Maruti Suzuki Car Offers: 2.15 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி! Baleno வரை Grand Vitara எந்த காருக்கு எவ்வளவு?
மாருதி சுசுகி நிறுவனம் தனது இக்னிஸ், பலேனா உள்ளிட்ட நெக்ஸா ரக கார்களுக்கு ஜுன் மாத தள்ளுபடியை அறிவித்துள்ளது.

மாருதி சுசுகி நிறுவனம் இந்தியாவின் மிகவும் முக்கியமான கார் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனங்களில் ஒன்றாகும். இவர்கள் தங்களது கார்களுக்கு மாதந்தோறும் தள்ளுபடியை அளித்து வருகின்றனர். இந்த சூழலில், இந்த ஜுன் மாதத்திற்கும் தனது கார்களுக்கு தள்ளுபடியை அறிவித்துள்ளது.
எவ்வளவு தள்ளுபடி?
எந்தெந்த காருக்கு எவ்வளவு தள்ளுபடி? என்பதை கீழே விரிவாக காணலாம்.
1. Maruti Ignis - ரூபாய் 45 ஆயிரம்
2. Maruti Baleno - ரூபாய் 40 ஆயிரம்
3. Maruti Fronx - ரூபாய் 25 ஆயிரம்
4. Maruti Grand Vitara - ரூபாய் 90 ஆயிரம் வரை
5. Maruti XL6 - ரூபாய் 45 ஆயிரம்
6. Maruti Jimny - ரூபாய் 45 ஆயிரம்
7. Maruti Invicto - ரூபாய் 2.15 லட்சம்
1. Maruti Ignis:
மாருதி சுசுகி நிறுவனத்தின் இந்த Maruti Ignis கார் ரூபாய் 6.45 லட்சம் ஆகும். 1.2 லிட்டர் நான்கு சிலிண்டர் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த காரின் டாப் வேரியண்ட் ரூபாய் 9.68 லட்சம் ஆகும். இந்த காருக்கு இந்த மாதம் ரூபாய் 45 ஆயிரம் தள்ளுபடி அளித்துள்ளனர்.
2.Maruti Baleno:
மாருதி நிறுவனத்தின் மிகவும் புகழ்பெற்ற கார் இந்த Maruti Baleno. இந்த காருக்கு ரூபாய் 40 ஆயிரம் தள்ளுபடி அளித்துள்ளனர். இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 7.20 லட்சம் ஆகும். இந்த காரின் டாப் வேரியண்ட் ரூபாய் 10.82 லட்சம் ஆகும். மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக்கில் இயங்கும் இந்த கார் 23 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜின் பொருத்தப்பட்டது.
3. Maruti Fronx:
22 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கும் இந்த Maruti Fronx காருக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 8.20 லட்சம் ஆகும். இந்த காரின் டாப் வேரியண்ட் ரூபாய் 14.83 லட்சம் ஆகும். இந்த காருக்கு ரூபாய் 25 ஆயிரம் தள்ளுபடி அளித்துள்ளனர். 1.0 லிட்டர் டர்போ எஞ்ஜின் பொருத்தப்பட்ட கார் இந்த கார் ஆகும்.
4. Maruti Grand Vitara:
மாருதி நிறுவனத்தின் மிகவும் முக்கியமான கார் இந்த Maruti Grand Vitara. இந்த காருக்கு ஜுன் மாத தள்ளுபடியாக ஜீரோ சாலை வரி ( 1.85 லட்சம் வரை) ரூபாய் 90 ஆயிரம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த காரின் அடிப்பட விலை ரூபாய் 13.41 லட்சம். இந்த காரின் டாப் வேரியண்ட் ரூபாய் 24.22 லட்சம் ஆகும்.
5. Maruti XL6:
மாருதி நிறுவனத்தின் Maruti XL6 காருக்கு ரூபாய் 45 ஆயிரம் தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது. இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 14.34 லட்சம் ஆகும். இந்த காரின் டாப் வேரியண்ட் ரூபாய் 17.97 லட்சம் ஆகும். 1.5 லிட்டர் பெட்ரோல் ஹைப்ரிட் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 9 வேரியண்ட் உள்ள இந்த காரில் உள்ளது.
6. Maruti Jimny:
மாருதி சுசுகி நிறுவனத்தின் Maruti Jimny காரின் தொடக்க விலை ரூபாய் 15.32 லட்சம் ஆகும். இந்த காரின் டாப் வேரியண்ட் ரூபாய் 17.93 லட்சம் ஆகும். இந்த காருக்கு 45 ஆயிரம் வரை தள்ளுபடி அளிக்கப்படுகிறது. இந்த காரில் மொத்தம் 6 வேரியண்ட் உள்ளது. மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் வேரியண்ட் உள்ளது.
7.Maruti Invicto:
மாருதியின் இந்த Maruti Invicto காருக்கு ரூபாய் 2.15 லட்சம் தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது. இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 31.56 லட்சம் ஆகும். இந்த காரின் டாப் வேரியண்ட் ரூபாய் 36.10 லட்சம் ஆகும். எம்பிவி காரான இந்த காரில் 3 வேரியண்ட் உள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்






















