மாருதி சுசுகி நிறுவனம் தனது கார்களுக்கு தீபாவளி கால சலுகை வழங்கியுள்ளது. எந்தெந்த கார்களுக்கு என்னென்ன சலுகைகள் என்பதை கீழே விரிவாக காணலாம்?

Continues below advertisement


1. Alto K10:




மாருதி சுசுகி நிறுவனத்தின் ஹேட்ச்பேக் கார் Alto K10 கார் ஆகும். இந்த காருக்கு தீபாவளி கால சலுகையாக ரூபாய் 52 ஆயிரத்து 500 தள்ளுபடி அளித்துள்ளனர். இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 4.35 லட்சம் ஆகும். பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி-யில் ஓடும் ஆற்றல் கொண்டது ஆகும். 


2. Celerio:


மாருதி சுசுகி நிறுவனத்தின் மற்றொரு ஹேட்ச்பேக் கார் Celerio ஆகும். இந்த காருக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரூபாய் 52 ஆயிரத்து 500 வழங்கப்பட்டுள்ளது. பெட்ரோல் மற்றும் சிஎன்ஜியில் ஓடும் ஆற்றல் கொண்டது. இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 5.57 லட்சம் ஆகும். தள்ளுபடி காரணமாக ரூபாய் 5 லட்சமாக இதன் தொடக்கவிலை குறைந்துள்ளது.


3. S-Presso:




 


மாருதி சுசுகியின் S-Presso கார் ஹேட்ச்பேக் கார்களில் தனித்துவமானது. இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 3.49 லட்சம் ஆகும். இந்தியாவிலே விலை குறைந்த காரான இந்த காருக்கு தீபாவளி பண்டிகைக்கு ரூபாய் 47 ஆயிரத்து 500 ஆகும். இந்த கார் 5 கியர்களை கொண்ட சிறிய ரக கார் ஆகும். நெருக்கடியான நகரங்களில் ஓட்டுவதற்கு ஏற்ற கார் இதுவாகும். 


4. WagonR:


நகர்ப்புறங்களிலும், நெருக்கடி மிகுந்த சாலைகளிலும் ஓட்டுவதற்கு ஏற்ற கார் இந்த WagonR ஆகும். இந்த காருக்கு தீபாவளி பண்டிகை சலுகையாக ரூபாய் 57 ஆயிரத்து 500 விலையை குறைந்துள்ளது. இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 4.98 லட்சம் ஆகும். இந்த கார் 5 பேர் அமர்ந்து பயணிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.  35 லிட்டர் பெட்ரோல் டேங்க் கொண்டது. 




5. Swift:


மாருதி சுசுகியின் மிகவும் வெற்றிகரமான கார் Swift ஆகும். இந்தியாவில் வெற்றிகரமான கார்களில் ஒன்று இந்த கார் ஆகும். இந்த Swift காருக்கு தீபாவளி கால சலுகையாக ரூபாய் 48 ஆயிரத்து 750 குறைக்கப்பட்டுள்ளது. இந்த கார் தொடக்க விலை ரூபாய் 5.79 லட்சம் ஆகும். 1197 சிசி திறன் கொண்ட கார் ஆகும்.


6. Dzire:


மாருதி சுசுகி காரின் மற்றொரு வெற்றிகரமான படைப்பு Dzire கார் ஆகும். இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 6.25 லட்சம் ஆகும். மொத்தம் 9 வேரியண்டகளை கொண்ட இந்த காருக்கு ரூபாய் 2 ஆயிரத்து 500 தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது. 1197 சிசி திறன் கொண்டது இந்த கார். பெட்ரோல் மற்றும் சிஎன்ஜியில் ஓடும் ஆற்றல் கொண்டது இந்த கார். 


7. Brezza:


மாருதி சுசுகியின் தொடக்க விலை ரூபாய் 8.26 லட்சம் ஆகும். இந்த காருக்கு தீபாவளி கால சலுகையாக ரூபாய் 35 ஆயிரம்  வழங்கியுள்ளனர். இந்த கார் 1462 சிசி திறன் கொண்டது. பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி-யில் ஓடும் ஆற்றல் கொண்டது ஆகும்.  இது எஸ்யூவி ரக கார் ஆகும். 


8. Eeco:


மாருதி சுசுகியின் Eeco காருக்கு ரூபாய் தீபாவளி கால பண்டிகையாக இந்த காருக்கு ரூபாய் 42 ஆயிரத்து 500 தள்ளுபடியாக வழங்கப்பட்டுள்ளது. இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 5.21 லட்சம் ஆகும். 5 சீட்டர்களை கொண்ட இந்த கார் சிஎன்ஜி-யிலும் ஓடும் ஆற்றல் கொண்டது ஆகும்.


Car loan Information:

Calculate Car Loan EMI