ஒவ்வொரு மாதமும் கார் நிறுவனங்கள் தள்ளுபடி தருவது வழக்கமான ஒன்றாகும். இந்த மாதம் நவராத்திரி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையடுத்து, மாருதி சுசுகி தனது முக்கிய படைப்புகளுக்கு தள்ளுபடி வழங்கி அறிவித்துள்ளது. என்னென்ன வேரியண்ட்களுக்கு எவ்வளவு தள்ளுபடி என்பதை காணலாம்?
1. Ignis:
அ) Ignis Petrol Manual - ரூபாய் 57 ஆயிரத்து 500
ஆ) Ignis Petrol Auto - ரூபாய் 62 ஆயிரத்து 500
மாருதி சுசுகியின் Ignis Ignis Petrol மேனுவல் காருக்கு ரூபாய் 25 ஆயிரம் ரொக்கத் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இதர சலுகைகைகள் ரூபாய் 32 ஆயிரத்து 500 வரை வழங்கப்பட்டுள்ளது. மொத்தமாக ரூபாய் 57 ஆயிரத்து 500 வரை வழங்கப்படுகிறது,
Ignis Petrol ஆட்டோமெட்டிக் மாடல் காருக்கு ரூபாய் 30 ஆயிரம் ரொக்கத் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. 32 ஆயிரத்து 500 வரை இதர சலுகைகள் வழங்கப்படுகிறது. மொத்தமாக இந்த காருக்கு ரூபாய் 62 ஆயிரத்து 500 வழங்கப்படுகிறது.
2. Baleno:
அ) Baleno Petrol Manual - ரூ.67, 500
ஆ) Baleno Petrol Auto - ரூ.72,500
இ) Baleno CNG - ரூ.67,500
மாருதி சுசுகியின் வெற்றிகரமான படைப்பு இந்த Baleno கார் ஆகும். Baleno பெட்ரோல் மேனுவல் மாடலுக்கு ரொக்கமாக ரூபாய் 40 ஆயிரம் தள்ளுபடி செய்துள்ளனர். இதர சலுகையாக ரூபாய் 27 ஆயிரத்து 500 செய்துள்ளனர். மொத்தமாக ரூபாய் 67 ஆயிரத்து 500 தள்ளுபடி அளித்துள்ளனர்.
பெட்ரோலில் இயங்கும் Baleno ஆட்டோமெட்டிக் மாடலுக்கு ரொக்கமாக ரூபாய் 45 ஆயிரம் தள்ளுபடி செய்துள்ளனர். இதர தள்ளுபடியாக ரூபாய் 27 ஆயிரத்து 500 அளித்துள்ளனர். மொத்தமாக ரூபாய் 72 ஆயிரத்து 500 அளித்துள்ளனர்.
சிஎன்ஜியில் இயங்கும் Baleno காருக்கு ரொக்கமாக ரூபாய் 40 ஆயிரம் தள்ளுபடி அளித்துள்ளனர். இதர சலுகையாக ரூபாய் 27 ஆயிரத்து 500 என மொத்தம் ரூபாய் 67 ஆயிரத்து 500 அளித்துள்ளனர்.
3) Pre-Facelift Fronx:
அ) Pre-Facelift Fronx 1.2L Petrol Manual - ரூ.25,500
ஆ) Pre-Facelift Fronx 1.2L Petrol Auto - ரூ.30,000
இ) Pre-Facelift Fronx CNG - ரூ.15,000
ஈ) New Fronx 1.2L Petrol Manual/Auto - ரூ.15,000
உ) New Fronx 1.0L Petrol Manual/Auto - ரூ.30,000
ஊ) New Fronx CNG - ரூ.15,000
பெட்ரோலில் ஓடும் Pre-Facelift Fronx 1.2L மேனுவல் காருக்கு ரொக்கத் தள்ளுபடியாக ரூபாய் 10 ஆயிரம் அளித்துள்ளனர். இதர சலுகையாக ரூபாய் 15 ஆயிரம் அளித்துள்ளனர். மொத்தமாக ரூபாய் 25 ஆயிரம் தள்ளுபடியாக அளித்துள்ளனர்.
Pre-Facelift Fronx 1.2L Petrol மேனுவல் காருக்கு ரொக்கமாக ரூபாய் 15 ஆயிரமும், இதர சலுகையாக ரூபாய் 15 ஆயிரமும் என மொத்தமாக ரூபாய் 30 ஆயிரம் தள்ளுபடி அளித்துள்ளனர். Pre-Facelift Fronx 1.0L Petrol மாடல் கார் மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் வேரியண்ட்களுக்கு ரொக்கமாக ரூபாய் 55 ஆயிரம் தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது. இதர சலுகையாக ரூபாய் 15 ஆயிரம் அளித்துள்ளனர். மொத்தமாக ரூபாய் 70 ஆயிரம் அளித்துள்ளனர்.
சிஎன்ஜியில் இயங்கும் Pre-Facelift Fronx மாடலுக்கு ரூபாய் 15 ஆயிரம் மொத்த தள்ளுபடி ஆகும். New Fronx 1.0L பெட்ரோலில் ஓடும் கார் மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் வேரியண்ட்களுக்கு ரொக்கமாக ரூபாய் 15 ஆயிரமும், இதர சலுகையாக ரூபாய் 15 ஆயிரமும் என மொத்தமாக ரூபாய் 30 ஆயிரம் தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது. சிஎன்ஜியில் ஓடும் New Fronx காருக்கு மொத்த சலுகையாக ரூபாய் 15 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.
4. Jimny:
அ) Jimny Alpha Manual/Auto - ரூ.1 லட்சம்
Jimny தனது ஆல்ஃபா வேரியண்ட் காரில் மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் இரண்டு கார்களுக்கும் ரூபாய் 1 லட்சம் வரை தள்ளுபடி அளித்துள்ளது. இதை ரொக்கத் தள்ளுபடியாகவே அளித்துள்ளது.
5. Grand Vitara:
அ) Grand Vitara 1.5L Petrol Sigma - ரூ.64, 100
ஆ) Grand Vitara 1.5L Petrol All Variants - ரூ.89,100
இ) Grand Vitara 1.5L AWD - ரூ.84,100
ஈ) Grand Vitara CNG - ரூ.49,100
உ) Grand Vitara 1.5L Strong Hybrid - ரூ.1.29 லட்சம்
Grand Vitara 1.5L ெபட்ரோல் எஞ்ஜின் கொண்ட Sigma வேரியண்ட்க்கு ரொக்கமாக ரூபாய் 25 ஆயிரமும், இதர தள்ளுபடியாக ரூ.39 ஆயிரத்து 100ம் அளித்துள்ளனர். மொத்தமாக ரூபாய் 64 ஆயிரத்து 100 அளிக்கப்பட்டுள்ளது.
Grand Vitara 1.5L Petrol காரின் அனைத்து வேரியண்ட்களுக்கும் ரொக்கத் தள்ளுபடியாக ரூபாய் 40 ஆயிரமும், இதர தள்ளுபடியாக ரூபாய் 49,100 என மொத்தமாக ரூபாய் 89 ஆயிரத்து 100 அளிக்கப்பட்டுள்ளது.
Grand Vitara 1.5L Strong Hybrid வேரியண்ட்க்கு ரொக்கத் தள்ளுபடியாக ரூபாய் 60 ஆயிரமும், இதர தள்ளுபடியாக ரூ.69 ஆயிரத்து 100 என மொத்தமாக ரூபாய் 1.29 லட்சம் அளிக்கப்பட்டுள்ளது.
Grand Vitara 1.5L AWD மாடலுக்கு ரொக்கமாக ரூபாய் 35 ஆயிரமும், இதர சலுகையாக ரூபாய் 49 ஆயிரத்து 100ம் அளிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ரூபாய் 84 ஆயிரத்து 100 வழங்கப்பட்டுள்ளது. சிஎன்ஜியில் இயங்கும் Grand Vitara காருக்கு ரொக்கத் தள்ளுபடியாக ரூபாய் 10 ஆயிரமும், இதர சலுகையாக ரூபாய் 39 ஆயிரத்து 100 எனவும் மொத்தமாக ரூபாய் 49 ஆயிரத்து 100ம் வழங்கப்பட்டுள்ளது.
6. XL6:
XL6 காரின் அனைத்து வேரியண்ட்களுக்கும் இதர சலுகையாக ரூபாய் 25 ஆயிரம் வரை என மொத்தமாக 25 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி அளித்துள்ளனர்.
7.Invicto:
அ) Invicto Zeta+ 7STR/8STR - ரூ.1.15 லட்சம்
ஆ) Invicto Alpha+ 7STR - ரூ.1.40 லட்சம்
Invicto Zeta+ 7STR/8STR காருக்கு ரொக்கத் தள்ளுபடி அளிக்கப்படவில்லை. இதர சலுகையாக ரூபாய் 1.15 லட்சம் வரை தள்ளுபடி அளித்துள்ளனர். மொத்தமாக ரூபாய் 1.15 லட்சம் வரை அளிக்கின்றனர்.
Invicto Alpha+ 7STR மாடல் காருக்கு ரூபாய் 20 ஆயிரம் வரை ரொக்கத் தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது. இதர தள்ளுபடியாக ரூபாய் 1.15 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. மொத்தமாக ரூபாய் 1.40 லட்சம் அளிக்கப்பட்டுள்ளது.
8. Ciaz:
Ciaz காரின் அனைத்து வேரியண்ட்களுக்கும் ரொக்கமாக ரூபாய் 10 ஆயிரமும், இதர சலுகையாக ரூபாய் 30 ஆயிரமும் என மொத்தமாக ரூபாய் 40 ஆயிரமும் தள்ளுபடி அளித்துள்ளனர்.
இந்த சலுகைகள் வரும் 20ம் தேதி வரை மட்டுமே ஆகும். இன்னும் 5 நாட்கள் மட்டுமே இந்த சலுகைகள் உள்ளது.
Car loan Information:
Calculate Car Loan EMI