மாருதி சுசுகி நிறுவனத்தின் ஃப்ரான்க்ஸ் மாடல் கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் தொடக்க விலை ரூ.7.47 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


மாருதி சுசுகி நிறுவனம்:


மாருதி சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் தொடர்ந்து மலிவு விலையில் பல்வேறு புது மாடல் கார்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. நடுத்தர மக்களும் வாங்கக் கூடிய விலையில் கார்களை அறிமுகப்படுத்துவதால், இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மாசுதி சுசுகி நிறுவனம் கணிசமான பங்களிப்பை தன்னகத்தே கொண்டுள்ளது. இந்நிலையில், அந்நிறுவனத்திடமிருந்து நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட ஃப்ரான்க்ஸ் மாடல் கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த ஜவனவரி மாதம் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்ச்சியில்,  மாருதி சுசுகி நிறுவனம் Fronx கூப் கிராஸ் ஒவர் மாடலை காட்சிக்கு வைத்தது குறிப்பிடத்தக்கது.


முன்பதிவும், விலை விவரமும்:


ஃப்ரான்க்ஸ் கார் மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. இதற்கான முன்பதிவு கட்டணம் ரூ. 11 ஆயிரம் வசூலிக்கப்படுகிறது. புதிய மாருதி சுசுகி Fronx விலை ரூ. 7 லட்சத்து 47 ஆயிரம் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது பலேனோ கார் மாடலின் விலையை விட ரூ. 86 ஆயிரம் வரை அதிகம் ஆகும். இதன் காரின் டாப் எண்ட் மாடல் விலை ரூ.13 லட்சத்து 14 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 


காரின் இன்ஜின் விவரங்கள்:


மாருதி Fronx மாடலில் 1.2 லிட்டர், நான்கு சிலிண்டர்கள் கொண்ட NA பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த இன்ஜின் 89 ஹெச்பி பவர், 113 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல், AMT டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 1.0 லிட்டர், மூன்று சிலிண்டர்கள் கொண்ட டர்போ பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 99 ஹெச்பி பவர், 147 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது. இந்த கார் லிட்டருக்கு 22.89 கிலோமீட்டர் வரையிலான மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


காரின் நிறங்கள்:


மாருதி சுசுகி நிறுவனத்தின் ஃப்ரான்க்ஸ் கார் மாடல் சிக்மா, டெல்டா, டெல்டா ப்ளஸ்,ஜீடா மற்றும்  ஆல்பா என 5 வேரியண்ட்களில் கிடைக்கிறது. அதோடு, ஆர்க்டிக் வைட், ஸ்ப்ளெண்டிட் சில்வர், கிராண்ட்யூர் கிரே, ப்ளூயிஷ் பிளாக், செலச்டியல் ப்ளூ, ஒபுலெண்ட் ரெட், எர்த்தன் பிரவுன் ஆகிய நிறங்களில் கிடைக்கும். அதோடு இரட்டை வண்ணங்கள் சேர்ந்து  ஸ்ப்ளெண்டிட் சில்வர் உடன் ப்ளூயிஷ் பிளாக் ரூஃப், ஒபுலெண்ட் ரெட் உடன் ப்ளூயிஷ் பிளாக் ரூஃப், எர்த்தன் பிரவுன் உடன் ப்ளூயிஷ் பிளாக் ஆகிய நிறங்களில் புதிய மாடல் கார் கிடைக்கும்.


சிறப்பம்சங்கள்:


புதிய மாருதி சுசுகி Fronx மாடலில் எல்.ஈ.டி. முகப்பு விளக்குகள், 16 இன்ச் டூயல் டோன் அலாய் வீல்கள், எல்.ஈ.டி டெயில் லைட்கள், காண்டிராஸ்ட் நிற ஃபாக்ஸ் ஸ்கிட் பிளேட்கள், சில்வர் ரூஃப் ரெயில்கள், 360 டிகிரி கேமரா, HUD, 9 இன்ச் அளவில் ஸ்மார்ட்பிளே ப்ரோ பிளஸ் தொடுதிரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி, குரூயிஸ் கண்ட்ரோல், யுவி கிளாஸ் கட்-அவுட், ரியர் ஏசி வெண்ட்கள், வயர்லெஸ் சார்ஜர் போன்ற வசதிகள் வழங்கப்பட்டு உள்ளன.


Car loan Information:

Calculate Car Loan EMI