மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் நிறுவனம், அதன் எஸ்யூவி ரக காரான ஃப்ரான்க்ஸை கடந்த 2023-ல் உலகளாவிய விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இந்த மாடல் கார், குஜராத் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு, லத்தீன் அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட 80-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது.
இந்நிலையில், 2024-25-ம் நிதியாண்டில், இந்த பிராண்ட், 69,000 யூனிட்டுகளுக்கு மேல் ஃப்ரான்க்ஸ் காரை ஏற்றுமதி செய்துள்ளது. அந்த காலகட்டத்தில் நாட்டின் அதிக ஏற்றுமதி செய்யப்படும் பயணிகள் காராக மாறியது. இந்த கார் வேகமாக 1 லட்சம் யூனிட்டுகளை எட்டியதோடு, 2024-25-ம் நிதியாண்டில் இந்தியாவின் நம்பர் 1 ஏற்றுமதி செய்யப்பட்ட பயணிகள் காராக ஃப்ரான்க்ஸ் இருந்தது.
இந்த நிலையில், 2025-26-ம் நிதியாண்டின் முதல் காலாண்டில், அந்நிறுனம் 96,000-க்கும் மேற்பட்ட வாகனங்களை ஏற்றுமதி செய்து, இந்தியாவின் மொத்த பயணிகள் வாகன ஏற்றுமதியில் சாதனையாக 47% பங்கை எட்டியுள்ளது.
சமீபத்தில் தான் இந்த நிறுவனம் ஃப்ரான்க்ஸ் காரின் புதிய வேரியண்ட்டையும் அறிமுகப்படுத்தியது. அப்படி என்ன சிறப்பம்சம் அதில் இருக்கிறது.? பார்க்கலாம்.
மாருதி சுசுகி ஃப்ரான்க்ஸ்:
இந்தியாவின் மிகப் பெரிய கார் உற்பத்தியாளரான மாருதி சுசுகி நிறுவனம், தங்களது வாகனங்களில் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்துவதில் தொடர்ந்து அதிக கவனம் செலுத்தி வருகிறது. இதனால், முன் எப்போதும் இல்லாத அளவிற்கு, தங்களது கார்களை பாதுகாப்பானதாக மாற்றி வருகிறது இந்நிறுவனம். இந்த நிலையில், எஸ்யூவியான ஃப்ரான்க்ஸ் கார் மாடலின், புதிய டெல்டா+ (0) வேரியண்டை மாருதி நிறுவனம் சமீபத்தில் அறிமுகப்படுத்தியது.
புதிய வேரியண்டில் 6 ஏர் பேக்குகள்
புதிய டெல்டா+(0) வேரியண்டானது, ஆட்டோமேடிக் மற்றும் மேனிவல் ட்ரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் வழங்கப்படுகிறது. இது, டெல்டா+ வேரியண்டிற்கு மேலே பட்டியலிடப்பட்டுள்ளது. முன்னதாக, ஜீடா மற்றும் ஆல்ஃபா டிரிம்களில் மட்டுமே 6 ஏர்பேக்குகள் நிலையாக வழங்கப்படுகின்றன. சிக்மா, டெல்டா மற்றும் டெல்டா பிளஸ் வேரியண்ட்களில் 2 ஏர் பேக்குகள் மட்டுமே வழங்கப்டுகின்றன.
இந்நிலையில் தான், புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள, டெல்டா+(0) 2 வேரியண்ட்களிலும் 6 ஏர் பேக்குகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, டிரைவர் ஏர்பேக், முன் இருக்கை பயணிக்கான ஏர் பேக், இரண்டு கர்டெய்ன் ஏர்பேக்குகள், டிரைவர் மற்றும் பயணிக்கான பக்கவாட்டு ஏர்பேக்குகள் வழங்கப்படுகின்றன.
காரின் வசதிகள் என்ன.?
மருதி சுசுகியின் கிராஸ் ஓவர் எஸ்யூவியான ப்ரான்க்ஸின் புதிய டெல்டா+(0) டிரிம்மில், ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கட்டுப்பாடுகள், வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ ஆதரவுடன் கூடிய 7-இஞ்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், கீலெஸ் என்ட்ரி, ஆட்டோமேட்டிக் ஆகிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. காலநிலை கட்டுப்பாடு, மின்னணு முறையில் மடிக்கக்கூடிய ORVM-கள், ESC, பின்புற பார்க்கிங் சென்சார்கள் மற்றும் 4 ஸ்பீக்கர்கள் ஆடியோ சிஸ்டம் போன்ற வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன.
விலை என்ன.?
புதிய ட்ரிம்மில் ஸ்பேர் வீலுக்கு பதிலாக டயர் பஞ்சர் ரிப்பேட் கிட் வழங்கப்பட்டுள்ளது. இதில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனில் மட்டுமே சந்தைப்படுத்தப்பட்டுள்ளது. இது 88.50 bhp மற்றும் 113 Nm ஆற்றலை வெளிப்படுத்துக்கிறது. 5 ஸ்பீட் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிஷன்களுடன் இந்த வாகனம் கிடைக்கிறது.
மேனுவல் டிரான்ஸ்மிஷன் எடிஷன், லிட்டருக்கு 21.8 கி.மீ மைலேஜையும், ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் எடிஷன் லிட்டருக்கு 22.89 கி.மீ மைலேஜையும் வழங்குகிறது. புதிய வேரியண்டிற்கான விலையானது 8 லட்சத்து 93 ஆயிரம் ரூபாயில் தொடங்கி, 9 லட்சத்து 43 ஆயிரம் ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இத்தனை சிறப்பம்சங்கள் கொண்ட இந்த ஃப்ரான்க்ஸ் எஸ்யூவி கார் தான் தற்போது விற்பனையில் சாதனை படைத்துள்ளது.
Car loan Information:
Calculate Car Loan EMI