இந்திய சந்தையில் ஏற்கனவே S-CNG பொருத்தப்பட்ட 12 மாடல் வாகனங்களை, மாருதி சுசுகி நிறுவனம் அறிமுகப்படுத்தி, பத்து லட்சத்திற்கும் அதிகமான வாகனங்களை விற்றுள்ளது. S-CNG பொருத்தப்பட்ட எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில், அண்மையில் பலேனோ மற்றும் XL6 வகை கார்களையும் அந்நிறுவனம் அறிமுகப்படுத்தி இருந்தது.
மருதி சுசுகி நிறூவனத்தின் புதிய கார்:
அந்த வரிசையில் தற்போது புதியதாக, S-CNG பொருத்தப்பட்ட 13வது மாடலாக Alto K10 S-CNG எனும் காரை மாருதி சுசுகி நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. ஃபேக்டரி ஃபிட் செய்யப்பட்டு VXI வேரியண்டில் மட்டும் விற்பனைக்கு கொண்டு வரப்படும் இந்த காரின் விலை, ரூ.5.94 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் முந்தைய மாடலான பெட்ரோலில் இயங்கும் ஆல்டோ k10 காரை விட, CNG மாடல் காரின் விலை ரூ.95,000 அதிகம் ஆகும்.
காரின் சிறப்பம்சங்கள்:
1.0 லிட்டர் K சீரிஸ் என்ஜின் பொருத்தப்பட்டுள்ள இந்த கார், 56 குதிரைகளின் சக்தி, 82.1 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. 5 ஸ்பீடு மேனுவல் யூனிட் உடன், 55 லிட்டர் எரிபொருள் டேங்க் கொண்டுள்ள Alto K10 S-CNG கார், லிட்டருக்கு 33.85 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் என மாருதி சுசுகி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ப்ளூடூத் இணைப்புடன் கூடிய 2-DIN SmartPlay ஆடியோ சிஸ்டம், 2 ஸ்பீக்கர்கள், சூழலை உணர்ந்து தானாகவே கதவை திறக்கும் சென்சார்கள், சென்ட்ரல் லாக்கிங், வேகத்தை உணரும் ஆட்டோ டோர் லாக், AUX மற்றும் USB போர்ட் என பல்வேறு சிறப்பம்சங்களும் காரில் இடம்பெற்றுள்ளன. இந்திய சந்தையில் ரூ.5 லட்சத்தை ஆரம்ப விலையாக கொண்ட, ரெனால்ட் க்விட், மாருதி ஆல்டோ 800 CNG மற்றும் S ப்ரெஸ்கோ CNG ஆகிய மாடல்களுக்கு, Alto K10 S-CNG கார் போட்டியாக அமையும் என கூறப்படுகிறது.
S-CNG பிரிவு மிகவும் சிறப்பான முறையில் டிசைன் செய்யப்பட்டு, இந்திய சாலைகளுக்கு ஏற்ப உருவாக்கப்பட்டு இருப்பதாகவும், சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைப்பதிலும் முக்கிய பங்கு வகிப்பதாகவும், மாருதி சுசுகி நிறுவனத்தின், விற்பனை மற்றும் விளம்பர பிரிவு மூத்த நிர்வாக அலுவலர் சஷான்க் ஸ்ரீவஸ்தவா தெரிவித்து உள்ளார்.
Car loan Information:
Calculate Car Loan EMI