Maruti Suzuki Year End Discounts: முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசூகி தனது பட்ஜெட் மாடல்களுக்கு சலுகைகளை அள்ளி வீசியுள்ளது.
மாருதி சுசூகி அரேனா கார்களுக்கு சலுகை:
மாருதி சுசூகி நிறுவனத்தின் அரேனா ஷோரூம்களில் விற்பனை செய்யப்படும் கார் மாடல்களுக்கு, டிசம்பர் மாதத்தில் கவர்ச்சிகரமான ஆண்டு இறுதி சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆண்டின் இறுதிக்குள் புதிய காரை வாங்குவதற்கான ஆசையை கொண்டிருப்பவர்களுக்கான வாய்ப்புகளை அதிகரிக்கும் நோக்கில் இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது. ப்ராண்டின் புதியதாக அறிமுகப்படுத்தப்பட்ட விக்டோரிஸ் இந்த பட்டியலில் இல்லாத நிலையில், மற்ற 9 கார்களுக்கும் வேரியண்ட் அடிப்படையில் சலுகைகள் இடம்பெற்றுள்ளன.
அதிகபட்ச சலுகை எந்த காருக்கு?
மாருதியின் அரேனா கார் மாடல்களுக்கு ஆண்டு இறுதியை ஒட்டி, 10 ஆயிரம் ரூபாய் தொடங்கி அதிகபட்சமாக 58 ஆயிரம் ரூபாய் வரை சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் அதிகபட்ச சலுகையானது பிரபல வேகன் ஆர் மாடலுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த சேமிப்பானது பணத்தள்ளுபடி எக்ஸ்சேஞ்ச் அல்லது ஸ்க்ரேப்பேஜ் போனஸ் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. மேலும் ஒரு சிறிய அடிஷனல் பலன்களும் வழங்கப்படுகின்றன. நடைமுறைக்கு உகந்த கேபின், எரிபொருள் செயல்திறன் மற்றும் வெறும் ரூ.5 லட்சம் என்ற எளிய அணுகல் விலை ஆகியவற்றின் மூலம், பட்ஜெட்டில் முதல்முறையாக கார் வாங்கும் நபர்களுக்கு பிரதான தேர்வாக தொடர்கிறது.
மாருதி கார்களுக்கான சலுகை:
| கார் மாடல் | டிசம்பர் மாத தள்ளுபடி |
| வேகன்ஆர் | ரூ.58,100 |
| ஸ்விஃப்ட் | ரூ.55,00 |
| ஆல்டோ கே10 | ரூ.52,500 |
| எஸ்-ப்ரெஸ்ஸோ | ரூ.52,500 |
| செலெரியோ | ரூ.52,500 |
| ஈகோ | ரூ.52,500 |
| ப்ரேஸ்ஸா | ரூ.40,000 |
| டிசையர் | ரூ.12,500 |
| எர்டிகா | ரூ.10,000 |
ஸ்விஃப்ட், ஆல்டோ கார்களின் நிலை:
ஸ்விஃப்ட் கார் மாடலுக்கு பெட்ரோல் மற்றும் பிற வேரியண்ட்களுக்கு ரூ.55 ஆயிரம் வரை சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காரானது ஸ்போர்ட்டி டிசைன், நம்பகமான செயல்பாடு காரணமாக இளம் வாடிக்கையாளர்களிடையே இந்த கார் கவனம் ஈர்த்துள்ளது. இதோடு சேர்த்து ஆல்டோ கே10, எஸ்-பிரெஸ்ஸொ மற்றும் செலேரியோ ஆகிய கார் மாடல்களுக்கு 52 ஆயிரத்து 500 ரூபாய் வரை பணப்பலன்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாருதி சுசூகி ஈகோவும் இந்தப் பட்டியலில் இணைந்து அதிகபட்சமாக ரூ.52,500 வரை சலுகைகளை பெற்றுள்ளது. இது நடைமுறைக்கு ஏற்ற மக்கள்-பயணிகள் மற்றும் பயன்பாட்டுப் பிரிவில் ஒரு நல்ல தேர்வாக அமைகிறது.
டிசையர் நிலை என்ன?
டிசையர் செடான் அதிக எக்ஸ்சேஞ்ச் அல்லது ஸ்க்ராராப்பேஜ் போனஸைப் பெறவில்லை என்றாலும், டீலர்-நிலை தள்ளுபடி ரூ.12,500 வரை வழங்கப்படுகிறது. நாட்டின் அதிகம் விற்பனையாகும் செடானான இந்த கார் அண்மையில் தான் மிகப்பெரிய அப்க்ரேடை பெற்று பயனர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது. பாதுகாப்பு பரிசோதனையிலும் ஐந்து நட்சத்திரங்களைப் பெற்றதால் மதிப்பும் அதிகரித்தது.
எஸ்யுவிக்களுக்கான சலுகைகள்:
காம்பேக்ட் எஸ்யுவி பிரிவில் மாருதி சுசூகி ப்ரேஸ்ஸா இப்போது ரூ.40,000 வரை சலுகைகளுடன் கிடைக்கிறது, இதில் ரொக்க சலுகைகள் மற்றும் எக்சேஞ்ச் அல்லது ஸ்க்ராப்பேஜ் போனஸ்கள் அடங்கும். இறுதியாக, எர்டிகா MPV ரூ.10,000 வரை நேரடியான ரொக்க தள்ளுபடியுடன் கிடைக்கிறது. தள்ளுபடிகள் நகரம் மற்றும் டீலர் ஸ்டாக்கைப் பொறுத்து மாறுபடலாம் என்று மாருதி சுசூகி குறிப்பிடுகிறது. எனவே வாங்குபவர்கள் தங்கள் அருகிலுள்ள ஷோரூமை அணுகி விவரங்களை கேட்டறியலாம்.
Car loan Information:
Calculate Car Loan EMI