Maruti Suzuki Car Sale Sept 2025: மாருதி சுசூகி நிறுவனம் இதுவரை இல்லாத அளவில் கடந்த செப்டம்பர் மாதத்தில், வெளிநாடுகளுக்கு கார்களை ஏற்றுமதி செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
மாருதி சுசூகி கார் விற்பனை அசத்தல்:
நாடு முழுவதும் கடந்த செப்டம்பர் 22ம் தேடி ஜிஎஸ்டி திருத்தம் அமலுக்கு வந்தது. இதனால் செடான் மற்றும் ஹேட்ச்பேக் போன்ற கார் மாடல்களின் விலை, கணிசமாக குறைந்தது. இது முதல்முறையாக கார் வாங்குபவர்களுக்கும், புதிய கார வாங்க விரும்பியவர்களுக்கும் பெரும் ஊக்கமாக அமைந்தது. அதன் விளைவாக நாட்டின் மிகப்பெரிய கார் உற்பத்தி மற்றும் மலிவு விலை கார்களை வழங்கக் கூடிய நிறுவனமான மாருதி சுசூகி, கடந்த மாதத்தில் ஒரு லட்சத்து 89 ஆயிரத்து 665 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் பதிவான ஒரு லட்சத்து 84 ஆயிரத்து 665 யூனிட்களை காட்டிலும், 2.7 சதவிகிதம் அதிகமாகும்.
உள்நாட்டு, வெளிநாட்டு விற்பனை விவரம்:
உள்ளூர் சந்தையில் கடந்த செப்டம்பர் மாதத்தில் ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 820 மாருதி கார்கள் விற்பனையாகியுள்ளன. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் பதிவான ஒரு லட்சத்து 44 ஆயிரத்து 962 யூனிட்களுடன் ஒப்பிடுகையில் 8.4 சதவிகிதம் அதிகமாகும். உள்நாட்டு விற்பனை சரிவை கண்டாலும், வெளிநாடுகளுக்கான ஏற்றுமதி என்பது இதுவரை இல்லாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அதன்படி, கடந்த மாதம் 42 ஆயிரத்து 204 யூனிட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டின் இதேகாலகட்டத்தில் இந்த ஏற்றுமதி எண்ணிக்கை 27 ஆயிரத்து 728 ஆகவும், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 36 ஆயிரத்து 538 யூனிட்களாகவும் பதிவானது குறிப்பிடத்தக்கது.
ஜிஎஸ்டி கொடுத்த பூஸ்ட்
நவராத்திரி விழாக்காலத்தின் முதல் 8 நாட்களிலேயே மாருதி நிறுவனம், இதுவரை இல்லாத உச்சமாக ஒரு லட்சத்து 65 ஆயிரம் யூனிட்களை டெலிவெரி செய்துள்ளது. இது ஜிஎஸ்டி மூலம் குறைந்த விலையால் ஏற்பட்ட, கார் வாங்கும் திறன் அதிகரிப்பை காட்டுகிறது. நிறுவனத்தின் மொத்த விற்பனையில் யூடிலிட்டி வெஹைகிள் மட்டுமே, 48 ஆயிரத்து 695 யூனிட்கள் அடங்கும். அவற்றில் ஃப்ராங்க்ஸ், ப்ரேஸ்ஸா, விக்டோரிஸ், க்ராண்ட் விட்டாரா, ஜிம்னி, எர்டிகா, XL6 மற்றும் இன்விக்டோ ஆகியவை அடங்கும். மினி மற்றும் காம்பேக்ட் கார்கள் பிரிவில் 74 ஆயிரத்து 90 யூனிட்கள் விற்பனையாகியுள்ளன. இலகுரக கனிம வாகனங்கள் பிரிவில் 2 ஆயிரத்து 891 யூனிட்கள் விற்பனையாகியுள்ளன. இதன் மூலம், வழக்கம்போல் கடந்த செப்டம்பர் மாதத்திலும் அதிக கார் விற்பனை செய்த நிறுவனங்களின் பட்டியலில் மாருதி சுசூகி முதலிடம் பெற்றுள்ளது.
மாருதி அடுத்து வெளியிட உள்ள கார்கள்:
மாருதி நிறுவனம் தனது எஸ்யுவி போர்ட்ஃபோலியோவை வலுவாக விரிவுப்படுத்த, 3 கார் மாடல்களை அடுத்தடுத்து சந்தைப்படுத்த முடிவு செய்துள்ளது. அதில் விடாரா எலெக்ட்ரிக் எஸ்யுவி, வலுவான ஹைப்ரிட் அம்சம் கொண்ட ஃப்ராங்க்ஸ் மற்றும் ப்ரீமியம் 3 வரிசை இருக்கை வசதிகளை கொண்ட புதிய எஸ்யுவி ஆகியவை தயாராகி வருகின்றன.
மாருதி e Vitara 49kWh மற்றும் 61kWh பேட்டரி பேக்குகளுடன், அதிகபட்சமாக 500 கிமீக்கு மேல் ரேஞ்ச் அளிக்கும் என கூறப்படுகிறது. இதில் லெவல்-2 ADAS, காற்றோட்டமான முன் இருக்கைகள், பனோரமிக் சன்ரூஃப், பவர்ட் ஓட்டுநர் இருக்கை, சாய்வு மற்றும் பிரிக்கப்பட்ட பின்புற இருக்கைகள் என பல அம்சங்கள் இதில் இடம்பெறக்கூடும்.
மாருதி ஃப்ராங்க்ஸ், வெகுஜன சந்தை சலுகைகளுக்காக உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட புதிய செலவு குறைந்த வலுவான ஹைப்ரிட் பவர்டிரெய்னைக் கொண்ட பிராண்டின் முதல் மாடலாக இருக்கும். கார் தயாரிப்பாளர் அதன் 1.2L, 3-சிலிண்டர் Z-சீரிஸ் பெட்ரோல் இன்ஜினை பயன்படுத்துகிறது.
4.5 மீட்டருக்கும் அதிகமான நீளம் கொண்ட ஒரு புதிய மாருதி பிரீமியம் எஸ்யூவியும் உருவாக்கத்தில் உள்ளது. இது கிராண்ட் விட்டாராவின் பவர்டிரெய்ன்கள் மற்றும் அம்சங்களை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கலாம். அறிமுகப்படுத்தப்பட்டதும், புதிய 7 இருக்கைகள் கொண்ட எஸ்யூவி ஹூண்டாய் அல்கசார், மஹிந்திரா எக்ஸ்யூவி700 மற்றும் டாடா சஃபாரி ஆகியவற்றுக்கு நேரடியாக போட்டியாக இருக்கும்.
Car loan Information:
Calculate Car Loan EMI