாய் 60 ஆயிரமும் என மொத்தமாக ரூபாய் 1.94 லட்சம் தள்ளுபடியும், 5 வருட வாரண்டி நீட்டிப்பும் அளித்துள்ளனர். இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 13.45 லட்சம் ஆகும்.

8. Jimny:
மாருதி சுசுகியின் ஜிம்னி காருக்கு மொத்தமாக ரூபாய் 75 ஆயிரம் தள்ளுபடி அளித்துள்ளனர். இதன் தொடக்க விலை ரூபாய் 15.35 லட்சம் ஆகும். 1462 சிசி திறன் கொண்ட எஞ்ஜினை கொண்டது. 16.94 கி.மீட்டர் வரை மைலேஜ் தரும் ஆற்றல் கொண்டது.
9. Invicto:
இந்த காருக்கு ரொக்கமாக ரூபாய் 25 ஆயிரம் தள்ளுபடி அளித்துள்ளனர். மொத்தமாக ரூபாய் 1.40 லட்சம் வரை தள்ளுபடி அளித்துள்ளனர். இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 31.64 லட்சம் ஆகும். 1987 சிசி திறன் கொண்ட எஞ்ஜினை உள்ளடக்கியது. ஹைப்ரிட் ரக கார் ஆகும். 23.24 கி.மீட்டர் வரை மைலேஜ் தரும் ஆற்றல் கொண்டது.
இந்த சலுகைகள் நவம்பர் மாதம் வரை மட்டுமே ஆகும்.






















