Best Selling Car: SUV வேண்டாமே..! 33KM மைலேஜ் கொடுக்கும் பட்ஜெட் காருக்கு தான் செம்ம மவுஸ் - மே மாத டாப் 10 மாடல்
Best Selling Cars In May 2026: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கடந்த மே மாத விற்பனையில் எஸ்யுவிக்களை பின்னுக்கு தள்ளி, பல பட்ஜெட் கார்கள் ஆதிக்கம் செலுத்தியுள்ளன.

Best Selling Cars In May 2026: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கடந்த மே மாத விற்பனையில், மாருதியின் டிசையர் தான் அதிகம் விற்பனையான கார் மாடலாக உருவெடுத்துள்ளது.
விற்பனையில் தொடரும் டிசையரின் ஆதிக்கம்
இந்தியர்கள் எஸ்யுவி மீது அதீத பிரியம் கொண்டிருப்பதாக கூறப்பட்டாலும், உள்ளூர் சந்தையில் செடான் கார் மாடல்களுக்கு இன்னும் மிகப்பெரிய தேவை இருப்பதை டிசையர் உணர்த்தியுள்ளது. கடந்த மே மாதத்திற்கான மாடல் வாரியான விற்பனையில், மாருதி சுசூகியின் காம்பேக்ட் செடான் மாடலானது நாட்டிலேயே அதிகம் விற்பனையான பயணிகள் வாகனமாக உருவெடுத்துள்ளது. அதன்படி, ஒட்டுமொத்தமாக 24 ஆயிரத்து 546 யூனிட்கள் விற்பனையாகியுள்ளன. கடந்த ஏப்ரல் மாதத்திலும் இதே நிலையை உறுதி செய்ததோடு, கடந்த 2026 நிதியாண்டிலும் நாட்டிலேயே அதிகம் விற்பனையான கார் மாடலாகவும் மாருதியின் டிசையர் கோலோச்சியது குறிப்பிடத்தக்கது. அதன்படி, கடந்த ஏப்ரல் மாதத்தில் 23 ஆயிரத்து 580 யூனிட்களும், கடந்த 2026 நிதியாண்டில் 2 லட்சத்து 29 ஆயிரத்து 130 யூனிட்களும் விற்பனையாகின. இந்த தரவுகளானது உள்ளூரில் எஸ்யுவி கார்களின் ஆதிக்கம் தொடர்ந்து அதிகரித்து வந்தாலும், பெரிய அளவிலான நபர்கள் இன்னும் டிசையர் போன்ற செடான்களை நம்புவதை உணர்த்துகிறது.
டிசையரை மக்கள் விரும்புவது ஏன்?
விற்பனையில் ஆதிக்கம் செலுத்தும் டிசையரானது ரூ.6.26 லட்சம் தொடங்கி ரூ.10.65 லட்சம் (எக்ஸ் - ஷோரூம்) என்ற எளிதில் அணுகக் கூடிய விலை வரம்பில் கிடைக்கிறது. எளிமையாக கையாளும் முறை, குறைந்த பராமரிப்பு செலவு மற்றும் வலுவான எரிபொருள் செயல்திறன் ஆகியவற்றால் பொதுமக்கள் டிசையர் கார் மாடலை விரும்பி வாங்குகிறார்கள். மாருதி நிறுவனம் நாட்டின் மிகப்பெரிய சர்வீஸ் நெட்வொர்க்கை கொண்டிருப்பதால், உதிரி பாகங்கள் மலிவாக கிடைக்கும். எந்த இடத்திலும் மெக்கானிக்கின் உதவியையும் பெற முடியும். அனைத்து வேரியண்ட்களிலும் 6 ஏர் பேக்குகளை பெற்று தேசிய மற்றும் சர்வதேச பாதுகாப்பு பரிசோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. பயன்பாட்டிற்கு பிறகு விற்பனை செய்தாலும், நல்ல ரீசேல் மதிப்பினையும் கொண்டுள்ளது.
டிசையரின் 33 கி.மீ., மைலேஜ் - அம்சங்கள், வசதிகள்
பெட்ரோல் இன்ஜின் உடன் மேனுவல் மற்றும் ஆட்டோமோடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. சிஎன்ஜி எடிஷனில் மேனுவல் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்படுகிறது. பெட்ரோல் எடிஷன் லிட்டருக்கு 25.71 கிலோ மீட்டரும், சிஎன்ஜி எடிஷன் கிலோவிற்கு 33.73 கிலோ மீட்டரும் மைலேஜ் வழங்குவதாக மாருதி நிறுவனம் அறிவித்துள்ளது. அதிகரித்து வரும் எரிபொருட்களின் விலைக்கு மத்தியில், டிசையரின் சிஎன்ஜி எடிஷன் வழங்கும் 33 கிலோ மீட்டர் மைலேஜ் என்பது மிகப்பெரிய வரப்பிரசாதமாகும்.

வெளிப்புறத்தில் எல்இடி க்ரிஷ்டல் விசியன் முகப்பு விளக்குகள், எல்டி பகல் நேரங்களில் ஒளிரும் விளக்குள், எலெக்ட்ரிக் சன்ரூஃப் மற்றும் ஷார்க் ஃபின் ஆண்டென்னா வழங்கப்பட்டுள்ளன. உட்புறத்தில் டூயல் டோன் இன்டீரியர்கள் உயரத்தை அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஓட்டுனர் இருக்கை, லெதர்ட் வ்ராப்ட் ஸ்டியரிங் வீல், ப்ளூடூத் கனெக்டிவிட்டி மற்றும் ஆடியோ கண்ட்ரோல்களுடன் கூடிய 9 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் இடம்பெற்றுள்ளன. பயணத்தை சொகுசாக மாற்றுவதற்காக ஆட்டோமேடிக் க்ளைமேட் கன்ட்ரோல், இன்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப் பட்டன் உள்ளிட்டவடையும் சேர்க்கப்பட்டுள்ளன. பாதுகாப்பிற்காக எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி ப்ரோக்ராம், ஹில் ஹோல்ட் கன்ட்ரோல் EBD உடன் கூடிய ABS மற்றும் ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்களும் உள்ளன.
மே மாத விற்பனையில் அசத்திய டாப் 10 மாடல்கள்
இந்த பட்டியலில் எஸ்யுவிக்களை காட்டிலும் மாருதி தரப்பில் விற்பனை செய்யப்படும் பல பட்ஜெட் மாடல்களே ஆதிக்கம் செலுத்தியுள்ளன.
| கார் மாடல் | மே மாதம் விற்பனையான யூனிட்கள் |
| மாருதி சுசூகி டிசையர் | 24,546 |
| மாருதி சுசூகி ஃப்ரான்க்ஸ் | 20,686 |
| மாருதி சுசூகி எர்டிகா | 20,350 |
| டாடா பஞ்ச் | 20,208 |
| டாடா நெக்ஸான் | 19,100 |
| மாருதி சுசூகி பலேனோ | 18,396 |
| மாருதி சுசூகி வேகன் ஆர் | 18,076 |
| மாருதி சுசூகி ஸ்விஃப்ட் | 17,519 |
| மஹிந்த்ரா ஸ்கார்ப்பியோ | 15,774 |
| ஹுண்டாய் க்ரேட்டா | 15,235 |
Before You Go
Tirupati laddu to ayodhya: அயோத்தி ராமருக்கு ஏழுமலையானின் GIFT! | Ayodhya Ram Temple | ttd
ட்ரெண்டிங் செய்திகள்






















