மாருதி சுசுகி நிறுவனம் புதிய வடிவமைப்பு, நவீன வசதிகள் மற்றும் புதிய நிறங்களுடன் தனது பிரிமீயம் ஹேட்ச்பேக் காரான பலேனோவின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை சமீபத்தில் வெளியிட்டது. வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள இக்காருக்கு, அறிமுகமான சில நாட்களிலேயே 25,000-க்கும் மேற்பட்ட புக்கிங்குகள் குவிந்தன. சந்தையில் ஏற்கனவே உள்ள டாடா அல்ட்ராஸ், ஹூண்டாய் i20 ஆகிய கார்களுடன் இது போட்டியிடுகிறது. இந்த மூன்றில் எது சிறந்தது எனப் பார்க்கலாம்.

Continues below advertisement

மாருதி பலேனோ

புதிய பலேனோவின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.6.35 லட்சம் முதல் ரூ.9.49 லட்சம் வரை உள்ளது. இதில் 90 PS பவர் மற்றும் 113 Nm டார்க் திறன் கொண்ட 1.2 லிட்டர் டியூயல்ஜெட் பெட்ரோல் இன்ஜின், 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் உடன் வருகிறது. 9-இன்ச் டச்ஸ்கிரீன், ஆட்டோமேட்டிக் எல்இடி ஹெட்லேம்ப், ரெயின் சென்சிங் வைப்பர், ஹெட்-அப் டிஸ்ப்ளே, 360 டிகிரி கேமரா, க்ரூஸ் கண்ட்ரோல், கனெக்டட் கார் தொழில்நுட்பம் ஆகியவை உள்ளன. பாதுகாப்பிற்கு 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் உள்ளது. மைலேஜில் முதலிடம் பிடிக்கும் இதன் மேனுவல் மாடல் 22.35 கி.மீ மற்றும் ஏஎம்டி மாடல் 22.94 கி.மீ மைலேஜ் தருகிறது. பட்ஜெட்டில் அதிக மைலேஜ், நம்பகத்தன்மை தேடுபவர்களுக்கு இது சிறந்தது.

Continues below advertisement

டாடா அல்ட்ராஸ்

இக்காரில் புதிதாக 6-ஸ்பீடு டிசிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் (ரூ.8.1 லட்சம் - ரூ.9.9 லட்சம்) வந்துள்ளது. 1.2 லிட்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் மற்றும் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் தேர்வுகள் உள்ளன. குளோபல் என்சிஏபி சோதனையில் 5-ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் பெற்ற இந்த செக்மென்ட்டின் ஒரே கார் இதுதான். பாதுகாப்பிற்கு அதிக முன்னுரிமை அளிப்பவர்களுக்கு இது சரியான தேர்வு.

ஹூண்டாய் i20

இதன் விலை ரூ.7.04 லட்சம் முதல் ரூ.11.25 லட்சம் வரை உள்ளது. 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 120 PS பவர் தரும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்களுடன், மேனுவல், iMT, CVT மற்றும் 7-ஸ்பீடு டிசிடி கியர்பாக்ஸ் வசதிகள் உள்ளன. மற்ற இரண்டை விட இதன் கேபின் மற்றும் டேஷ்போர்டு மிகவும் பிரிமீயமாக இருக்கும். அதிக வசதிகள், பவர்ஃபுல் இன்ஜின், பிரிமீயம் தோற்றம் விரும்புபவர்கள் கூடுதல் தொகை கொடுத்து இதை வாங்கலாம்.

அல்ட்ராஸ் மற்றும் i20 டர்போ மாடல்கள், பலேனோவை விட சற்று குறைவான மைலேஜ் தந்தாலும், சிறப்பான பெர்ஃபார்மன்ஸ் மற்றும் டிரைவிங் அனுபவத்தை வழங்கும் என்று நம்பலாம். 


Car loan Information:

Calculate Car Loan EMI